ஏரி நகரம் (Lake Town) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தின் தெற்கு டம்டம் பகுதியில் உள்ள ஒரு பகுதி ஆகும். இது கொல்கத்தா பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் ஒரு பகுதியாகும்.[1][2]

ஏரி நகரம்

நகர்ப்புறம்
1. கொல்கத்தா சீர் நேர கோபுரம்
2.ஏரி நகரில் மேம்பாலம், விஐபி சாலை முடிவில், தக்சினாந்திரி நுழைவில்
ஏரி நகரம் is located in கொல்கத்தா
ஏரி நகரம்
ஏரி நகரம்
கொல்கத்தாவில் அமைவிடம்
ஏரி நகரம் is located in மேற்கு வங்காளம்
ஏரி நகரம்
ஏரி நகரம்
ஏரி நகரம் (மேற்கு வங்காளம்)
ஏரி நகரம் is located in இந்தியா
ஏரி நகரம்
ஏரி நகரம்
ஏரி நகரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°36′18″N 88°24′18″E / 22.60500°N 88.40500°E / 22.60500; 88.40500
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
பகுதிஇராஜதானி
மேற்கு வங்காளம்வடக்கு 24 பர்கனா
கொல்கத்தா
  • பெல்காச்சியா
  • டம்டம்
கொல்கத்தா புறநகர் தொடருந்து நிலையம்பிதான்நகர் சாலை தொடருந்து நிலையம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்தெற்கு டம்டம் மாநகராட்சி
மொழி
 • அலுவல்வங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
700048, 700089
தொலைபேசி குறியீடு+91 33
வாகனப் பதிவுWB
மாநிலச் சட்டப் பேரவைபிதாநகர்

புவியியல்

ஏரி நகரின் வடக்கில் ஜாவ்பூர், புர்பா சிந்தி, நாகர்பஜார், தெற்கில் பிதான்நகர், டம் டம் பூங்கா, கிழக்கில் விஐபி சாலையின் அருகிலுள்ள பகுதிகள், மேற்கில் பதிபுகூர், பெல்காச்சியா, தலா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

இந்தியச் சுதந்திரத்திற்குப் பிறகு அக்கம்பக்கமானது திட்டமிட்ட முறையில் உருவாக்கப்பட்டது. இன்று, மேற்கு வங்காளத்தில் பல பன்னாட்டுத் துரித உணவு நிறுவனங்கள், பேரங்காடி கொண்ட முக்கியமான உணவு மற்றும் ஓய்வு மையங்களில் ஒன்றாகும்.[3] 

காவல் நிலையம்

பிதான்நகர் காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள ஏரி நகரக் காவல் நிலையம் தெற்கு டம் டம் நகராட்சிப் பகுதிகளின் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது.[4]

 
ஏரி நகர காவல் நிலையம்

குறிப்பிடத்தக்க குடியிருப்பாளர்கள்

துர்கா பூசை கொண்டாட்டம்

நேதாஜி விளையாட்டுக் குழுமம், ஏரி நகரம், 2021
ஏரி நகர அதிபாசி பிரிந்தோ 2020
சிறீபூமி விளையாட்டுக் குழுமம் 2023

சமீபத்திய ஆண்டுகளில், ஏரி நகரில் உள்ள சிரிபூமி விளையாட்டு குழுமம், ஏரி நகர அதிபசி பிரிண்டோ, நேதாஜி விளையாட்டு குழுமம் ஏரி நகரம், கோலாகட்டா சம்மிலானி, தட்ஷிந்தரி இளையோர் அமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளின் புதுமையான முயற்சிகளால் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் வெளி உலகிற்குத் தெரிய வந்துள்ளன.[7][8][9][10]

 
சிறீபூமி விளையாட்டு குழும துர்கா பூசை பந்தல் 2022 (வாடிகன் நகரம்)
 
தக்ஷிந்தாரி இளைஞர் மன்றம் துர்கா பூஜை பந்தல் 2023

கொல்கத்தா நேர மண்டல கோபுரம்

 
பிக் பென் பிரதி, ஏரி நகரம்

விஐபி சாலையில் அமைக்கப்பட்ட கொல்கத்தா நேர மண்டலக் கோபுரம் இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பிக் பென்னின் மூன்றில் ஒரு பங்கு அளவிலான பிரதியாகும். அக்டோபர் 2015-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கோபுரம், இலண்டனின் கட்டிடக்கலையை கொல்கத்தாவில் இணைக்கும் நோக்கத்துடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியால் வடிவமைக்கப்பட்டது. தெற்கு டம் டம் நகராட்சியின் தலைமையிலான இந்தத் திட்டத்திற்கு ரூ. 1.36 கோடி (அமெரிக்க டாலர் 211997) செலவானது. செலவு, கலாச்சாரப் பொருத்தமின்மை ஆகிய இரண்டின் அடிப்படையில் உள்ளூர் எதிர்ப்பிற்கு இத்திட்டம் உட்பட்டது.[11]

இக் கோபுரம் 30 மீட்டர் உயரமுடையது (பிக் பென் 96 மீட்டர் உயரமுடையது). இது 10 தளங்களுடன் 4 கடிகார முகங்கள் கொண்டது. இங்கிலாந்து சுவிசு நிறுவனத்தால் நிதியளிக்கப்பட்டது.[12]

சந்தை மனை மதிப்பு கூடுதல்

 
அல்கோவ் குளோரியா (வணிக வளாகம்), விஐபி சாலை, ஏரி நகரம்

பெரிய திறந்தவெளிகள், பூங்காக்கள், ஏரியுடன் கூடிய திட்டமிடப்பட்ட நகரமைப்பாக கொல்கத்தாவின் வடக்குப் பகுதியின் மிகவும் விரும்பப்படும் குடியிருப்புப் பகுதிகளில் ஏரி நகரம் ஒன்றாகும். நேதாகி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம், உப்பு ஏரி, புது நகரம் போன்ற வணிக மையங்களுக்கு அருகாமையில் இருப்பது சமீபத்திய ஆண்டுகளில் சொத்து விலைகள் அதிகரித்து வருவதற்கு ஓர் ஊக்கியாக உள்ளது.

போக்குவரத்து

ஏரி நகரில் உள்ள ஜெசூர் சாலை, ஏரி நகரம், விஐபி சாலை வழியாகப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 2011-இல் போக்குவரத்திற்கு உல்டடாங்கா மேம்பாலம் திறக்கப்பட்டது. இந்த மேம்பாலம் ஈ.எம். புறவழிச்சாலையினை (பிதான் சிஷு உத்யன், உல்டடங்கா ) வி.ஐ.பி. சாலையுடன் (தக்ஷிந்தாரி, ஏரி நகரம்) இணைக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைத்துள்ளது.[13]

பிதான்நகர் சாலை தொடருந்து நிலையம், பதிபுகூர் தொடருந்து நிலையம், கொல்கத்தா தொடருந்து நிலையம், டம் டம் சந்திப்பு ஆகியவை ஏரி நகருக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் ஆகும்.

நேதாஜி சுபாசு சந்திரபோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஏரி நகரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

  1. "Base Map of Kolkata Metropolitan area". Kolkata Metropolitan Development Authority. Archived from the original on 2007-09-28. Retrieved 2007-09-03.
  2. "Lake Town police station". bidhannagarcitypolice.gov.in. Retrieved 2024-08-15.
  3. "Fast food chain spreads wings" இம் மூலத்தில் இருந்து 5 July 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100705031526/http://www.telegraphindia.com/1100701/jsp/calcutta/story_12620002.jsp. 
  4. "Bidhannagar City Police". bidhannagarcitypolice.gov.in. Retrieved 2019-11-24.
  5. Shamik Bag (13 August 2010). "Not another brick in the wall". Mint. http://www.livemint.com/Leisure/LGPLL2RTg7vlyqhT8NgG7N/Not-another-brick-in-the-wall.html. 
  6. Khan, Charu (4 July 1989). Charu Khan, Portrait of an Artist. M C Sarkar Sons Pvt Ltd. ISBN 9788171570133 – via Google Books.
  7. "Kolkata's famous Sreebhumi Pandal turns into Vatican City and it's grand!". The Times of India. Retrieved 31 Aug 2024.
  8. "দুর্গাপুজোয় চাঁদের দেশে, মণ্ডপের থিম চন্দ্রযান, লেকটাউনের নেতাজি স্পোর্টিং ক্লাবে একাধিক চমক". ABP Ananda. Retrieved 31 Aug 2024.
  9. "Top Durga Pujas in North Kolkata and Dum Dum area". The Telegraph. Retrieved 31 Aug 2024.
  10. "পুজোর প্রস্তুতি: আজ-দক্ষিণদাঁড়ি ইউথ ফোরাম, শিকদার বাগান, গোলাঘাটা সন্মিলনি". ABP Ananda. Retrieved 31 Aug 2024.
  11. "Big Ben Kolkata: The London clock tower replica is not a Durga Puja marquee". www.indiatoday.in. India Today / Living Media India Limited. 17 October 2015. Retrieved 19 August 2022.
  12. Majumder, Arindam (7 November 2015). "Kolkata's 'Big Ben'". www.business-standard.com. Business Standard Private Ltd. Retrieved 19 August 2022.
  13. "Ultadanga Flyover". The Times of India.
"https://tamilar.wiki/w/index.php?title=ஏரி_நகரம்&oldid=303098" இலிருந்து மீள்விக்கப்பட்டது