காயம்குளம் - 2 (Kym 2), வேளாண் பெயர்; பாக்யா (Bhagya), எனப்படும் இந்த நெல் வகை, தடுக்கன் மற்றும் ஜெயா ஆகிய நெல் இரகங்களை ஒத்திசைவு அமைப்பு (HS) முறையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில ஆலப்புழா மாவட்டம், காயம்குளம் பகுதியில் அமைந்துள்ள " ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம்" (RRS),[2] 1985 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக பாக்யா எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]

காயம்குளம் - 2
KYM 2
வேளாண் பெயர்
பாக்யா
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
தடுக்கன் X ஜெயா
வகை
புதிய நெல் வகை
காலம்
100 - 105 நாட்கள்
வெளியீடு
1985
வெளியீட்டு நிறுவனம்
ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம், காயம்குளம்
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

மிகக் குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 100 - 105 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும். ஒனாட்டுக்கரை கிழக்கு மற்றும் செங்கப்பிக்கல் பகுதியில் முதல் பயிர் பருவத்திற்கு ஏற்ற இது, ஆரம்ப வளர்ச்சி கட்டங்களில் வறட்சியை தாங்கும். மேலும் கருகல் நோய், தண்டு துளைப்பான், இலை சுருட்டுப்புழு மற்றும் கூண்டுப் புழுவை மிதமாக எதிர்க்கும் என கூறப்படுகிறது.[4][5]

சான்றுகள்

  1. "Varieties Released - 34 Kym 2-Bhagya". kau.in (ஆங்கிலம்) - (List upto 2019). Retrieved 2025-10-04.
  2. Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - Varieties Released
  3. "Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - VARIETIES RELEASED - Bhagya". ormis.kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-04.
  4. "Paddy varieties of Kerala - Short duration varieties - Bhagya (Kayamkulam-2)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-04.
  5. "Rice Variety information Kole lands - Short duration - Bhagya(Kayamkulam-2):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-04.
"https://tamilar.wiki/w/index.php?title=காயம்குளம்_-_2&oldid=323505" இலிருந்து மீள்விக்கப்பட்டது