கல்யாண் வர்மா
கல்யாண் வர்மா இந்தியாவைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற காட்டுயிர் புகைப்படக் கலைஞர். இவர் பிபிசி மற்றும் நேசனல் சியாகிரபிக் முதலிய நிறுவனங்களுக்கு காட்டுயிர் தொடர்பான படங்கள் எடுப்பதில் பணியாற்றியுள்ளார். எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வனவிலங்கு திரைப்படத் தயாரிப்பாளர், புகைப்படக் கலைஞர் மற்றும் பாதுகாவலர் ஆவார் என பன்முகங்களுடன் அறியப்படுகிறார்.[1] இந்தியாவைச் சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக, இயற்கையின் அழகையும், இந்தியாவின் சுற்றுச்சூழலின் அவலநிலையையும் ஆவணப்படுத்தி வருகிறார்.
கல்யாண் வர்மா
| இயற்பெயர் | கல்யாண் வர்மா |
|---|---|
| பணி | காட்டுயிர் புகைப்படக் கலைஞர், திரைப்பட இயக்குநர் |
| இணையதளம் | KalyanVarma.net |
பெங்களூரில் வசித்து வரும் இவர் முழுநேர புகைப்படக் கலைஞராவதற்கு முன்பு யாகூ நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பின்னர் காட்டுயிர்களின் மீதுள்ள ஈடுபாட்டின் காரணமாக அப்பணியைத் துறந்து புகைப்படம் எடுப்பதில் ஈடுபட்டு வருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ "Meet Kalyan Varma, the Visual Storyteller and Wildlife Photographer". Man's World India (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 14 January 2016. Retrieved 2016-01-24.