கேம் சோதனை
கேம் சோதனை (Ham test) என்பது தீவிர இரவுசார் சிறுநீரில்-சிவப்பணு நோயறிதலில் (PNH) பயன்படுத்தப்படும் இரத்த பரிசோதனை ஆகும். நோயாளியின் இரத்தச் சிவப்பணுக்கள் குறைவீரிய அமிலத்தில் வைக்கப்படுகின்றன. ஒரு நேர்மறையான முடிவாக அதிகரித்த இரத்தச் சிவப்பு அணுக்கள் உடையக்கூடிய தன்மை தீவிர இரவுசார் சிறுநீரில்-சிவப்பணு அல்லது பிறவிக் குறைபாட்டு அதிக அளவு இரத்தச் சிவப்பு அணுக்கள் சோகையைக் குறிக்கிறது.[1][2] குறைந்த உணர்திறன், தனித்தன்மையின் காரணமாக இச்சோதனை இப்போது தீவிர இரவுசார் சிறுநீரில்-சிவப்பணு கண்டறிதலில் வழக்கற்றுப் போன சோதனையாகும். [3]
| கேம் சோதனை | |
|---|---|
| நோய் கண்டறிச் செயல்முறைகள் |
தீவிர இரவுசார் சிறுநீரில்-சிவப்பணு நோயறிதலில் நான்கில் ஒரு பகுதியானது வளர்ச்சியுறா உயிரணு இரத்தச்சோகை நிலைக்கு முன்னேறும் போது, கேமின் சோதனை எப்போதாவது வளர்ச்சியுறா உயிரணு இரத்தச்சோகையில் நேர்மறையாக இருக்கும்.[4]
மேற்கோள்கள்
- ↑ Ham, Thomas H. (1937). "Chronic Hemolytic Anemia with Paroxysmal Nocturnal Hemoglobinuria". New England Journal of Medicine 217 (23): 915–7. doi:10.1056/NEJM193712022172307. https://archive.org/details/sim_new-england-journal-of-medicine_1937-12-02_217_23/page/n17.
- ↑ MedlinePlus Encyclopedia Ham test
- ↑ "Paroxysmal Nocturnal Hemoglobinuria - PNH". ARUP.
- ↑ Ferri, Fred F. (2015). Ferri's Clinical Advisor 2016 E-Book: 5 Books in 1. Elsevier Health Sciences. p. 140. ISBN 9780323378222.