கவிதா சுரேந்தர் குமார் ஜெயின் (Kavita Jain)(பிறப்பு: செப்டம்பர் 2, 1972) என்பவர் அரியான மாநிலத்தினை சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சோனிபத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் இந்தியாவின் அரியானா மாநில அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சராவார்.

கவிதா ஜெயின்
அமைச்சர், அரியானா அரசு
பதவியில்
26 அக்டோபர் 2014 – 27 அக்டோபர் 2019
பெண்கள் & குழந்தைகள் நலத்துறை26 அக்டோபர் 2014 - 27 அக்டோபர் 2019
உள்ளாட்சி துறை அமைச்சர்22 சூலை 2016 - 27 அக்டோபர் 2019
சமூக நீதித்துறை அமைச்சர்26 அக்டோபர் 2014 - 22 சூலை 2016
பட்டிலியத்தவர் & பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர்26 அக்டோபர் 2014 - 24 சூலை 2015
அரியான சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2009–2019
முன்னையவர்அணில் குமார் தாக்கர்
பின்னவர்சுரேந்திர பன்வார்
தொகுதிசோனிபத்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 செப்டம்பர் 1972 (1972-09-02) (அகவை 53)
ரோத்தக், அரியானா
இந்தியா
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இராஜிவ் ஜெயின்
பிள்ளைகள்1 மகள், 1 மகள்
கல்விமுதுநிலை வணிகவியல், இளங்கலை கல்வியியல்
பணிஅரசியல்வாதி

தனிப்பட்ட வாழ்க்கை

ஜெயின், அரியானா முதல்வரின் ஊடக ஆலோசகராக இருந்த ராஜீவ் ஜெயினை மணந்தார்.[1] இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

ஜெயின் ரோத்தக்கில் முதுநிலை வணிகவியல் மற்றும் கல்வியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.[2]

அரசியல் வாழ்க்கை

2009 மற்றும் 2014-ல், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் சோனிபத்தில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட இவர் வெற்றிபெற்றுஅரியானா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 26 அக்டோபர் 2014 அன்று, இவர் அரியானா அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவியேற்றார்.[2]

ஒரு அமைச்சராக, இவர் பின்வரும் துறைகளின் பொறுப்பை வகிக்கிறார்.

  • நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் துறை, அரியானா
  • பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, அரியானா
  • சட்டம் மற்றும் நீதித்துறை,[3] அரியானா

மேற்கோள்கள்

  1. "Rajiv Jain appointed media adviser to Haryana Chief Minister Khattar". Tribune India. April 6, 2018 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 29, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190829143801/https://www.tribuneindia.com/news/haryana/rajiv-jain-appointed-media-adviser-to-haryana-chief-minister-khattar/569643.html. 
  2. 2.0 2.1 "MLA Details". haryanaassembly.gov.in. Retrieved 11 October 2017.
  3. Minister, Contact. "Kavita Jain Contact Details". My Minister (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2020-06-26. Retrieved 2020-06-23.
"https://tamilar.wiki/w/index.php?title=கவிதா_ஜெயின்&oldid=320700" இலிருந்து மீள்விக்கப்பட்டது