எல். சுலோசனா (L. Sulochana) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் நகரைச் சேர்ந்தவர். இளங்கலை, இளநிலை சட்டப் பட்டங்களை பெற்றுள்ள சுலோசன வழக்குரைஞர் ஆவார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மேட்டுப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]

எல். சுலோசனா
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1991–1996
முன்னையவர்வெ. கோபாலகிருஷ்ணன்
பின்னவர்பி. அருண்குமார்
தொகுதிமேட்டுப்பாளையம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1942-05-03)3 மே 1942
மேட்டுப்பாளையம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
தொழில்வழக்குரைஞர்

தேர்தல் செயல்பாடு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1991: மேட்டுப்பாளையம்[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அ.இ.அ.தி.மு.க. எல். சுலோசனா 72,912 60.82% +38.52
தி.மு.க. பி. அருன்குமார் 31,173 26.01% புதியவர்
பா.ஜ.க நந்தகுமார் சிறீ 7,017 5.85% புதியவர்
எம். ஆர். சிவசாமி 6,325 5.28% புதியவர்
பாமக ஆர். பழனிச்சாமி 628 0.52% புதியவர்
வெற்றி வாக்கு வேறுபாடு 41,739 34.82% 28.91%
பதிவான வாக்குகள் 119,873 66.98% -8.31%
பதிவு செய்த வாக்காளர்கள் 186,264
காங்கிரசு இடமிருந்து அ.இ.அ.தி.மு.க. பெற்றது மாற்றம் 32.61%

மேற்கோள்கள்

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1991. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. April 1992. p. 222-223.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. Election Commission of India. "Statistical Report on General Election 1991" (PDF). Archived from the original (PDF) on 7 October 2010. Retrieved 19 April 2009.
"https://tamilar.wiki/w/index.php?title=எல்._சுலோசனா&oldid=299674" இலிருந்து மீள்விக்கப்பட்டது