இலோட்ஃசே மலை
இலோட்ஃசே என்னும் மலை (Lhotse, நேபாளியில் ल्होत्से, சீனாவில் Lhozê; திபேத்திய மொழியில்: lho rtse; சீன மொழியில்: 洛子峰, பின்யிங்ல்: Luòzǐ Fēng) உலகிலேயே 4 ஆவது மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 8,516 மீ ஆகும். இமய மலைத் தொடரில் எவரெசுட்டு மலையுடன் சவுத் கால் என்னும் இடத்துடன் தொடர்புடையது. இம்மலை திபெத்துக்கும் (சீனாவின் பகுதி) நேபாளத்திற்கும் இடையே உள்ள எல்லைப்பகுதியில் உள்ளது.
| இலோட்ஃசே Lhotse | |
|---|---|
இலோட்ஃசே மலையின் தென்முகம்; சுக்குங்கு-ரி முகடு நோக்கி ஏறும்பொழுது அங்கிருந்து பார்க்கும்பொழுது தோன்றும் தோற்றம். | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 8,516 m (27,940 அடி)[1] 4-ஆவது உயரமான மலை |
| புடைப்பு | 610 m (2,000 அடி)[2] |
| பட்டியல்கள் | எண்ணாயிரம் மீட்டரை மீறும் மலைகள் |
| புவியியல் | |
| அமைவிடம் | நேபாளம் (கும்பு) சீனா (திபெத்துத் தன்னாட்சிப் பகுதி) |
| மூலத் தொடர் | மகாலங்கூர் இமாலயம் |
| ஏறுதல் | |
| முதல் மலையேற்றம் | May 18, 1956 Fritz Luchsinger, Ernst Reiss (First winter ascent 31 December 1988 Krzysztof Wielicki) |
| எளிய வழி | glacier/snow/ice climb |
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
- ↑ A height of 8,501 m is sometimes given but official Nepalese and Chinese mapping agree on 8,516 m.
- ↑ 2.0 2.1 "General Info". 8000ers.com. Retrieved 20 December 2009.