கல்பனா தாசு
கல்பனா தாசு (Kalpana Dash-சூலை 7,1966-மே 23,2019) என்பவர் ஓர் இந்திய வழக்கறிஞரும் மலையேறுபவரும் ஆவார். எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் ஒடியா மலையேறுபவர் ஆவார். அமெரிக்கா, கனடா மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழுவுடன் 21 மே 2008 அன்று இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.
| கல்பனா தாசு କଳ୍ପନା ଦାଶ | |
|---|---|
| பிறப்பு | 7 சூலை 1966 தென்கானல், ஒடிசா, இந்தியா |
| இறப்பு | 23 மே 2019 (வயது 52) எவரெசுட்டு சிகரம் |
| தேசியம் | இந்தியா |
இதற்கு முன்பு இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்றார். இதனை 2004ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2006ஆம் ஆண்டில் ஒருமுறையும் முயன்றார். இம்முறைகளில் மோசமான வானிலை மற்றும் சுகாதார நிலைமைகள் காரணமாகத் தோல்வியடைந்தார்.[1][2][3][4][5]
மரணம்
23 மே 2019 அன்று, தாசு மீண்டும் மற்ற இரண்டு பேருடன் எவரெஸ்ட்டில் ஏறினார். ஆனால் இறங்கும் போது நோய்வாய்ப்பட்டு எவரெஸ்ட் மலையின் சிகரம் ஒன்றில் இறந்துவிட்டார்.[6][7]
இவரது மரணத்திற்குக் காரணம் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி அருகே அசாதாரண நெரிசல், கடுமையான வானிலை காரணமாகக் குறுகிய ஏறும் பகுதி ஆகும். நேபாள அரசாங்கம் பல நூறு ஏறுபவர்களுக்கு அனுமதி வழங்கியது.[8][9] நேபாளம், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தாசு போன்ற மூத்த மலையேறுபவர்களில் குறைந்தது 11 பேர் 2019 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இறந்தனர்.[10][11] அமெரிக்காவின் யூட்டாவினைச் சேர்ந்த டொனால்ட் கேஷ் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த அஞ்சலி குல்கர்னி ஆகியோர் தாசு இறந்த அதே வாரத்தில் இறந்தவர்களில் அடங்குவர்.[12]
இவரது உடல் மீட்கப்பட்டது செர்ப்பா வழியாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டது.[13]
பயணங்கள்
- எவரெசுட்டு சிகரம் - ஆசியாவின் மிக உயர்ந்த சிகரம்-8,848 மீ. 21 மே 2008
- டெனாலி - வட அமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரம்-6,190 மீ. 15 சூன் 2010
- கொஸ்கியஸ்கோ மலை-ஆத்திரேலியாவின் மிக உயர்ந்த சிகரம்-5,895 மீ. 19 ஏப்ரல் 2012
- கிளிமஞ்சாரோ- ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த சிகரம்-5,895 மீ. 9 அக்டோபர் 2014
- அகோன்காகுவா - தென்னமெரிக்காவின் மிக உயர்ந்த சிகரம்-6,962 மீ. 16 ஜனவரி 2015
- எல்ப்ரஸ் மலை - ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரம்-5,642 மீ. 31 சூலை 2015
- வின்சன் மலைத்திரள் - அண்டார்டிக்காவின் மிக உயர்ந்த சிகரம் 2,228 மீ. 23 திசம்பர் 2015
- புன்சாக் ஜெயா. கார்ஸ்டென்ஸ் பிரமிடு - ஓசியானியாவின் மிக உயர்ந்த சிகரம் 4,884 மீ. 12 நவம்பர் 2016
- ஓஜோஸ் டெல் சலாடோ - சிலியின் மிக உயர்ந்த சிகரம் 6,893 மீ. 22 திசம்பர் 2017
- தமவந்த் - ஈரானின் மிக உயர்ந்த சிகரம் 5,610 மீ. 20 சூன் 2018
- பைக்கோ டி ஒரிசாபா - மெக்சிக்கோவின் மிக உயர்ந்த சிகரம் 5,636 மீ. 10 அக்டோபர் 2018
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ "The first Odia Girl Miss Kalpana Dash reached world's highest peak the Mount Everest on 21st. May-2008". Archived from the original on 1 September 2017. Retrieved 8 February 2020.
- ↑ "Everest 2008: More Aurn Trek climbers summits with 3 Sherpas". Everestnews.com. Retrieved 2 June 2019.
- ↑ "Kalpana Dash – the First Odia to Conquer Mt. Everest". Archived from the original on 22 December 2012. Retrieved 11 February 2020.
- ↑ "Everest climber Kalpana Das gets warm welcome in Orissa". Thaindian.com. Archived from the original on 21 September 2012. Retrieved 2 June 2019.
- ↑ "Govt Apathy: Kalpana Dash resorts to Begging". 24 May 2012. Archived from the original on 24 May 2012. Retrieved 2 June 2019.
- ↑ "Everest deaths: Odisha mountaineer Kalpana Das dies, traffic at summit sparks safety concerns". தி இந்து. 24 May 2019 இம் மூலத்தில் இருந்து 28 November 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201128021715/https://sportstar.thehindu.com/other-sports/mount-everest-climber-deaths-kalpana-das-odisha-traffic-summit-safety-concerns-anjali-kulkarni-nihal-bagwan-nepal-tourism-news/article27238379.ece.
- ↑ "Odisha's first woman mountaineer Kalpana dies". 24 May 2019 இம் மூலத்தில் இருந்து 1 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191101194621/http://www.newindianexpress.com/states/odisha/2019/may/24/odishas-first-woman-mountaineer-kalpana-dies-1981118.html.
- ↑ O'Grady, Siobhan (25 May 2019). "Mount Everest has gotten so crowded that climbers are perishing in the traffic jams". Washington Post இம் மூலத்தில் இருந்து 5 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210905065427/https://www.washingtonpost.com/world/2019/05/24/mount-everest-has-gotten-so-crowded-that-climbers-are-perishing-traffic-jams/.
- ↑ Smith, Saphora (26 May 2019). "British man and three other climbers die on Everest amid concerns about crowding near the summit" இம் மூலத்தில் இருந்து 10 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200210070023/https://www.nbcnews.com/news/world/three-more-dead-everest-amid-concerns-about-congestion-near-summit-n1009586.
- ↑ Zraick, Karen (29 May 2019). "These Are the Victims of a Deadly Climbing Season on Mount Everest". New York Times இம் மூலத்தில் இருந்து 21 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200521014627/https://www.nytimes.com/2019/05/29/world/asia/everest-deaths.html.
- ↑ Rawlinson, Kevin (23 May 2019). "Congestion on Everest leads to backlog of climbers in 'death zone'". The Guardian இம் மூலத்தில் இருந்து 25 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200225083547/https://www.theguardian.com/world/2019/may/23/congestion-mount-everest-backlog-climbers-death-zone.
- ↑ Sharma, Bhadra (24 May 2019). "Three More Die on Mount Everest During Crowded Climbing Season". New York Times இம் மூலத்தில் இருந்து 5 April 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200405044208/https://www.nytimes.com/2019/05/24/world/asia/mount-everest-deaths.html.
- ↑ "Odisha Mountaineer Kalpana Dash Dies On Mt Everest". Odishabytes.com. 23 May 2019. Archived from the original on 29 May 2019. Retrieved 2 June 2019.