கம்ராசு மாசி (Kailash Puri)(17 ஏப்ரல் 1925 - 9 சூன் 2017) என்று பிரபலமாக அழைக்கப்பட்ட கைலாசு புரி ஓர் இந்திய எழுத்தாளரும், கவிஞரும், யோகா ஆசிரியரும், ஆலோசகரும் ஆவார். 1975ஆம் ஆண்டில், மார்க்சு & இசுபென்சரின் இந்திய ஆயத்த உணவுகள் பிரிவில் முதல் ஆலோசகரானார் ஆவார். இதே ஆண்டில் ஹைலைட்சு ஆஃப் இந்தியன் குக்கரி என்ற தனது சமையல் புத்தகத்தை வெளியிட்டார்.

கைலாசு புரி
இயற்பெயர் கைலாசு புரி
பிறந்ததிகதி 17 ஏப்ரல் 1925
பிறந்தஇடம் இராவல்பிண்டி
இறப்பு 9 சூன் 2017
புனைபெயர் கம்ராசு மாசி
பணி எழுத்தாளர்
ஆலோசகர்
கவிஞர்
யோகா ஆசிரியர்
பிள்ளைகள் 3

பிறப்பு

கைலாசு புரி 1925ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி[1] பிரிக்கப்படாத இந்தியாவிலிருந்த இராவல்பிண்டியில் சோகன் சிங் பூரி, பிரேம் தம்பதியரின் மகளாகப் பிறந்தார்.[2][3]

வாழ்க்கை வரலாறு

1943ஆம் ஆண்டு, தனது 16 வயதில், புரி கோபால் சிங் புரியை மணந்தார். இவர் இங்கிலாந்தில் இலண்டனில் ஆய்வு மேற்கொள்ள இந்திய அரசின் ஆராய்ச்சி நிதியுதவியினைப் பெற்ற விஞ்ஞானி ஆவார்.[3] 1945ஆம் ஆண்டு புரி அவருடன் இணைந்தார். இவர்களுக்கு 1947ஆம் ஆண்டு முதல் குழந்தை பிறந்தது (மகன்).[3] இவர்கள் 1950-இல் இந்தியா திரும்பினர்.[3] இளம் தாயாக, புரி சமையல், குடும்ப திட்டமிடல், திருமண உறவுகள் குறித்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். இவற்றை வாராந்திரப் பஞ்சாபி பத்திரிகையான சுபகவதியில் (1957-1965) வெளியிட்டார்.[3][4] புரி தனது கணவருடன் தேராதூன், புனே, அலகாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள இபாடன் மற்றும் குமாசிக்கும் கணவரின் பணிகாரமாகப் பயணித்தார்.[3]

1966ஆம் ஆண்டில், பூரிக்கு இரண்டு மகள்கள் பிறந்த நேரத்தில், மீண்டும் இங்கிலாந்துக்குத் திரும்பி, சுலோ மற்றும் சவுத்தாலில் குடியேறியனர்.[3] இவரது கணவர் பணிகாரமாக லிவர்பூலுக்குச் செல்வதற்கு முன்பு, இவர் தொழிற்சாலைகளிலும் பின்னர் ஹாரோ நிலப் பதிவுத் துறையிலும் பணிபுரிந்தார். இருப்பினும் இந்த வேலைப்பளுவுடன் பஞ்சாபி, சமையல் கலையையும் கற்பித்தார்.[3] லிவர்பூலில் இவர் பன்முகக் கலாச்சாரப் பிரிட்டன் குறித்து விரிவுரைகளை நிகழ்த்தினார். மேலும் சமூக உறவுகள் குழுவின் நிறுவன உறுப்பினரானார்.[3] இங்கு, இவர் முன்னாள் சுபகவதியை உள்ளடக்கிய ஓர் ஆங்கில, பஞ்சாபி பத்திரிகையான ரூப்வதியினை (1968-1974) வெளியிட்டார்.[4] தேஸ் பர்தேசுக்கு பங்களிப்பு செய்தார். மாதாந்திர பஞ்சாபி பத்திரிகையான கௌமி ஏக்தாவில், பாலியல் பிரச்சினைகள் குறித்த சிறப்புக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.[3] இவர் தனது வாழ்நாளில் பாலியல் குறித்து பத்துப் புத்தகங்களை எழுதியதால், கம்ராசு மாசி என்று பிரபலமாக அறியப்பட்டார்.[3] பஞ்சாபியில் மொழிபெயர்க்கக் கடினமாக இருக்கும் பாலியல் சொற்களுக்கு, பெண்குறிக் காம்பிற்கு "மதன் சத்ரி" (மன்மதனின் குடை), அதன் சுற்றியுள்ள முடிக்கு "பஷ்ம்" (பட்டு) உள்ளிட்ட புதிய சொற்களை உருவாக்கினார்.[2][3]

1975ஆம் ஆண்டில், இவர் மார்க்சு & இசுபென்சரின் இந்திய ஆயத்த உணவு வகைகளின் முதல் ஆலோசகரானார்.[2][5] இதே ஆண்டில் இவர் தனது சமையல் புத்தகமான ஹைலைட்சு ஆஃப் இந்தியன் குக்கரியை வெளியிட்டார்.[3]

21 வருடங்களாகப் புரி தனது கணவருடன் சேர்ந்து ஒரு யோகா மையத்தை நிர்வகித்து வந்தனர்.[6][7]

விருதுகள்

1982-இல் புரி பாய் மோகன் சிங் வைத் இலக்கிய விருதைப் பெற்றார்.[3] 1999ஆம் ஆண்டு ஈலிங்கின் மாநகரத்தந்தை இவருக்கு மில்லினியம் வுமன் விருதை வழங்கினார்.[3]

இறப்பு

கணவர் இறந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, சூன் 9, 2017 அன்று புரி ஈலிங் மருத்துவமனையில் இறந்தார்.[3]

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளியீடுகள்

  • இந்திய உணவு வகைகளின் மர்மங்கள் விளக்கப்பட்டது: இந்திய சமையலுக்கு ஆங்கிலேயரின் வழிகாட்டி (Mysteries of Indian Cuisine Explained: Englishman's Guide to Indian Cookery)(1975)
  • The Myth of UK Integration (in ஆங்கிலம்). Whittles Publishing. 2012. ISBN 978-184995-059-6.(பாப் விட்டிங்டனுடன் இணைந்து எழுதியது)
  • Pool of Life: The Autobiography of a Punjabi Agony Aunt (in ஆங்கிலம்). Liverpool University Press. 2014. ISBN 978-1-78284-067-1.(எலீனோர் நெஸ்பிட்டுடன் இணைந்து எழுதியது)

மேற்கோள்கள்

  1. "BBC Radio 4 - Last Word". BBC. Archived from the original on 1 February 2025. Retrieved 1 February 2025.
  2. 2.0 2.1 2.2 Chandan, Amarjit (4 July 2017). "Kailash Puri obituary". The Guardian இம் மூலத்தில் இருந்து 1 February 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250201094309/https://www.theguardian.com/books/2017/jul/04/kailash-puri-obituary. 
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 3.10 3.11 3.12 3.13 3.14 3.15 Nesbitt, Eleanor. "In Remembrance: Kailash Puri (1925-2017)" (PDF). Archived from the original (PDF) on 1 February 2025. Retrieved 30 January 2025.
  4. 4.0 4.1 Bebber, Brett (2024). "2. South Asians in Britain: Migration, settlement, and conflict". In Sahoo, Ajaya K. (ed.). Routledge Handbook of South Asian Migrations (in ஆங்கிலம்). Abingdon, Oxon: Taylor & Francis. p. 64. ISBN 978-1-032-35544-3.
  5. "The history of M&S prepared meals". www.marksandspencer.com. Archived from the original on 1 February 2025. Retrieved 1 February 2025.
  6. Newcombe, Suzanne (30 June 2019). "The undocumented history of female yoga teachers in Britain". The Independent. https://www.independent.co.uk/life-style/women/history-female-yoga-teachers-britain-india-a8968676.html. 
  7. Jewell, Albert (1999). Spirituality and Ageing (in ஆங்கிலம்). Jessica Kingsley Publishers. p. 171. ISBN 978-1-85302-631-7.

நூல் பட்டியல்

மேலும் படிக்க

"https://tamilar.wiki/w/index.php?title=கைலாசு_புரி&oldid=341045" இலிருந்து மீள்விக்கப்பட்டது