கீதா இரண்யன்
கீதா இரண்யன் (Geetha Hiranyan) (20 மார்ச் 1956-2 ஜனவரி 2002) மலையாள எழுத்தாளர் ஆவார். ஒட்டஸ்னப்பில் ஒத்துக்கணவில்லா ஜனம சத்யம், அசங்கதிதா மற்றும் இனியும் வேதாதா ஹ்ருதயதிண்டே கதம் ஆகிய மூன்று புத்தகங்களில் தொகுக்கப்பட்ட இவரது சிறுகதைகளுக்காக அறியப்பட்ட இவர், ஜி. சங்கரா குறுப்பு ஜனமசதப்தி கவிதா விருது மற்றும் குஞ்சு பிள்ளை சமாரகா விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
| இயற்பெயர் | கீதா இரண்யன் |
|---|---|
| பிறப்புபெயர் | கீதா பொட்டி |
| பிறந்ததிகதி | 20 மார்ச்சு 1956 |
| பிறந்தஇடம் | கோட்டவட்டம், கொட்டாரக்கரை, கொல்லம் மாவட்டம், கேரளம், இந்தியா |
| இறப்பு | 2 January 2002 (aged 45) |
| பணி | எழுத்தாளர் |
| குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
| துணைவர் | கே. கே. இரண்யன் |
| பிள்ளைகள் | உமா மற்றும் ஆனந்த் |
வாழ்க்கை
கீதா இரண்யன் என்கிற கீதா பொட்டி, இந்திய மாநிலமான கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொட்டாரக்கரை அருகிலுள்ள கோட்டவட்டம் என்ற ஊரில் 20 மார்ச் 1956 அன்று தொட்டவட்டத்து சி. ஸ்ரீதரன் பொட்டி மற்றும் வசுமதி தேவி ஆகியோருக்கு பிறந்தார்.[1][2] முதுகலை மற்றும் முதுதத்துவமாணி பட்டங்களைப் பெற்ற பிறகு, மலபார் கிறிஸ்தவக் கல்லூரியில் விரிவுரையாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், தனது முனைவர் படிப்பையும் தொடர்ந்தார்.[3] பின்னர் மலப்புரம், கல்பற்றா, பெரிந்தல்மண்ணை திருச்சூர், பட்டாம்பி மற்றும் கொடுங்கல்லூர் ஆகிய இடங்களில் உள்ள பல்வேறு அரசு கல்லூரிகளில் கற்பித்த இவர், கேரள சாகித்ய அகாடமியில் மாற்றுப்பணியில் அதிகாரியாக சேர்ந்தார். இந்த நேரத்தில், நோய்வாய்ப்பட்டதால் இவரால் தனது சேவையைத் தொடர முடியவில்லை.
சொந்த வாழ்க்கை
கீதா எழுத்தாளர், விமர்சகர் மற்றும் கல்வியாளரான கே. கே. இரண்யன் என்பவரை மணந்தார். இந்த தம்பதியினருக்கு உமா என்ற மகளும் அனந்தகிருஷ்ணன் என்ற மகனும் இருந்தனர். கீதா 2002 ஜனவரி 2 அன்று, 43 வயதில், திருச்சூரில் உள்ள தனது வீட்டில் புற்றுநோயால் இறந்தார். [4]
மரபும் கௌரவமும்
கீதா 1979 ஆம் ஆண்டில் மாத்ருபூமி இதழின் புதுவருடப் பதிப்பிற்காக ஏற்பாடு செய்த இலக்கியப் போட்டியில் பங்கேற்றார். இதில் தீர்கபங்கன் என்ற இவரது கதை ஆறுதல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.[5] இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, 1999 ஆம் ஆண்டில், அவர் தனது முதல் சிறுகதை தொகுப்பான ஒட்டஸ்னப்பில் ஒத்துக்கனவில்ல ஜன்மாசத்தியம் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.[6] இவரது அடுத்த இரண்டு தொகுப்புகளான இனியும் வேதாத்த ஹிருதயத்தின் கதம் மற்றும் அசங்கதிதா ஆகியவை இவர் இறந்த பின்னர் 2002 இல் வெளியிடப்பட்டன.[7][8] ஷில்பா ஒரு கதை என்ற இவரது கடைசி கதை அசங்கதிதாவில் சேர்க்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில், கீதா ஹிரன்யண்டே கதகள் என்ற தலைப்பில் ஒரு முழுமையான தொகுப்பு வெளியிடப்பட்டது.[9] இவரது கதை, விருது பெற்ற எழுத்தாளர்களின் கேரளாவின் மகள்கள்: விருது பெற்ற எழுத்தாளர்களின் இருபத்தைந்து சிறுகதைகள் என்ற புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் கேரளாவின் பெண் எழுத்தாளர்களின் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இடம்பெற்றுள்ளன.[10]
கீதா 1994 ஆம் ஆண்டில் குஞ்சு பிள்ளை நினைவு புரஸ்காரத்தைப் பெற்றார். 2001 ஆம் ஆண்டில் அங்கனம் விருது, கவிதைகளுக்கான ஜி. சங்கர குறுப்பு நூற்றாண்டு விருது மற்றும் டி. பி. கிஷோர் விருது ஆகிய மூன்று விருதுகளைப் பெற்றார். மலையாள இலக்கியத்தில் சிறந்து விளங்கும் 35 வயதிற்குட்பட்ட எழுத்தாளர்களுக்கு, இவரது நினைவாக, கீதா ஹிரன்யன் அறக்கட்டளை விருது என்ற வருடாந்திர விருதை கேரள சாகித்ய அகாடமி நிறுவியுள்ளது.[11][12] ஷீபா திவாகரன் எழுதிய கீதா ஹிரன்யன்: ஜீவ சரித்திரம் என்ற தலைப்பில் இவரது வாழ்க்கை வரலாற்றை கேரள பாஷா நிறுவனம் வெளியிட்டுள்ளது.[13]
மேற்கோள்கள்
- ↑ "Geetha Hiranyan - Women Writers of Kerala". womenwritersofkerala.com. womenwritersofkerala.com.
- ↑ "Geetha Hiranyan". keralaliterature.com. Archived from the original on 24 March 2019. Retrieved 24 March 2019.
- ↑ "Biography on Kerala Sahitya Akademi portal". Kerala Sahitya Akademi portal. 2019-03-24. Retrieved 2019-03-24.
- ↑ Staff (2002-01-02). "കഥാകൃത്ത് ഗീതാ ഹിരണ്യന് അന്തരിച്ചു". malayalam.oneindia.com (in மலையாளம்). Retrieved 2019-03-24.
- ↑ "Geetha Hiranyan - Women Writers of Kerala". womenwritersofkerala.com. womenwritersofkerala.com."Geetha Hiranyan - Women Writers of Kerala". womenwritersofkerala.com. womenwritersofkerala.com.
- ↑ "Malayalam Books - Puzha". www.puzha.com. Archived from the original on 14 December 2017. Retrieved 2019-03-24.
- ↑ "Iniyum Veedatha Hridayathinte ... - Geetha Hiranyan (; 8126404485)". www.marymartin.com. 2019-03-24. Archived from the original on 14 December 2017. Retrieved 2019-03-24.
- ↑ "Asamghaditha, Book, Stories ,Written By Geetha Hiranyan". Maebag.com (in ஆங்கிலம்). 2019-03-24. Archived from the original on 14 December 2017. Retrieved 2019-03-24.
- ↑ Hiranyan, Geetha (2009-11-18). Geethahiranyante Kathakal. Current Books Thrissur. ASIN 8122607608.
- ↑ "Geetha Hiranyan Endowment Award". Kerala Sahitya Akademi. 2019-03-24. Retrieved 2019-03-24.
- ↑ "Kerala Sahitya Akademi Awards - 2010" (PDF). கேரளச் சாகித்திய அகாதமி. 6 January 2011. Retrieved 20 July 2015.
- ↑ Sheeba, Divakaran (2013). "Geetha Hiranyan:Jeeva charithram". Kerala Bhasha Institute. Retrieved 2019-03-24.
மேலும் வாசிக்க
- Sheeba Divakaran (2013). Geetha Hiranyan (in மலையாளம்). Kerala Bhasha Institute. ISBN 9788176384490.
- Anand Haridas (5 March 2002). "From one heart to another". தி இந்து. Retrieved 2019-03-24.[தொடர்பிழந்த இணைப்பு]
வெளி இணைப்புகள்
- "Portrait commissioned by Kerala Sahtya Akademi". Kerala Sahitya Akademi. 2019-03-24. Retrieved 2019-03-24.
- "List of works". Kerala Sahitya Akademi. 2019-03-24. Retrieved 2019-03-24.