ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு

தமிழர்விக்கியிலிருந்து
(ஏபெக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
உறுப்பு நாடுகள் பச்சையில் உள்ளன
தலைமையகம் சிங்கப்பூர்
வகைபொருளாதார மன்றம்
உறுப்பு நாடுகள்
தலைவர்கள்
• APEC ஹோஸ்ட் பொருளாதாரம் 2023
ஜோ பைடன்
• நிறைவேற்றுப் பணிப்பாளர்
ரெபேக்கா பாத்திமா சாண்டா மரியா
உருவாக்கம்1989
படிமம்:APEC2005 Hanbok.jpg
2005 ஏபெக் உச்சி மாநாடு, புசான், தென் கொரியா
படிமம்:APEC2006 Áo Dài.jpg
2006 ஏபெக் உச்சி மாநாடு, ஹனோய், வியட்நாம்
படிமம்:APEC Australia 2007 leaders.jpg
2007 ஏபெக் உச்சி மாநாடு, சிட்னி, ஆஸ்திரேலியா

ஆசிய-பசிபிக் பொருளாதாரக் கூட்டமைப்பு (Asia-Pacific Economic Cooperation, APEC) என்பது பசிபிக் கடலை ஒட்டிய நாடுகளின் பொருளாதாரக் கூட்டமைப்பு ஒன்றியம் ஆகும். பசிபிக் வட்டார நாடுகளின் பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் முதலீடுகள் போன்றவற்றை இவை ஆராயும். இந்நாடுகள் கூட்டாக உலகின் மொத்தப் பொருளாதாரத்தில் 60% விழுக்காட்டினைத் தன்னகத்தே கொண்டுள்ளன.[1]. இவ்வமைப்பின் தலைமையகம் சிங்கப்பூரில் அமைந்திருக்கிறது.

ஏபெக் நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு ஆண்டு தோறும் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் சீன தாய்பெய் தவிர மற்றைய நாடுகளின் அரசுத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள். சீன தாய்பெய் அமைச்சர் மட்டத்தில் இம்மாநாட்டில் பங்கு பற்றுகிறது. உச்சி மாநாடுகள் சுழற்சி முறையில் ஆண்டுதோறும் ஏபெக் நாடொன்றில் இடம்பெறும். அரசுத் தலைவர்கள் உச்சிமாநாடு இடம்பெறும் நாட்டின் தேசிய உடையில் இம்மாநாட்டில் கலந்து கொள்வது ஒரு சிறப்பம்சமாகும். 2007ம் ஆண்டிற்கான ஏபெக் உச்சி மாநாடு ஆஸ்திரேலியாவில் சிட்னி மாநகரில் செப்டம்பர் 2-9 இல் நடைபெற்றது.

வரலாறு

ஜனவரி 1989 இல் ஆஸ்திரேலியப் பிரதமராக இருந்த பொப் ஹோக் பசிபிக் நாடுகளின் கூடிய பொருளாதாரக் கூட்டுக்கு முதன் முதலில் அழைப்பு விடுத்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலியத் தலைநகர் கான்பராவில் நவம்பரில் ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் காரெத் எவான்ஸ் தலைமையில் 12 நாடுகளின் அமைச்சர்கள் மட்டக் கூட்டம் நடைபெற்றது.

முதலாவது உச்சி மாநாடு 1993 இல் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் தலைமையில் வாஷிங்டனில் உள்ள பிளேக் தீவில் இடம்பெற்றது. ஏபெக் தலைமையகம் சிங்கப்பூரில் அமைக்கப்பட்டது.

அங்கத்துவ நாடுகள்

தற்போது மொத்தம் 21 நாடுகள் இக்கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

சேர்ந்த ஆண்டு
 ஆத்திரேலியா 1989
 புரூணை 1989
படிமம்:Flag of Canada (Pantone).svg கனடா 1989
 இந்தோனேசியா 1989
 சப்பான் 1989
 மலேசியா 1989
 பிலிப்பீன்சு 1989
 நியூசிலாந்து 1989
 சிங்கப்பூர் 1989
 தென் கொரியாவட கொரியா 1989
 தாய்லாந்து 1989
படிமம்:Flag of the United States.svg ஐக்கிய அமெரிக்கா 1989
படிமம்:Flag of the Republic of China.svg சீனக் குடியரசு[2] 1991
 ஆங்காங்[3] 1991
 சீனா 1991
 மெக்சிக்கோ 1993
 பப்புவா நியூ கினி 1993
படிமம்:Flag of Chile.svg சிலி 1994
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:  பெரு 1998
 உருசியா 1998
 வியட்நாம் 1998

 இந்தியா இக்கூட்டமைப்பில் அங்கத்துவத்துக்கு விண்ணப்பித்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியன இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனவாயினும், 2010 இற்குப் பின்னரேயே இக்கோரிக்கை பரிசீலனைக்கெடுக்கப்படும்.[4][5][6][7]

அதனை விட, மொங்கோலியா, லாவோஸ், கொலம்பியா[8],  எக்குவடோர்[9] போன்றவையும் விண்ணப்பித்துள்ளன.

சந்திப்பு இடம்பெற்ற இடங்கள்

வருடம் # திகதிகள் நாடு நகரம் இணையத்தளம்
1989 1 வது நவம்பர் 6–7 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா கான்பரா
1990 2 வது ஜூலை 29–31 சிங்கப்பூர் சிங்கப்பூர் சிங்கப்பூர்
1991 3 வது நவம்பர் 12–14 தென் கொரியா தென்கொரியா சியோல்
1992 4 வது செப்டெம்பர் 10–11 தாய்லாந்து தாய்லாந்து பேங்காக்
1993 5 வது நவம்பர் 19–20 ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா சியாட்டில்
1994 6 வது நவம்பர் 15–16 இந்தோனேசியா இந்தோனேசியா போகோர்
1995 7 வது நவம்பர் 18–19 சப்பான் ஜப்பான் ஒசாக்கா
1996 8 வது நவம்பர் 24–25 பிலிப்பீன்சு பிலிப்பீன்சு மணிலா மற்றும் சுபிக்
1997 9 வது நவம்பர் 24–25 கனடா கனடா வான்கூவர்
1998 10 ஆம் தேதி நவம்பர் 17–18 மலேசியா மலேசியா கோலாலம்பூர்
1999 11 ஆம் தேதி செப்டெம்பர் 12–13 நியூசிலாந்து நியூசிலாந்து ஓக்லாந்து
2000 12 ஆம் தேதி நவம்பர் 15–16 புரூணை புருணை பண்டார் செரி பெகவான் [2] பரணிடப்பட்டது 2003-03-14 at the Library of Congress Web Archives
2001 13 ஆம் தேதி அக்டோபர் 20–21 சீனா சீனா சாங்காய்
2002 14 ஆம் தேதி அக்டோபர் 26–27 மெக்சிக்கோ மெக்சிக்கோ லாஸ் கபோஸ்
2003 15 ஆம் தேதி அக்டோபர் 20–21 தாய்லாந்து தாய்லாந்து பேங்காக்
2004 16 ஆம் தேதி நவம்பர் 20–21 சிலி சிலி சாண்டியாகோ [3]
2005 17 ஆம் தேதி நவம்பர் 18–19 தென் கொரியா தென்கொரியா புசான்
2006 18 ஆம் தேதி நவம்பர் 18–19 வியட்நாம் வியட்நாம் ஹனோய் [4] பரணிடப்பட்டது 2006-02-25 at the வந்தவழி இயந்திரம்
2007 19 ஆம் தேதி செப்டெம்பர் 8–9 ஆத்திரேலியா ஆஸ்திரேலியா சிட்னி [5] பரணிடப்பட்டது 2010-11-19 at the வந்தவழி இயந்திரம்
2008 20 ஆம் தேதி நவம்பர் 22–23 சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பெரு லிமா [6] பரணிடப்பட்டது 2007-10-13 at the வந்தவழி இயந்திரம்
2009 21 ஆம் தேதி நவம்பர் 14–15 சிங்கப்பூர் சிங்கப்பூர் சிங்கப்பூர் [7]
2010 22 ஆம் தேதி நவம்பர் 13–14 சப்பான் ஜப்பான் யோகோஹாமா [8]
2011 23 ஆம் தேதி நவம்பர் 12–13 ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா ஹொனோலுலு [9] பரணிடப்பட்டது 2011-03-26 at the வந்தவழி இயந்திரம்
2012 24 ஆம் தேதி செப்டெம்பர் 9–10 உருசியா ரஷ்யா விளாதிவசுத்தோக் [10] பரணிடப்பட்டது 2021-06-26 at the வந்தவழி இயந்திரம்
2013 25 ஆம் தேதி அக்டோபர் 5–7 இந்தோனேசியா இந்தோனேசியா பாலி [11]
2014 26 ஆம் தேதி நவம்பர் 10–11 சீனா சீனா பெய்ஜிங்
2015 27 ஆம் தேதி நவம்பர் 18–19 பிலிப்பீன்சு பிலிப்பீன்சு பாசாய்
2016 28 ஆம் தேதி நவம்பர் 19–20 சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பெரு லிமா
2017 29 ஆம் தேதி நவம்பர் 10–11 வியட்நாம் வியட்நாம் தா நாங்
2018 30 ஆம் தேதி நவம்பர் 17–18  பப்புவா நியூ கினி மார்சுபி துறைமுகம்
2019 31 ஆம் தேதி (ஆரம்பத்தில்) நவம்பர் 16–17 (ரத்து செய்யப்பட்டது) படிமம்:Flag of Chile.svg சிலி சாண்டியாகோ
2020 31 ஆம் தேதி (தாமதமாகிறது) நவம்பர் 20  மலேசியா கோலாலம்பூர் (ஆன்லைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டது)
2021 32 ஆம் தேதி ஜூலை 16 மற்றும் நவம்பர் 12  நியூசிலாந்து ஓக்லாந்து (ஆன்லைனில் ஹோஸ்ட் செய்யப்பட்டது)
2022 33 ஆம் தேதி நவம்பர் 18–19  தாய்லாந்து பேங்காக்
2023 34 ஆம் தேதி நவம்பர் 15–17  ஐக்கிய அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோ
2024 35 ஆம் தேதி நவம்பர் 10–16 சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: பெரு குசுக்கோ

மேற்கோள்கள்

  1. (உலக வங்கி)
  2. சீனக் குடியரசு (ROC) தனது பெயரை இக்கூட்டமைப்பில் "சீனக் குடியரசு" என்றோ அல்லது "தாய்வான்" என்றோ அழைக்கத் தடை செய்யப்பட்டுள்ளது. பதிலாக "சீன தாய்பெய்" என்று அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் அரசுத் தலைவர் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதில்லை, அமைச்சர்கள் மட்டத்திலேயே தனது தூதுக் குழுவை அனுப்புகிறது.
  3. ஹாங்காங் பிரித்தானிய காலனித்துவ நாடாக இருந்தபோது 1991இல் ஏபெக்கில் இணைந்தது. 1997 இல் சீன மக்கள் குடியரசுடன் இணைக்கப்பட்டதில் இருந்து இது "ஹாங்காங், சீனா" என்று வழங்கப்பட்டு வருகிறது.
  4. APEC 'too busy' for free trade deal, says Canberra
  5. இந்திய அங்கத்துவம் பற்றிய பிரச்சினை
  6. "Extend a hand to an absent friend". Archived from the original on 2007-12-23. Retrieved 2007-09-09.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-11-14. Retrieved 2007-11-14.
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-14. Retrieved 2007-09-09.
  9. [1]

வெளி இணைப்புகள்