கே. பி. சுதீரா (K. P. Sudheera) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மலையாள மொழி எழுத்தாளர் ஆவார். புதினங்கள், கவிதைகள், பயணக் குறிப்புகள், சுயசரிதைகள், நினைவுக் குறிப்புகள். மொழிபெயர்ப்புகள், கடிதங்கள் மற்றும் குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் 86 படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவரது பல படைப்புகள் இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருதை 2022 ஆம் ஆண்டில் கேரள சாகித்ய அகாதமி சுதீராவுக்கு வழங்கியது.[1]

கே. பி. சுதீரா
இயற்பெயர் கே. பி. சுதீரா
பிறந்ததிகதி 1958 (அகவை 67–68)
பிறந்தஇடம் கோழிக்கோடு மாவட்டம், கேரளம்
பணி எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்
தேசியம்  இந்தியா
குறிப்பிடத்தக்க விருதுகள் ஒட்டுமொத்த பங்களிப்புகளுக்கான கேரளச் சாகித்திய அகாதமி விருது
பெற்றோர் கே.சி. பத்மநாபன்
சாரதா
துணைவர் டி. எம். ரகுநாத்
பிள்ளைகள் அமித், அதுல்

வாழ்க்கை

கே. பி. சுதீரா 1958 ஆம் ஆண்டு கோழிக்கோட்டில் கே. சி. பத்மநாபன் மற்றும் சாரதா ஆகியோரின் மகளாகப் பிறந்தார்.[2][3][4] கோழிக்கோட்டில் உள்ள பி. இ. எம் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்த பிறகு, அரசுக் கல்லூரியில் விலங்கியலில் இளம் அறிவியல் பட்டம் பெற்றார். தற்போது வடக்கு மலபார் கிராம வங்கியின் கோழிக்கோடு பிராந்திய பிரிவின் மேலாளராக உள்ளார்.[5] கோழிக்கோடு வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றி வந்த டி. எம். ரகுநாத் என்பவரை மணந்தார். இவர்களுக்கு அமித் மற்றும் அதுல் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[5][6][7] இப்போது, சுதீரா தனது குடும்பத்துடன் கோழிக்கோட்டில் வசிக்கின்றனர்.[2]

இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய சுதீரா, கல்லூரியில் படிக்கும்போது அனைத்து கேரள கதைப் போட்டியில் பரிசை வென்றார்.[8] பின்னர், கிராமின் வங்கியில் சேர்ந்த பிறகும் எழுதுவதைத் தொடர்ந்தார். எழுத்தாளரும் இலக்கிய விமர்சகருமான எம். கிருஷ்ணன் நாயர், இவரது ஒரு கதையைப் பற்றி ஒரு நல்ல விமர்சனத்தை வெளியிட்டார்.[8]

கே. பி. சுதீரா எழுதிய ‘கங்கா’ என்ற நூலை எழுத்தாளர் பிரபாகரன் ஹெப்பர் இல்லம் இந்தியில் மொழிபெயர்த்ததற்காக பாலகிருஷ்ணா கோயங்கா அனூதித் சாகித்ய புரஸ்காரம் விருதைப் பெற்றார்.[9]

மேற்கோள்கள்

  1. "Kerala Sahitya Akademi Awards announced". mathrubhumi. 30 June 2023. Archived from the original on 2023-06-30.
  2. 2.0 2.1 "K P Sudheera". greenbooksindia.com.
  3. "KP Sudheera's two Malayalam books release on November 1 at SIBF 2019". https://www.theindian.news/sibf-2019-malayalam-writer-dr-k-p-sudheera-authored-two-books-will-be-released-on-november-1/. 
  4. "ഓർമയുടെ ഓഹരി". facebook. Archived from the original on 2023-08-13.
  5. 5.0 5.1 "From Azerbaijan with love". https://www.newindianexpress.com/states/kerala/2012/jul/10/from-azerbaijan-with-love-385436.html. 
  6. "കെ.പി. സുധീരയുടെ ഭർത്താവ് ടി.എം. രഘുനാഥ് നിര്യാതനായി" (in மலையாளம்). keralakaumudi. 2023-02-09. Archived from the original on 2023-08-07.
  7. "ഫോട്ടോഗ്രാഫർ ടി.എം രഘുനാഥ് അന്തരിച്ചു" (in மலையாளம்). madhyamam. 2023-02-09. Archived from the original on 2023-02-09.
  8. 8.0 8.1 മാതിരപ്പളളി, മനോജ്‌ (August 2011). "കഥകളിൽ സംഗീതവുമായി കെ.പി.സുധീര | പുഴ.കോം - നവസംസ്കൃതിയുടെ ജലസമൃദ്ധി".
  9. "Kamala Goenka Awards for Hindi Litterateurs". The New Indian Express. https://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/2015/nov/28/kamala-goenka-awards-for-hindi-litterateurs-849335.html. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கே._பி._சுதீரா&oldid=339613" இலிருந்து மீள்விக்கப்பட்டது