காயம்குளம் - 5
காயம்குளம் - 5 (Kym 5), வேளாண் பெயர்; சாகரா (Sagara), எனப்படும் இந்த நெல் வகை, உள்ளூர் ஊர் முண்டகன் நெல் இரக்கத்திலிருந்து, திசு வளர்ப்பு அல்லது நுண் பெருக்க (MS) முறையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நெல் இரகமாகும்.[1] தென்னிந்தியாவின் கேரள மாநில ஆலப்புழா மாவட்டம், காயம்குளம் பகுதியில் அமைந்துள்ள " ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம்" (ORARS),[2] 1993 ஆம் ஆண்டு வெளியிட்ட இந்த நெல் இரத்தை பொதுவாக சாகரா எனும் வேளாண் பெயரில் அழைக்கப்படுகிறது.[3]
| காயம்குளம் - 5 KYM 5 |
|---|
| வேளாண் பெயர் |
| சாகரா |
| பேரினம் |
| ஒரய்சா |
| இனம் |
| ஒரய்சா சாட்டிவா |
| கலப்பினம் |
| உள்ளூர் ஊர் முண்டகன் |
| வகை |
| புதிய நெல் வகை |
| காலம் |
| 180 - 190 நாட்கள் |
| வெளியீடு |
| 1993 |
| வெளியீட்டு நிறுவனம் |
| ஓனாட்டுக்கரை வட்டார வேளாண் ஆராய்ச்சி நிலையம், காயம்குளம் |
| மாநிலம் |
| கேரளம் |
| நாடு |
பின்னணி
மிக நீண்ட கால அளவில் அறுவடைக்கு தயாராகும் இந்த நெல் வகை, 180 - 190 நாட்களில் முதிர்வடைவதாக கருதப்படுகிறது. இந்நெல் இரகத்தின் அரிசி, சிவப்பு நிறமாகும். [4]
சான்றுகள்
- ↑ "Varieties Released - 37 Kym 5-Sagara". kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-07.
- ↑ Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - Varieties Released
- ↑ "Onattukara Regional Agricultural Research Station, Kayamkulam - VARIETIES RELEASED - Kym 5-Sagara". ormis.kau.in (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-07.
- ↑ "Rice Variety information Oorumundakan - Long duration varieties - Sagara (Kayamkulam-5)". farmextensionmanager.com (ஆங்கிலம்) - 2025. Retrieved 2025-10-07.