கோழஞ்சேரி
கோழஞ்சேரி (Kozhencherry) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில், மத்திய திருவிதாங்கூர் பிராந்தியத்தின் (தென் மத்திய கேரளம்) பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். 2011 ஆண்டைய இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஊரில் மொத்தம் 3,393 வீடுகள் உள்ளன. மக்கள் தொகை 12,021 ஆகும்.[1]
கோழஞ்சேரி | |
|---|---|
பஞ்சாயத்து | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | பத்தனம்திட்டா |
| அரசு | |
| • நிர்வாகம் | பேரூராட்சி |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 8 km2 (3 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 12,021 |
| • அடர்த்தி | 1,750/km2 (4,500/sq mi) |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 689 641 |
| தொலைபேசி குறியீடு | 91-468 |
| வாகனப் பதிவு | KL-03 |
| அருகில் உள்ள நகரம் | திருவல்லா, பத்தனம்திட்டா, செங்கன்னூர் |
| பாலின விகிதம் | 29:33 ♂/♀ |
| எழுத்தறிவு | 96% |
| மக்களவைத் தொகுதி | பத்தனம்திட்டா |
| சட்டமன்றத் தொகுதி | ஆறன்முளா |
| குடிமையியல் முகமை | கிராம பஞ்சாயத்து |
இந்த ஊரானது பம்பை ஆற்றின் கரையில் பத்தனம்திட்டாவிலிருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இங்கு பம்பை ஆற்றின் கரையில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் மாரமான் கிருஸ்தவ மாநாட்டிற்கு ஆசியா முழுவதிலிருமிருந்து பெருமளவில் கூடுவார்கள். ஆசியாவின் மிகப்பெரிய கிருஸ்தவ மாடாக இது கருதப்படுகிறது. இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்தும், வெளி நாடுகளிலிருந்தும் வரும் அறிஞர்கள் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுவார்கள்.[2]
குறிப்புகள்
- ↑ "Search Details: Kozhenchery". Census of India. Retrieved 1 September 2016.
- ↑ கேரளா ஒரு சுற்றுலா பார்வை, நூல், கலைமாமணி வி.கே.டி. பாலன், மதுரா வெளியீடு, 2005, பக்கம். 274