கோவை - 58 (CO - 58) என்பது, மேம்படுத்தப்பட்ட வெள்ளைப் பொன்னி இரகத்தையும், APO என்ற நெல் இரகத்தையும் இணைத்து உருவாக்கப்பட்ட தமிழகத்தின் நெல் வகையாகும். அதிக மகசூல் தரும் நெல் இரகமாக கருதப்படும் இது, பாசுமதி அரிசி போன்ற நறுமணம் கொண்ட,[2] நீண்ட மற்றும் மெல்லிய தானியத்தை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.[1]

கோவை - 58
CO - 58
வேளாண் பெயர்
CO - 58
பேரினம்
ஒரய்சா
இனம்
ஒரய்சா சாட்டிவா
கலப்பினம்
வெள்ளைப் பொன்னி / APO[1]
காலம்
118 - 124 நாட்கள்
மகசூல்
5858 கிலோ / எக்டேர்[1]
வெளியீடு
2024[2]
வெளியீட்டு நிறுவனம்
TNAU, கோவை
மாநிலம்
தமிழ் நாடு
நாடு
 இந்தியா

வெளியீடு

தமிழ்நாட்டின் கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU), 2024 ஆம் ஆண்டு, இந்நெல் இரகத்தை வெளியிடப்பட்டதாக அறியப்படுகிறது.[2]

மகசூல்

118 - 124 நாட்களில் அறுவடைக்கு வரக்கூடிய கோ 58 நெல் வகை, சராசரியாக தானிய மகசூல், ஒரு எக்டேருக்கு 5858 கிலோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பின் சம்பா, மற்றும் தாளடி பிசாணம் போன்ற மத்திய, மற்றும் நீண்டகாலப் பருவங்களில் பயிரிட ஏற்ற நெல் இரகமாக கூறப்படுகிறது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 1.3 "Paddy CO 58". tnauagricart.com (ஆங்கிலம்) - © 2024. Retrieved 2025-06-23.
  2. 2.0 2.1 2.2 "TNAU Releases Long Slender Aromatic-non-Basmati Rice". timesofindia.indiatimes.com (ஆங்கிலம்) -© Feb 4, 2024. Retrieved 2025-06-23.
"https://tamilar.wiki/w/index.php?title=கோவை_-_58&oldid=348602" இலிருந்து மீள்விக்கப்பட்டது