இ. தமிழரசன்
இ. தமிழரசன் (I. Tamilarasan) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் வேலூர் மாவட்டம் உதயேந்திரம் கிராமத்தினைச் சேர்ந்தவர். காட்பாடி தான் போசுகோ உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார். இதன்பின்னர் வாணியம்பாடு இசுலாமியக் கல்லூரியில் இளமறிவியல் பட்டப் படிப்பினை முடித்தார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1977ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பேரணாம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
இ. தமிழரசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1977–1980 | |
| முன்னையவர் | என். கிருசுணன் |
| பின்னவர் | ஜி. மூர்த்தி |
| தொகுதி | பேரணாம்பட்டு |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 15 மார்ச்சு 1949 உதயேந்திரம் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வணிகர் |
தேர்தல் செயல்பாடு
1977
| கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
|---|---|---|---|---|---|
| அ.இ.அ.தி.மு.க. | இ. தமிழரசன் | 24,536 | 37.21% | ||
| ஜனதா கட்சி | பி. இராஜகோபால் | 20,873 | 31.66% | ||
| தி.மு.க. | வி. கோவிந்தன் | 15,862 | 24.06% | -35.56% | |
| காங்கிரசு | ஆர். பி. உலகாம்பிகை | 3,628 | 5.50% | -30.57% | |
| சுயேச்சை | கே. சாமன் | 1,040 | 1.58% | ||
| வெற்றி வாக்கு வேறுபாடு | 3,663 | 5.56% | -17.99% | ||
| பதிவான வாக்குகள் | 65,939 | 64.72% | -7.57% | ||
| பதிவு செய்த வாக்காளர்கள் | 103,535 | ||||
| தி.மு.க. இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது | மாற்றம் | -22.40% | |||
மேற்கோள்கள்
- ↑ Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 450-451.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link) - ↑ Election Commission of India. "Statistical Report on General Election 1977" (PDF). Archived from the original (PDF) on 7 Oct 2010. Retrieved 19 April 2009.