ஐ இ டி - 2233 (நெல்)
ஐ இ டி - 2233 (IET-2233) என்பது; 1978 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய, மத்திய, மற்றும் நீண்டகால, நெல் வகையாகும். ஆகத்து - செப்டம்பர் மாதம் வரையிலான சம்பா பட்டத்திற்கு ஏற்றதாக கருதப்படும் இது, 110 - 165 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடியது.[1] பெல்லா பாட்னா (Bella Patna) எனும் நெல் இரகத்தையும், ஐ ஆர் 8 நெல் இரகத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட இந்நெல் வகை, வண்டல் மண், மற்றும் தெராய் பிராந்தியங்களில் நன்கு சாகுபடி செய்யப்படுகிறது.
| ஐஇடி-2233 IET-2233 |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| பெல்லா பாட்னா x ஐஆர்-8 |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 110 - 115 நாட்கள் |
| மகசூல் |
| 4000 கிலோ எக்டேர் |
| வெளியீடு |
| 1978 |
| நாடு |
அரைக்குள்ளப் பயிராக வளரக்கூடிய இந்த நெற்பயிரின் தானியமணிகள், நீண்டு தடித்தும், இதன் அரிசி வெண்ணிறத்திலும உள்ளது. வறட்சியைத் தாங்கி வளரும் திறன்கொண்ட இந்த நெல் இரகம், வடஇந்தியப் பகுதியான மேற்கு வங்க மாநிலத்தில் பெரும்பான்மையாக பயிரிடப்படுகின்றது.[2][3]
சான்றுகள்
- ↑ நெல் பட்டங்கள் - கோ. நம்மாழ்வார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ IET-2233 - Notified Rice Varieties in West Bengal, India
- ↑ "Details of Rice Varieties". drdpat.bih.nic.in (ஆங்கிலம்). 2017. Retrieved 2017-07-16.