கலா விஜயன் (Kala Vijayan) ஓர் இந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞரும், நடன இயக்குரும், எழுத்தாளரும் மற்றும் நடிகையும் ஆவார். இவர் புகழ்பெற்ற கதகளி கலைஞர் கலாமண்டலம் கிருட்டிணன் நாயர் மற்றும் மோகினியாட்டக் கலைஞர் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா ஆகியோரின் மகள் ஆவார். கலா விஜயன் மோகினியாட்டம், பரதநாட்டியம் மற்றும் கதகளி ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர். இருப்பினும் இவர் மோகினியாட்டத்திற்கு அளித்த பங்களிப்புகளுக்காக மிகவும் பிரபலமானவர். மோகினியாட்டத்திற்கான கேரள சங்கீத நாடக அகாதமி விருது (1998) மற்றும் கேரள மாநில விருது (2019) ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.[1][2] 1952 ஆம் ஆண்டில் திருப்பூணித்துறையில் இவரது பெற்றோர்களால் நிறுவப்பட்ட நுண்கலை நிறுவனமான கேரள கலாலயத்தில் முதன்மை இயக்குநராகவும் மூத்த குருவாகவும் உள்ளார்.[3]

கலா விஜயன்
படிமம்:IMG-20210625-WA0012.jpg
பிறப்பு8 மே 1944
தேசமங்கலம், சொரனூர்
பணிஇந்தியப் பாரம்பரிய நடனக் கலைஞர்
அறியப்படுவதுமோகினியாட்டம்
வாழ்க்கைத்
துணை
சி. கே. விஜயன்
பிள்ளைகள்1

இளமை வாழ்க்கை

கலா விஜயன் 1944 மே 8 அன்று சொரனூரில் உள்ள தேசமங்கலம் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை கலாமண்டலம் கிருஷ்ணன் நாயர் ஒரு புகழ்பெற்ற கதகளி கலைஞர் ஆவார். அவர் கேரளாவிலும் அதற்கு அப்பாலும் கதகளியை பிரபலப்படுத்தினார். இவரது தாயார் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா மோகினியாட்டத்தின் "தரவட்டம்மா" அல்லது "தாய்" என்று நினைவுகூரப்படுகிறார்.[4] 1937 முதல் 1940 வரை கேரள கலாமண்டலத்தில் மோகினியாட்டம் மாணவியாக இருந்த கலா, மோகினியாட்டத்தை ஒரு பாரம்பரிய நடன வடிவமாக உயிர்த்தெழச் செய்வதில் முக்கிய பங்கு வகித்தார்.[4]

கலாவின் மூத்த சகோதரி சிறீதேவி ராஜனும் மோகினியாட்டக் கலைஞரும் மற்றும் பயிற்றுவிப்பாளரும் ஆவார்.[5] சிறீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்-சுமிதா இராஜன் மற்றும் சந்தியா ராஜன் -இருவரும் மோகினியாட்டக் கலைஞர்களாகவும் மற்றும் பயிற்றுவிப்பாளர்களாகவும் உள்ளனர்.[6] இவர்களின் சகோதரர் கலாசாலா பாபு ஒரு மேடை நடிகரும், தொலைக்காட்சித் தொடர் மற்றும் திரைப்பட நடிகரும் ஆவார்.

குடும்பம்

கலா, திருவிதாங்கூரிலுள்ள உரங்கள் மற்றும் இரசாயனங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியரான சி. கே. விஜயனை மணந்தார். இவர்களது மகன் ஒரு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகர் ஆவார்.[7]

தொழில் வாழ்க்கை

கலா ஒரு தொழில்முறை நாடகக் குழுவில் குழந்தைக் கலைஞராக இருந்தார். தனது 10 வயது முதல் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளுக்கு மோகினியாட்டத்தை இன்னும் நிகழ்த்துகிறார்.[8]

பைபிளில் இருந்து யோபு கதையை அடிப்படையாகக் கொண்ட மோகினியாட்டம் பாடலுக்கு இவர் நடனமாடியுள்ளார். சிலப்பதிகார காப்பியத் தலைவி கண்ணகிகதையை அடிப்படையாகக் கொண்ட நாட்டிய நாடகங்களை இயற்றி நடனமாடியுள்ளார். மோகினியாட்டம், கதகளி மற்றும் பரதநாட்டியம் ஆகியவற்றுடன் இணைந்து சோதனை நடன பாடல்களுக்கும் நடனமாடியுள்ளார். அத்தகைய நடனங்களில் பாவயாமி ரகு ராமம் என்ற பாடலும் ஒன்றாகும். தனது தாயால் மோகினியாட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கச்சேரி பாரம்பரியத்தை இவர் தொடர்ந்து ஆதரிக்கிறார்.[8]

தனது தாயார் கலாமண்டலம் கல்யாணிகுட்டி அம்மா அறிமுகப்படுத்திய அறிவியல் மற்றும் பாரம்பரிய கோட்பாடுகளின் அடிப்படையில், கலா விஜயன் 25 புதிய அடவுகளை (மோகினியாட்டத்தின் அசைவுகள்) உருவாக்கியுள்ளார். தாந்த்ரீக மற்றும் கிராமிய முத்திரை ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டார். அவை ஒரு புத்தகத்தமாக வெளியிடப்பட்டுள்ளன.[9] கலா விஜயன் தனது யூடியூப் சமூக ஊடகத் தளமான கேரளா கலாலயம் மூலம் மோகினியாட்டம் கோட்பாட்டு மற்றும் நடைமுறை காணொளித் தொடரை தொகுத்து வழங்குகிறார்.[10]

விருதுகள்

  • 1978-திருப்பூணித்துறையின் சக்ருதய சமிதி வழங்கிய நாட்டிய கலாரத்னம் விருது.[8]
  • 1993-இந்திய அரசின் கலாச்சாரத் துறையின் இளையோர் உதவித்தொகை. ( மூத்தோர் உதவித்தொகையையும் பெற்றார்) [8]
  • 1998-கேரள சங்கீத நாடக அகாதமி விருது[1]
  • 2006-மோகினியாட்டத்திற்கான சுவாதித் திருநாள் நிகழ்த்து கலை அறக்கட்டளை விருது [8]
  • 2019-மோகினியாட்டத்திற்கான கேரள மாநில விருது கேரளா [11]

புத்தகங்கள்

மோகினியாட்டம் குறித்து மோகினியாட்டம்: அரியேண்டத் எல்லாம் என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை கலா விஜயன் எழுதியுள்ளார். இது 2012 இல் டி. சி. பதிப்பகம் இதை வெளியிட்டது.[12] இந்த புத்தகம் திரிப்பூணித்துறை ஆர். எல். வி கல்லூரி மற்றும் காலடி சிறீ சங்கரா கல்லூரி ஆகியவற்றில் மோகினியாட்டத்திற்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[8]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Dance, Awards, Kerala Sangeetha Nataka Akademi". keralaculture.org (in ஆங்கிலம்). Retrieved 24 June 2021.
  2. "2018 Kathakali awards announced in Kerala". The New Indian Express. Retrieved 24 June 2021.
  3. "In step with tradition". The New Indian Express. Retrieved 24 June 2021.
  4. 4.0 4.1 Paul, G. S. (12 May 2021). "Kalamandalam Kalyanikutty Amma: The Only Matriarch of Mohiniyattam". India Art Review (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 24 June 2021.
  5. "Confluence of classicism and aesthetics". https://www.thehindu.com/entertainment/reviews/dance-festival-organised-at-kochi/article30345720.ece. 
  6. "Moved by legacy". The New Indian Express. Retrieved 24 June 2021.
  7. "Profile - Kala Vijayan - Venugopal SK". narthaki.com. Retrieved 24 June 2021.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 "Profile - Kala Vijayan - Venugopal SK". narthaki.com. Retrieved 24 June 2021."Profile - Kala Vijayan - Venugopal SK". narthaki.com. Retrieved 24 June 2021.
  9. "In step with tradition". The New Indian Express. Retrieved 24 June 2021."In step with tradition". The New Indian Express. Retrieved 24 June 2021.
  10. Codingest (12 May 2021). "മോഹിനിയാട്ട തറവാട്ടമ്മയ്‌ക്ക്‌ മകളുടെ പൂജ". Admin (in மலையாளம்). Retrieved 24 June 2021.
  11. "Kerala 'State Kathakali award-2018' announced". https://www.thehindu.com/news/national/kerala/kathakali-award-announced/article29956774.ece. 
  12. "State Central Library Kerala - Online Catalog".
"https://tamilar.wiki/w/index.php?title=கலா_விஜயன்&oldid=318294" இலிருந்து மீள்விக்கப்பட்டது