எடிங்டோணைட்டு (Edingtonite) என்பது BaAl2Si3O10·4H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். எடிங்டோணைட்டு கனிமம் வெள்ளை, சாம்பல், பழுப்பு, நிறமற்ற, இளஞ்சிவப்பு அல்லது மஞ்சள் நிறங்களிலுள்ள ஒரு சியோலைட்டு கனிமமாகும். நாற்கோணம், நேர்ச்சாய்சதுரம் அல்லது முச்சரிவச்சுப் படிகங்களைக் கொண்ட வகைகளாகக் காணப்படுகிறது.[4]

எடிங்டோணைட்டு
Edingtonite
படிமம்:Edingtonite-120476.jpg
கனடாவின் பிரிட்டிசு கொலம்பியாவில் கிடைத்த எடிங்டோணைட்டு கனிமம்
பொதுவானாவை
வகைடெக்டோசிலிக்கேட்டு கனிமம், செயோலைற்று கனிமக் குழு
வேதி வாய்பாடுBaAl2Si3O10·4H2O
இனங்காணல்
நிறம்வெண்மை, சாம்பல், இளஞ்சிவப்பு
படிக இயல்புபட்டக போலிநாற்கோனப் படிகங்கள்; திரட்சி.
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
இரட்டைப் படிகமுறல்[110] மற்றும் [001] இல்
பிளப்பு[110] இல் சரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை4 - 4.5
ஒப்படர்த்தி2.73 - 2.78
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.538 nβ = 1.549 nγ = 1.554
இரட்டை ஒளிவிலகல்δ = 0.016
2V கோணம்54 - 62°
நிறப்பிரிகைr < v; வலிமை
பிற சிறப்பியல்புகள்அழுத்த மின்விளைவும் வெப்பமின் விளைவும்
மேற்கோள்கள்[1][2][3]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் எடிங்டோணைட்டு கனிமத்தை Edi[5] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

நெஃபெலின் சினைட்டு வகை தீப்பாறைகள், கார்பனேடைட்டுகள், நீர்வெப்ப விளிம்புகள் மற்றும் பல்வேறு மாஃபிக் பாறைகளில் உள்ள குழிகளுக்குள் காணப்படுகிறது. தாம்சோனைட்டு, அனல்சைம், நேட்ரோலைட்டு, ஆர்மோடோம், பிரீவ்சுடெரைட்டு, பிரீக்ணைட்டு மற்றும் கால்சைட்டு ஆகிய கனிமங்களுடன் தொடர்புடையதாகவும் எடிங்டோணைட்டு கனிமம் காணப்படுகிறது.[3]

எடிங்டோணைட்டு கனிமம் முதன்முதலில் இசுக்காட்டிய கனிம சேகரிப்பாளர் இயேம்சு எடிங்டன் (1787–1844) என்பவரால் அறிவிக்கப்பட்டு எடிங்டோணைட்டு எனப் பெயரிடப்பட்டது. [2][3] பிற ஆதாரங்கள் இசுக்காட்டிய புவியியலாளர் மற்றும் கனிமவியலாளர் தாமசு எடிங்டன் (1814–1859) என்பவரைக் குறிப்பிட்டன.[6] இருப்பினும், இந்தக் கனிமம் 1825ஆம் ஆண்டில் பெயரிடப்பட்டதால், முந்தைய அங்கீகாரம் உண்மையானதாக இருக்க வேண்டும்.[7]

மேற்கோள்கள்

  1. Edingtonite mineral data from Webmineral
  2. 2.0 2.1 Edingtonite mineral data from Mindat.org
  3. 3.0 3.1 3.2 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2019-05-08. Retrieved 2019-05-08.
  4. Richard V. Gaines, H. Catherine W. Skinner, Eugene E. Foord, Brian Mason, and Abraham Rosenzweig: "Dana's new mineralogy", pp. 1683-1684. John Wiley & Sons, 1997
  5. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  6. Biographical Index of Former Fellows of the Royal Society of Edinburgh 1783–2002 (PDF). The Royal Society of Edinburgh. July 2006. ISBN 0-902-198-84-X. Archived from the original (PDF) on 2013-01-24. Retrieved 2016-04-04.
  7. Wilhelm Karl von Haidinger, "Description of Edingtonite, a New Mineral Species", in The Edinburgh Journal of Science, V. iii, October 1825, pp. 316–320

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எடிங்டோணைட்டு&oldid=295016" இலிருந்து மீள்விக்கப்பட்டது