குடும்பர் (Kudumbar) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஒர் இனக்குழுவினர் ஆவர். இச்சமூகத்தினர் தேவேந்திரகுல வேளாளர் இனத்தின் ஒரு பிரிவினராக கருதப்படுகின்றனர்.[1] தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பட்டியல் பிரிவில் (எண் 35) உள்ளனர்.[2][3] இவர்கள் தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.[4] குன்றிலிருந்து இறங்கி இடையனாகி, இடையிலிருந்து பள்ளத்துக்கு வந்து அமர்ந்ததால் பள்ளர் ஆனான். நிலம் திருத்தி நீர் பாய்ச்சி முதல் வேளாண் குடி ஆனான். ஆணும் பெண்ணும் இணைந்து முதல் குடும்பத்தை உருவாக்கி குடும்பனானான்.[சான்று தேவை]

சொற்பிறப்பு

குடும்பன் என்பதற்கு பள்ளர் தலைவர்[5] என்று பொருள் மற்றும் குடும்ப தலைவன் என்றும் பொருள் கொள்ளலாம்.

தொழில்

இச்சமூகத்தினர் பொதுவாக விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.[6]

மக்கள் தொகை

1991 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி 45,233 பேர் உள்ளனர். அதில் ஆண்கள் 22,638 பேரும், பெண்கள் 22595 பேரும் உள்ளனர்.[7]

மேற்கோள்கள்

  1. தமிழர் பண்பாட்டு வரலாறு (in ஆங்கிலம்). தமிழர் பண்பாட்டு சமூக ஆய்வு மையம். 1999.
  2. "http://socialjustice.nic.in/writereaddata/UploadFile/Scan-0017.jpg". {{cite web}}: External link in |title= (help)CS1 maint: url-status (link)
  3. "Tamil Nadu". Ministry of Social Justice. 2017. Archived from the original on 2016-11-18. Retrieved 2020-07-20.
  4. C.P.சரவணன், C.P.சரவணன் (20 அக்டோபர் 2019). தேவேந்திர குல வேளார்கள் பட்டியல் வெளியேற்ற தாமதத்திற்கு காரணம் மத்திய அரசா? மாநில அரசா? (in ஆங்கிலம்). தினமணி.{{cite book}}: CS1 maint: year (link)
  5. தமிழ்ச் சொல்லகராதி (in ஆங்கிலம்). நியூ செஞ்சுரி புக் ஹவுஸ். 2003. {{cite book}}: |first= missing |last= (help); Unknown parameter |Page= ignored (|page= suggested) (help)
  6. Singh, Kumar Suresh (1992). People of India:India's communities,Volume 4 (in ஆங்கிலம்). Anthropological Survey of India. p. 793. ISBN 0195633547.[தொடர்பிழந்த இணைப்பு]
  7. Nagendra Kr Singh, Nagendra Kr Singh (2006). Global Encyclopaedia of the South Indian Dalit's Ethnography (in ஆங்கிலம்). Global Vision Pub House.
"https://tamilar.wiki/w/index.php?title=குடும்பர்&oldid=332344" இலிருந்து மீள்விக்கப்பட்டது