கம்பீரநாட்டை கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 36 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருது" என்றழைக்கப்படும் 6 ஆவது சக்கரத்தின் 6 ஆவது மேளமாகிய சலநாட இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]

இலக்கணம்

படிமம்:கம்பீரநாட.svg
கம்பீரநாட சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ க31 ப நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி3 ப ம13
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம1), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • ரிஷபம், தைவதம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும்.
  • இது உபாங்க இராகம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
  2. Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
"https://tamilar.wiki/w/index.php?title=கம்பீரநாட்டை&oldid=314931" இலிருந்து மீள்விக்கப்பட்டது