கருத்த நவரா
கருத்த நவரா அல்லது கருப்பு நவரை (KARUTHTHA NAVARA) என்று அழைக்கப்படும் இந்த நெல் வகை, தென்னிந்தியாவில் உள்ள கேரளாவின் ஒரு பாரம்பரிய நெல் வகையாகும். சோறு, மருத்துவக் கஞ்சி மற்றும் சிற்றுண்டி வகைகள் சமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் இந்த நெல் இரகத்தின் தானியம், வெளிர் சிவப்பு கலந்த கருப்பு நிறத்திலும், அரிசி, செந்நிறத்திலும் தடித்தும் காணப்படுகிறது. மருத்துவ நோக்கங்களுக்காக கேரளத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பயிரிடப்படும் இந்த நெல் இரகம், கேரளாவின் பருவகால சிகிச்சையான முக்கியமாக ‘கார்கிடகா சிகிச்சை’[2][3] (மலையாள மாதமான கார்கிடகத்தின் (கடக) போது செய்யப்படும் ஆயுர்வேத சிகிச்சைகள் மற்றும் நடைமுறைகளைக் குறிக்கிறது, இது மழைக்காலத்துடன் தொடர்புடையது. இந்த காலம் தனித்துவமான காலநிலை நிலைமைகள் காரணமாக உடலை நச்சு நீக்கம் செய்வதற்கும் புத்துணர்ச்சியூட்டுவதற்கும் ஏற்றதாகக் கருதப்படுகிறது.) மற்றும் பல்வேறு மருத்துவ நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.[1]
| கருத்த நவரா |
|---|
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| வகை |
| பாரம்பரிய நெல் வகை |
| காலம் |
| 90 - 100 நாட்கள் |
| மகசூல் |
| ஏக்கருக்கு 800 கிலோ |
| தோற்றம் |
| பண்டைய நெல் வகை |
| மாநிலம் |
| கேரளம்[1] |
| நாடு |
மிகக் குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 90 - 100 நாட்களில் முதிர்வடைவதாக கூறப்படுகிறது. மேலும் 3 அடி உயரம் வரை வளரும் இந்த நெற்பயிரின் மகசூல், ஒரு ஏக்கருக்கு சுமார் 800 கிலோ வரை உற்பத்தித் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது.[1]
இவற்றையும் காண்க
சான்றுகள்
- ↑ 1.0 1.1 1.2 "Native rice varieties of Kerala - KARUTHTHA NAVARA" (PDF). agroecologycentre.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-08-10.
- ↑ Karkidaka Chikitsa
- ↑ அது என்ன கர்க்கடக கஞ்சி?