சா. கணேசன் (அரசியல்வாதி)
சா. கணேசன் (S. A. Ganesan பிறப்பு: 21 செப்டம்பர் 1930 - 12 ஏப்ரல் 2018) இவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 1970 முதல் 1971 வரை சென்னை மாநகராட்சியின் நகரத்தந்தையாக சேவை செய்தார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) கட்சியைச் சேர்ந்தவர்.[1]
சா. கணேசன் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1989–1991 | |
| முன்னையவர் | கே. சௌரிராஜன் |
| பின்னவர் | எஸ். செயகுமார் |
| தொகுதி | தியாகராய நகர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 22 செப்டம்பர் 1930 குமாரச்சேரி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | திமுக |
| முன்னாள் மாணவர் | தொண்டை மண்டல துளுவ வெள்ளாப் பள்ளி, சென்னை (10ஆம் வகுப்பு) |
| தொழில் | எழுத்தாளர் |
வாழ்க்கை
சா. கணேசன் துவக்கத்தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் ஆலையின் (பி அண்ட் சி ஆலை) பாரிமுனை அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றினார். அப்போது தி. நகர் வட்டாரத்தில் இருந்து 1959, 1964, 1968 ஆகிய ஆண்டுகளில் 3 முறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதன்பின் 1970 முதல் 1971 வரை சென்னை மேயராக இருந்தார். 1989 தமிழக சட்டமன்றத் தேர்தலில், தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3]
மேற்கோள்கள்
- ↑ Ghosh, Bishwanath (4 May 2011). "In search of 7, Coral Merchant Street". The Hindu. http://www.thehindu.com/arts/history-and-culture/article1990846.ece?css=print.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் (15 ஏப்ரல் 2018). "திராவிடம், பொதுவுடைமை, காந்தியத்தை உள்ளடக்கியவர் சா.கணேசன்". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 16 ஏப்ரல் 2018.
{{cite web}}: Check date values in:|accessdate=and|date=(help) - ↑ Tamil Nadu Legislative Assembly” Who's Who 1989. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. December 1989. p. 13.
{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
|
இக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள். |