பி. கங்காதரன் (P.Gangadharan, 8 மே 1925 – 16 பிப்ரவரி 1989) என்பவர் ஓர் இந்தியத் திரைப்படக் கலை இயக்குநர், ஓவியர், உலோக சிற்பங்கள் வடிவமைப்பாளர்.  1953 முதல் 1977வரை தமிழ்த்  திரைப்படக் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

கலை கங்கா (கங்காதரன்)
கலை கங்கா
பிறப்பு8 மே 1925 (1925-05-08) (அகவை 101)
நாகப்பட்டினம், தமிழ்நாடு), இந்தியா
இறப்பு16 பிப்ரவரி 1989
தேசியம்இந்தியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்1962 நெஞ்சில் ஓர் ஆலயம் 1964 கர்ணன்
வாழ்க்கைத்
துணை
க. சாவித்திரி
பிள்ளைகள்ஓவியராணி, ராஜகுமாரி, மரகதமணி, ராஜரத்தினம், யோகநாதன், கலாவதி

வாழ்க்கைக் குறிப்பு

கலை கங்கா என்ற கங்காதரன், பச்சையப்பன் - நீலாம்பாள் இணையருக்கு மகனாக 08.05.1925 இல் நாகப்பட்டினத்தில் பிறந்தவர். பள்ளி படிப்பை நாகப்பட்டினத்தில் முடித்த பின் கும்பகோணம் அரசு நுண் கலைக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார்.

1946 ஆம் ஆண்டு ஓவியர் பாலு மற்றும் திரைப்பட இயக்குநர் டி.ஆர். ராமண்ணாவின் பரிந்துரையில் நெப்டியூன் ஸ்டுடியோவில் கலை இயக்குநராகப் பணியாற்றினார். 1953 இல் திரைப்பட இயக்குநர்  டி.ஆர். ராமண்ணா இயக்கத்தில் ‘வாழப்பிறந்தவள்’  திரைப்படத்தில் கலை இயக்குநராக தனது பணியைத் தொடங்கினார். திரு. ராமண்ணாவுடன் இணைந்து பல திரைப்படங்களுக்கு பணியாற்றி உள்ளார்.

மேலும் பி. ஆர். பந்துலு, ஏ.பீம்சிங், ஸ்ரீதர், ஏ.பி. நாகராஜன், பி.மாதவன் ஏ.சி. திருலோகசந்தர், சி.வி.ராஜேந்திரன் ஆகிய திரைப்பட இயக்குநர்களின்  கீழ் பணியாற்றி உள்ளார். தன் வாழ்நாளில் 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

1961 ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் தனது நண்பர்களான கோபு, ஏ. வின்சென்ட், பி.என்.சுந்தரம் மற்றும் திருச்சி அருணாசலம் ஆகியோருடன் சித்ராலயா  என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்நிறுவனத்தின் சின்னத்தை வடிவமைத்தவர் கலை இயக்குநர் கங்கா. [1]

கலைக்கோவில் என்ற திரைப்படத்தை மெல்லிசை மன்னர் விஸ்வநாதனுடன் கலை இயக்குநர் கங்கா இணைந்து தயாரித்த திரைப்படம். 1980 ஆம் ஆண்டில் அவர் "ஸ்ரீ ராம பக்த ஹனுமான்" என்ற மலையாள திரைப்படத்தை இயக்கினார்."ஸ்ரீ ராம பக்த ஹனுமான்"

தென்னிந்திய திரைப்பட கலை இயக்குநர்கள் சங்கத்தில் (CADASI) 1972 ஆண்டு அதன் தலைவராகச் செயலாற்றினார்.

பணியாற்றிய திரைப்படங்கள்

வருடம் திரைப்படம் இயக்குநர்
1953 வாழப்பிறந்தவள் டி.ஆர்.ராமண்ணா
1956 மதுரை வீரன் யோகானந்த்
1958 Amardeep (Hindi) டி. பிரகாஷ் ராவ்
1959 கல்யாண பரிசு சி.வி. ஸ்ரீதர்
1959 உத்தமபுத்திரன் டி. பிரகாஷ் ராவ்
1959 வீரபாண்டிய கட்டபொம்மன் பி. ஆர். பந்துலு
1960 Pelli Kanuka (telugu) சி.வி. ஸ்ரீதர்
1960 இரத்தினபுரி இளவரசி டி. ஆர். ராமண்ணா
1960 விடிவெள்ளி டி. ஆர். ராமண்ணா
1961 தேன் நிலவு சி.வி. ஸ்ரீதர்
1962 Rakhi (Hindi) ஏ. பீம்சிங்
1962 நெஞ்சில் ஓர் ஆலயம் சி.வி. ஸ்ரீதர்
1963 அன்னை இல்லம் பி. மாதவன்
1963 நெஞ்சம் மறப்பதில்லை சி.வி. ஸ்ரீதர்
1964 கர்ணன் பி.ஆர். பந்துலு
1964 காதலிக்க நேரமில்லை சி.வி. ஸ்ரீதர்
1964 புதிய பறவை தாதா மிராசி
1964 கை கொடுத்த தெய்வம் கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
1964 கலைக்கோவில் சி.வி. ஸ்ரீதர்
1965 நீல வானம் பி. மாதவன்
1965 திருவிளையாடல் ஏ.பி.நாகராஜன்
1965 வெண்ணிற ஆடை சி.வி. ஸ்ரீதர்
1965 நீல வானம் பி. மாதவன்
1966 சரஸ்வதி சபதம் ஏ.பி.நாகராஜன்
1966 கந்தன் கருணை ஏ.பி.நாகராஜன்
1966 கொடிமலர் சி.வி. ஸ்ரீதர்
1967 ஊட்டி வரை உறவு சி.வி. ஸ்ரீதர்
1967 நெஞ்சிருக்கும் வரை சி.வி. ஸ்ரீதர்
1967 பாலாடை ஏ. பீம்சிங்
1967 திருவருட்செல்வர் ஏ.பி.நாகராஜன்
1967 Nai Roshni (Hindi) சி.வி. ஸ்ரீதர்
1968 திருமால் பெருமை ஏ.பி.நாகராஜன்
1968 ஹரிச்சந்திரன் கே. எஸ். பிரகாஷ் ராவ்
1968 கலாட்டா கல்யாணம்  சி.வி. ஸ்ரீதர்
1969 குரு தட்சணை ஏ.பி.நாகராஜன்
1969 வா ராஜா வா ஏ.பி.நாகராஜன்
1970 வியட்நாம் வீடு பி. மாதவன்
1970 விளையாட்டு பிள்ளை ஏ.பி.நாகராஜன்
1970 Aansoo Aur Muskan (Hindi) பி. மாதவன்
1970 திருமலை தென்குமரி ஏ.பி.நாகராஜன்
1970 வியட்நாம் வீடு பி. மாதவன்
1970 ராமன் எத்தனை ராமனடி பி. மாதவன்
1971 சுமதி என் சுந்தரி சி. வி. ராஜேந்திரன்
1971 அவளுக்கென்று ஒரு மனம் சி.வி. ஸ்ரீதர்
1971 குலமா குணமா கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
1971 கண்காட்சி ஏ.பி.நாகராஜன்
1971 சூதாட்டம் மதுரை திருமாறன்
1971 தங்கைக்காக டி. யோகானந்த்
1972 குருவாயூரப்பன் ஏ.பி.நாகராஜன்
1972 ஞான ஒளி பி. மாதவன்
1972 பட்டிகாடா பட்டணமா பி. மாதவன்
1972 அகஸ்தியர் ஏ.பி.நாகராஜன்
1973 காரைக்கால் அம்மையார் ஏ.பி.நாகராஜன்
1973 ராஜராஜசோழன் ஏ.பி.நாகராஜன்
1973 திருமலை தெய்வம் ஏ.பி.நாகராஜன்
1973 பாரத விலாஸ் ஏ. சி. திருலோகச்சந்தர்
1974 தங்க பதக்கம் பி. மாதவன்
1974 குமாஸ்தாவின் மகள் ஏ.பி.நாகராஜன்
1974 தாய் டி. யோகானந்த்
1974 தேவி கன்னியாகுமரி பி. சுப்ரமணியம்
1975 மன்னவன் வந்தானடி பி. மாதவன்
1975 பாட்டும் பரதமும் பி. மாதவன்
1975 வைர நெஞ்சம் சி.வி. ஸ்ரீதர்
1975 புனர் ஜென்மம் ஆர். எஸ். மணி
1976 கிரகப்பிரவேசம் டி. யோகநாத்
1976 சித்ரா பௌர்ணமி பி. மாதவன்
1976 சத்யம் எஸ். ஏ. கண்ணன்
1977 அண்ணன் ஒரு கோவில் கே. விஜயன்

மேற்கோள்கள்:

https://commons.wikimedia.org/wiki/File:Ganga_-_souveir.pdf

https://commons.wikimedia.org/wiki/File:Nenjil_oru_aalayam.jpg

https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/varamalar-arutchselvar-apnagaraj/68001

"https://tamilar.wiki/w/index.php?title=கலை_கங்கா&oldid=318609" இலிருந்து மீள்விக்கப்பட்டது