கார்கைட்டு (Corkite) என்பது PbFe3[(OH)6:SO4:PO4] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். அலுனைட்டு குழுவின் பியூதாண்டைட்டு துணைக்குழுவில் உள்ள ஒரு பாசுப்பேட்டு கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. பியூதாண்டைட்டின் பாசுபேட்டு ஒப்புமையாகவும் கருதப்படுகிறது. அதனுடன், இக்கனிமத்தில் ஒரு முழுமையான திட கரைசல் வரம்பு உள்ளது. கார்கைட்டு கனிமம் கிண்டோரைட்டுடன் சேர்ந்து ஒரு திட கரைசலையும் உருவாக்கும்.

கார்கைட்டு
Corkite
கோயித்தைட்டின் மீது கார்கைட்டு
பொதுவானாவை
வகைபாசுப்பேட்டு கனிமங்கள்
வேதி வாய்பாடுPbFe3[(OH)6:SO4:PO4]]
இனங்காணல்
மோலார் நிறை667.82 கி/மோல்
நிறம்பழுப்பு நிறத்தில் இருந்து வெளிர் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும், வெளிர் மஞ்சள் நிறமாகவும், மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருந்து அடர் பச்சை நிறமாகவும்
படிக இயல்புபோலி கனசதுரப் படிகங்கள் {1011}. பொதுவாக மேலோடுகளிலும் திரட்சிகளிலும்
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்பு{0001} இல் சரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை3.5–4.5
மிளிர்வுபளபளக்கும், பிசின் போன்றது
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகும்
ஒப்படர்த்தி4.295 (அளக்கப்பட்டது), 4.31 (கணக்கிடப்பட்டது)
ஒளியியல் பண்புகள்ஒற்றை அச்சு (−), இரட்டை அச்சு போல தோன்றும்
ஒளிவிலகல் எண்nω = 1.930 nε = 1.930 n = 1.93 – 1.96
இரட்டை ஒளிவிலகல்δ = 0.000
பிற சிறப்பியல்புகள்சூடான ஐதரோகுளோரிக் காடியில் கரையும்
மேற்கோள்கள்[1][2][3][4][5]

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கார்கைட்டு கனிமத்தை Cok[6]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

அயர்லாந்தின் மாகாணம் கார்க்கின் பெயரால் கார்கைட்டு கனிமம் பெயரிடப்பட்டது. 1869 ஆம் ஆண்டில் முதன்முதலில் குறிப்பிடத்தக்க அளவு கார்கைட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடம் இதுவாகும்.[2] பியூதாண்டைட்டு குழுவில் உள்ள பல பிற கனிமங்களைப் போலவே, கார்கைட்டும் ஒப்பீட்டளவில் அசாதாரணமான, இரண்டாம் நிலை கனிமமாகும், இது நீர்வெப்ப அடிப்படை உலோக வைப்புகளுக்கு அருகிலுள்ள ஆக்சிசனேற்ற மண்டலங்களில் காணப்படுகிறது.[2] பைரோமார்பைட்டு, மாலகைட்டு, பிளம்போசரோசைட்டு, இலிமோனைட்டு மற்றும் குவார்ட்சு ஆகியவற்றுடன் கலந்து காணப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

  1. Mineralienatlas
  2. 2.0 2.1 2.2 Mindat.org http://www.mindat.org/min-1130.html
  3. Webmineral.com http://webmineral.com/data/Corkite.shtml
  4. EuroMin.net http://euromin.w3sites.net//mineraux/CORKITE.html
  5. 5.0 5.1 "Handbook of Mineralogy" (PDF). Archived from the original (PDF) on 2011-07-28. Retrieved 2010-07-30.
  6. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://tamilar.wiki/w/index.php?title=கார்கைட்டு&oldid=324719" இலிருந்து மீள்விக்கப்பட்டது