காயம்குளம் - 3 (Kym 3), வேளாண் பெயர்; ஓணம் (Onam), எனப்படும் இந்த நெல் வகை, Kochuvithu / TNI / திரிவேணி ஆகிய மூன்று நெல் இரகங்களை இணைத்து உருவாக்கப்பட்ட ஒரு புதிய நெல் இரகமாகும். தென்னிந்தியாவின் கேரள மாநில ஆலப்புழா மாவட்டம், காயம்குளம் பகுதியில் அமைந்துள்ள " ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம்" (RRS),[1] 1985 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக ஓணம் எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[2]

காயம்குளம் - 3
KYM 3
வேளாண் பெயர்
ஓணம்
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
Kochuvithu X TNI X திரிவேணி
வகை
புதிய நெல் வகை
காலம்
95 - 100 நாட்கள்
வெளியீடு
1985
வெளியீட்டு நிறுவனம்
ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம், காயம்குளம்
மாநிலம்
கேரளம்
நாடு
 இந்தியா

பின்னணி

மிகக் குறுகிய கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 95 - 100 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும். ஆரம்பக் கட்டங்களில் வறட்சியைத் தாங்கும் இதன் நெற்பயிர், கருகல் நோய், உறைக் கருகல் நோய் மற்றும் குலை நோய்க்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. மேலும் ஒனாட்டுக்கரை பகுதியின் முதல் பயிர் பருவத்தில் உலர் விதைப்புக்கு ஏற்றது என கூறப்படுகிறது.[3][4]

சான்றுகள்

  1. Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - Varieties Released
  2. "Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - VARIETIES RELEASED - Kym 3-Onam". ormis.kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-05.
  3. "Paddy varieties of Kerala - Short duration varieties - Onam (Kayamkulam-3)". agritech.tnau.ac.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-05.
  4. "Rice Variety information Kole lands - Short duration - Onam (Kayamkulam-3 ):". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-05.
"https://tamilar.wiki/w/index.php?title=காயம்குளம்_-_3&oldid=323506" இலிருந்து மீள்விக்கப்பட்டது