க. கந்தசாமி (K. Kandasamy)(பிறப்பு மார்ச்சு 09, 1932) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியினைச் சார்ந்தவர். உசிலம்பட்டி கழக உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினை முடித்துள்ளார். கந்தசாமி மதுரை, மதுரைக் கல்லூரி, சென்னை சட்டக் கல்லூரியில் கல்லூரி படிப்பினை முடித்துள்ளார். முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மூக்கையாத் தேவர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியின் தீவிர உறுப்பினர் ஆவார். இவர் 1971ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் ஆனார்.[1]

க. கந்தசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்பா. கா. மூக்கைய்யாத்தேவர்
பின்னவர்பா. கா. மூக்கைய்யாத்தேவர்
தொகுதிஉசிலம்பட்டி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1932-03-09)9 மார்ச்சு 1932
மதுரை
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
முன்னாள் மாணவர்
  • மதுரை-மதுரைக் கல்லூரி
  • சென்னை-அரசு சட்டக் கல்லூரி
தொழில்வழக்குரைஞர்

சட்டமன்ற உறுப்பினராக

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 உசிலம்பட்டி அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு 36,351 64.19

மேற்கோள்கள்

  1. Written at Madras. தமிழ்நாடு சட்டப் பேரவை ”யார் எவர்”. 01.01.1972: Tamil Nadu Legislative Assembly Department. 1971. p. 438.{{cite book}}: CS1 maint: location (link)
"https://tamilar.wiki/w/index.php?title=க._கந்தசாமி&oldid=309395" இலிருந்து மீள்விக்கப்பட்டது