கெப்லர்-56
கெப்லர்-56 (Kepler-56) என்பது சிக்னசு விண்மீன் குழுவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும்.[1] இது நமது சூரியனை விட சற்று எடை கூடியது. இதன் இரண்டு கோள்கள் 2012 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்று நமது நெப்டியூன் கோளை விட சற்று சிறியதும், மற்றையது சனியை விட சற்று சிறியதும் ஆகும்.
| நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
|---|---|
| பேரடை | சிக்னசு |
| வல எழுச்சிக் கோணம் | 19h 35m 02s |
| நடுவரை விலக்கம் | +41° 52′ 19″ |
| தோற்ற ஒளிப் பொலிவு (V) | 13 |
| இயல்புகள் | |
| விண்மீன் வகை | G0V |
| வான்பொருளியக்க அளவியல் | |
| Proper motion (μ) | RA: 19:35:02 மிஆசெ/ஆண்டு Dec.: +41:52:19 மிஆசெ/ஆண்டு |
| விவரங்கள் | |
| திணிவு | 1.37 M☉ |
| ஆரம் | 3.14 R☉ |
| வெப்பநிலை | 4931° கெ |
| வேறு பெயர்கள் | |
கெப்லர்-56 | |
| தரவுதள உசாத்துணைகள் | |
| SIMBAD | data |
| Extrasolar Planets Encyclopaedia | data |
கோள் தொகுதி
2012 ஆம் ஆண்டில் கெப்லர் -56 இன் கோள் தொகுதி இடைவழி முறை (transit method) மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. கெப்லர்-56பி, கெப்லர்-56சி ஆகிய இரண்டு கோள்களினதும் சுற்றுப்பாதை அவற்றின் விண்மீனின் நிலநடுக் கோட்டில் இருந்து ஏறத்தாழ 45° சரிந்துள்ளது.[2]
| துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
|---|---|---|---|---|
| b | 0.07 MJ | 0.1028 | 10.5034294 | ? |
| c | 0.569 MJ | 0.1652 | 21.4050484 | ? |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Kepler-56, The Open Exoplanet Catalogue பரணிடப்பட்டது 2013-10-19 at the வந்தவழி இயந்திரம்