இலதா உசெண்டி
இலதா உசெண்டி (Lata Usendi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1974ஆம் ஆண்டு மே மாதம் முதல் தேதியில் இவர் பிறந்தார். சத்தீசுகர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் பாரதிய சனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். சத்தீசுகர் மாநிலத்தில் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக இருந்தார். பாரதிய சனதா கட்சியின் துணைத் தலைவராகச் செயல்படுகிறார். மகளிர் ஆணையம் மற்றும் சத்தீசுகர் மாநில விநியோகக் கழகத்தின் தலைவராகவும் இருந்தார்.
இலதா உசெண்டி Lata Usendi | |
|---|---|
| சத்தீசுகர் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 3 திசம்பர் 2023 | |
| முன்னையவர் | மோகன் மார்கம் |
| தொகுதி | கொண்டகவான் |
| பதவியில் 2003 – 8 திசம்பர் 2013 | |
| முன்னையவர் | சங்கர் சோதி |
| பின்னவர் | மோகன் மார்கம் |
| தொகுதி | கொண்டகவான் |
| துணைத் தலைவர், பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர்கள் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 29 சூலை 2023 | |
| குடியரசுத் தலைவர் | இயீ.பி. நட்டா |
| பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர், சமூக நலத்துறை அமைச்சர், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் சத்தீசுகர் அரசு | |
| பதவியில் 22 திசம்பர் 2008 – 12 திசம்பர் 2013 | |
| முன்னையவர் | ரேணுகா சிங் |
| பின்னவர் | இராம்சிலா சாகு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | இலதா உசெண்டி 1 மே 1974 கொண்டகவான், சத்தீசுகர் |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பாரதிய ஜனதா கட்சி |
| பெற்றோர் |
|
| வாழிடம் | சர்கிபால் பரா, கொண்டகவான் |
| கல்வி | இளங்கலை |
| பணி | வேளாண்மை, அரசியல்வாதி |
தற்போது கொண்டகவான் நகரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1][2] மேலும் பசுத்தர் பிரதிகரன் அமைப்பின் துணைத் தலைவராகப் பணியாற்றுகிறார்.
இலதா உசேண்டி பாரதிய சனதா கட்சியின் பிரதேச அமைச்சராக தனது அரசியலைத் தொடங்கி பின்னர் கவுன்சிலரானார். 2003ஆம் ஆண்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அமைச்சரானார். 2008 ஆம் ஆண்டும் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார். ஆனால் 2013 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தார்.
இலதா உசேண்டி 1998ஆம் ஆண்டு கான்கர் பாரதிய சனதா மண்டல அமைச்சராக இருந்தார். 1999ஆம் ஆண்டு, கொண்டகான் நகராட்சி மருத்துவமனை பகுதியிலிருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில், இவர் கான்கர் மாவட்டத்தில் பாரதிய சனதா கட்சியின் மகளிர் அணிக்கு மாவட்டத் தலைவரானார். 2002 ஆம் ஆண்டில், கொண்டகான் பாரதிய சனதா கட்சி மகளிர் பிரிவுக்கு மாவட்டத் தலைவரானார். 2003 ஆம் ஆண்டு, இக்கட்சியின் சார்பில் கொண்டகான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004 ஆம் ஆண்டு, பாரதிய சனதா இளைஞர் அணிக்கு தேசிய துணைத் தலைவரானார். மாவட்ட பாரதிய சனதா மகளிர் பிரிவின் பொதுச் செயலாளராகவும் இருந்தார். 2004 ஆம் ஆண்டு, முப்பத்தி ஆறாவது சட்டமன்றத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலக் குழுவின் தலைவராக இருந்தார். இது தவிர, பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலன் தொடர்பான குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Sarkaritel.com, : Chhattisgarh Government, Council of Ministers". Sarkaritel.com. Retrieved 2013-01-06.
- ↑ "Raman lauds, exhorts State players". Dailypioneer.com. 2012-08-29. Retrieved 2013-01-06.