குடை (Umbrella அல்லது parasol) என்பது மழை, அல்லது வெயிலிலிருந்து பாதுகாக்கும் ஒரு கருவியாகும். ஒரு கம்பிக் கட்டின் மேல் அமைந்த விரிப்பும் ஒரு பிடியும் கொண்டதாக இது அமைந்திருக்கும்.

படிமம்:Ombrelles.jpg
குடைகள்

ஒரு தனி மனிதனை மழை மற்றும் வெயில் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கக்கூடிய கையடக்கக் கருவி குடைகளே ஆகும். அனைவரும், தனிப்பட்ட முறையிலேயே குடைகளைப் பயன்படுத்தலாம்.

தற்காலத்தில், பருமனில் பெரிய குடைகள் பொதுவாக உள்-முற்ற மேசைகளுடனும் வெளிப்புறத் தளபாடங்களுடனும் அல்லது சூரிய ஒளி மிக்க கடற்கரைகளில் அமைக்கப்பட்டுள்ள ஆசனங்களுடனும் பொருத்தப்பட்டுப் பயன்படுத்தப்படுகின்றன. சுருக்க அல்லது மடிக்கக்கூடிய குடைகள் முதன் முதலில் சீனாவிலேயே பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.[1][2] அத்துடன் அவ்வகை சீனக்குடைகள், இன்றைய குடைகள் போலவே நெகிழும் நெம்புகோல்|நெம்பு]]களைக் கொண்டிருந்தன.[3]

காலநிலை பாதுகாப்பு அல்லது பயன்கள்

வானிலை அறிவித்தல்

குடையானது வானிலை அறிவித்தலில் பயன்படுகின்றது; அதாவது மழையைக் குறித்துக்காட்டும் சின்னமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

புகைப்படம் எடுத்தல்

உட்பக்கம் பிரதிபலிக்கக் கூடிய குடைகள் சில புகைப்படக்காரர்களால் செயற்கை ஒளியைப் பரப்பக்கூடிய பரவல் சாதனமாகப் பயன்படுத்தப்படுகின்றது.

வெளி இணைப்புகள்

கண்டுபிடிப்புகளின் கதை: குடை குடையாம் காரணமாம்

மேற்கோள்கள்

  1. Chey, Ong Siew (2005). China condensed: 5000 years of history & culture (1st ed.). Singapore: Times Editions Marshall Cavendish. p. 170. ISBN 978-981-261-067-6.
  2. Weiss, Julian (2001). Tigers' roar: Asia's recovery and its impact. Armonk, New York: Sharpe. p. 76. ISBN 978-0-7656-0784-3.
  3. Ronan, Colin A. (1994). The shorter Science and civilisation in China: 4. Cambridge: Cambridge University Press. p. 42. ISBN 978-0-521-32995-8.
"https://tamilar.wiki/w/index.php?title=குடை&oldid=332359" இலிருந்து மீள்விக்கப்பட்டது