எம். கே. கரீம்
எம். கே. கரீம் (M. K. Kareem) எனும் முருங்ககோடன் குஞ்சு முகமது கரீம் (பிறப்பு 20 மே 1936) இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.
முருங்ககோடன் குஞ்சு முகமது கரீம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | கே. கட்சி கவுடர் |
| பின்னவர் | கே. ஆர். இராசு |
| தொகுதி | கூடலூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 மே 1936 முருங்ககோடன் |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
| தொழில் | தேயிலை தோட்ட விவசாயம் |
பிறப்பு
கரீம், முருங்ககோடன் குஞ்சு முகமது என்பவருக்கு மகனாக 20 மே 1936ஆம் ஆண்டு பிறந்தவர், வண்டூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.
பதவியில்
- 1952 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்,
- 1952 இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்கச் செயலாளர்,
- 1954 கூடலூர் வட்டம் காங்கிரஸ் கமிட்டி செயலாளர்,
- 1962 விவசாயிகளுக்கான பட்டா விநியோக போராட்டக் குழு உறுப்பினர்,
- 1966 பந்தலூர் தேயிலை தொழிற்சாலை இயக்குநர்,
- 1982 தாலுக்கா காங்கிரஸ் கமிட்டி தலைவர்,
- 1982 மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்,
- 1982 நீலகிரி மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்க பொதுச்செயலாளர்,
- 1984 கூடலூர் சாலிஸ்பரி கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, இயக்குநர்,
- 1985 கூடலூர் பஞ்சாயத்து யூனியன் சேர்மன்,
- 1986 நீலகிரி மாவட்டதேயிலை தோட்ட தொழிலாளர் சங்க தலைவர்.[1].
சட்டமன்ற உறுப்பினராக
1989ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நீலகிரி மாவட்டத்தின், கூடலூர் (சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு கட்சி சார்பில் போட்டியிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கமலச்சனை 1,280 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ https://assembly.tn.gov.in/archive/9th_1989/9th_1989.pdf}}%7C%7Cசட்டமன்ற உறுப்பினர் விபரம்
- ↑ http://eci.nic.in/eci_main/StatisticalReports/SE_1989/StatisticalReportTamilNadu89.pdf}}%7C%7C1989 தேர்தல் முடிவுகள்
- ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 133.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)