ஊடு கடற்கரை (Hoode Beach) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் கோடி பெங்கரே அருகே உள்ள ஒரு சிறிய மீன்பிடி கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கடற்கரை உடுப்பி நகரத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் கடிகே கடற்கரைக்கும் டெல்டா கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. [1] இந்த கடற்கரை இயற்கை எழில் கொஞ்சும் இடமாகவும் திரைப்பட காட்சிகளை படமாக்குவதற்குரிய பிரபலமான இடமாகவும் அறியப்படுகிறது. [2]

சாகா அலைச்சறுக்கு மன்றம்

சாகா அலைச்சறுக்கு மன்றம் இந்த பிராந்தியத்தில் அலைச்சறுக்கு விளையாட்டிற்கான பயிற்சியை வழங்கும் முதல் மற்றும் ஒரே அலைச்சறுக்கு விளையாட்டு நிறுவனம் ஆகும். [3] இந்த நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் துசார் பதியன் மற்றும் இசிதா மாளவியா ஆகியோரால் நிறுவப்பட்டது [4] இசிதா மாளவியா, இந்தியாவின் முதல் தொழில்முறை பெண் அலைச்சறுக்கு விளையாட்டு வீராங்கனையாக கருதப்படுகிறார். [5]

மேற்கோள்கள்

  1. "5 Perfect Breaks to Beat the Pandemic Blues" (in ஆங்கிலம்). Retrieved 2021-09-15.
  2. "Udupi: 'Anweshi'—Hundreds throng beach for glimpse of movie stars" (in ஆங்கிலம்). Retrieved 2021-09-15.
  3. Desk, India TV News (2015-04-06). "India's first woman pro surfer fulfilled The Shaka Surf Club's dream- India TV News" (in ஆங்கிலம்). Retrieved 2021-09-15. {{cite web}}: |last= has generic name (help)
  4. George Ramsay. "India's first professional female surfer is changing her country's perception of the ocean". Retrieved 2021-09-15.
  5. Coldwell, Will (2014-02-05). "Surfing in India: catching waves from coast to coast" (in ஆங்கிலம்). Retrieved 2021-09-15.
"https://tamilar.wiki/w/index.php?title=ஊடு_கடற்கரை&oldid=293572" இலிருந்து மீள்விக்கப்பட்டது