சக்கலாலா (Chaklala), பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ராவல்பிண்டி மாவட்டத்தின் தலைமையிட நகரமான இராவல்பிண்டியின் புறநகர் பகுதியும், இராணுவப் பாசறை நகரம் ஆகும்.இது கடல்மட்டத்திலிருந்து 487 மீட்டர் உயரத்தில் உள்ளது. 2002ஆம் ஆண்டில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம், நிர்வாக வசதிக்காக இராவல்பிண்டி இராணுவப் பாசறை நகரத்திலிருந்து, சக்கலாலா இராணுவப் பாசறை நகரம் நிறுவப்பட்டது.

சக்கலாலா

چک لالہ کنٹونمنٹ

நகரம்
சக்கலாலா படையினர் பாசறை
சக்கலாலா is located in பாக்கித்தான்
சக்கலாலா
சக்கலாலா
ஆள்கூறுகள்: 33°36′00″N 73°06′20″E / 33.60000°N 73.10556°E / 33.60000; 73.10556
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
மாவட்டம்]ராவல்பிண்டி
ஒன்றியக் குழுசக்கலாலா
பரப்பளவு
 • மொத்தம்34.01 km2 (13.13 sq mi)
ஏற்றம்
487 m (1,598 ft)
மக்கள்தொகை
 (2023)
 • மொத்தம்3,33,115
 • அடர்த்தி9,795/km2 (25,370/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
46200
இடக் குறியீடு051
இணையதளம்www.ccb.gov.pk

சக்கலாலா நகரம் இராவல்பிண்டிக்கு வடகிழக்கே 6 கிலோமீட்டர் தொலைவிலும், இஸ்லாமாபாத்திற்கு வடமேற்கே 19.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இங்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நூர் கான் வான்படை தளம் உள்ளது.

சக்கலாலா நகரம் 34.01 km2 (13.13 sq mi) (8,405 ஏக்கர்கள்) பரப்பளவு கொண்டது. [1]2023ஆம் ஆண்டின் பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 3,33,115 ஆகும்.[2]இப்பாசறை நகரத்தில் உள்ள பெனாசிர் புட்டோ பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் சக்கலாலா தொடருந்து நிலையம் உள்ளது. இந்நகரத்திற்கு மேற்கே இஸ்லாமாபாத் விரைவுச் சாலை செல்கிறது.

மக்கள் தொகை பரம்பல்

2023ஆம் ஆண்டின் பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சக்கலாலா நகரத்தின் மொத்த மக்கள் தொகை 3,33,115 ஆகும். இந்நகரத்தில் பகாரி மக்கள், பஞ்சாபி மக்கள், பஷ்தூன் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.1947ஆம் ஆண்டு முதல் காஷ்மீரிகள் இந்நகரத்தில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

சக்கலாலா இராணுவப் பாசறை

 
சக்கலாலா நூர் கான் வான்படை தளத்தில் USAF C-17 போர் விமானம்

சக்கலாலா நகரத்தில் இராணுவக் குடியிருப்புகள், இராணுவத்தின் படையணிகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நூர் கான் வான்படை தளம் கொண்டுள்ளது.[3]மேலும் பாகிஸ்தான் இராணுவத்தின் முப்படைகளுக்கான கூட்டு தலைமையிடம் கொண்டுள்ளது. [4][4]

போக்குவரத்து

 
சக்கலாலா வான்படை தளம்

சக்கலாலா நகரத்தில் வான்படை தளம் உள்ளது.[3] வங்காளம் முதல் பெஷாவர் வரை செல்லும் பெரும் தலைநெடுஞ்சாலை சக்கலாலா நகரம் வழியாகச் செல்கிறது.

தொடருந்து நிலையம்

 
lசக்கலாலா தொடருந்து நிலையம்
 
நடைமேடை

பெஷாவர் முதல் கராச்சி வரை செல்லும் அனைத்து தொடருந்துகளும் சக்கலாலா தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.

வானூர்தி நிலையம்

கேந்திரிய முக்கியத்துவம் வாய்ந்த நூர் கான் வான்படை தளம் சக்கலாலா நகரத்தில் உள்ளது.[3]

கல்வி நிலையங்கள்

  • இராணுவப் பொதுப் பள்ளி & படைத்துறை கல்லூரி
  • சக்கலாலா கூட்டு இராணுவப் பள்ளி மற்றும் படைத்துறை கல்லூரி
  • சக்கலாலா வான்படை கல்லூரி (நூர் கான் வான்படை தளம்)[5]

2025 இந்தியா-பாகிஸ்தான் சண்டை

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற எதிர்ப்பு முன்னணியினர் நடத்திய 2025 பகல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து, இந்தியவின் பாதுகாப்புப் படைகள், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது நடத்திய 2025 சிந்தூர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சக்கலாலாவில் உள்ள நூர் கான் வான்படை தளத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் ஏவுகணைகளால் தாக்கி அழிக்கப்பட்டது. [6][7][8]

மேற்கோள்கள்

  1. "Overview". Rawalpindi Cantonment Board. Archived from the original on 5 March 2025. Retrieved 5 March 2025.
  2. "Table 2: Urban localities by population size and their population by sex, annual growth rate and household size: Census-2023" (PDF). Pakistan Bureau of Statistics. Retrieved 5 March 2025.
  3. 3.0 3.1 3.2 PAF Chaklala Benazir Bhutto Islamabad International Airport GlobalSecurity.org website, Retrieved 27 September 2021
  4. 4.0 4.1 Chaklala Cantonment on GlobalSecurity.org website Retrieved 27 September 2021
  5. "PAF College Chaklala". PAF College Chaklala. Retrieved 2024-09-23.
  6. India destroys another Chinese air defence system HQ-16 at Pakistan's Chakrala airbase
  7. Operation Sindoor: India's missile strikes in Pakistan level Nur Khan airbase, leaves huge crater in Rahim Yar Khan Airbase
  8. Satellite images show damage done by Indian strikes to Nur Khan, other Pakistan Air Bases
"https://tamilar.wiki/w/index.php?title=சக்கலாலா&oldid=349307" இலிருந்து மீள்விக்கப்பட்டது