சண்டாளன் (Chandala) (சமக்கிருதம்: चण्डाल) என்ற சமசுகிருத சொல்லிற்கு சுடுகாட்டில் பிணஞ்சுடுபவரைக் குறிக்கும். இவர்கள் சுடுகாட்டிலே பிணஞ்சுடும் தொழிலைப் பரம்பரையாகச் செய்து வருகின்றனர். தமிழில் சுடுகாட்டில் பணிபுரிபவர்களை வெட்டியான் என்று அழைப்பர். வங்காளத்தில் இம்மக்களை நாமசூத்திரர் என அழைப்பர்.

படிமம்:Portrait of a Man Belonging to the Chandal or Namasudra Caste (Ghasi sub-caste) - Eastern Bengal 1860's (2).jpg
கிழக்கு வங்காளத்தின் சண்டாளன் எனும் நாமசூத்திரர், ஆண்டு 1860

இவர்கள் நால் வகை வர்ணத்தவர்களுக்குள் அப்பாற்றப்பட்ட பஞ்சமர் (அவர்ணத்தவர்) என்றும் அழைக்கப்படுவர்.[1]கடும் குற்றம் புரிந்தோர்களுக்கு, நீதிமன்றங்கள் விதிக்கும் மரண தண்டனை நிறைவேற்றுபவர்களாக இச்சமூகத்தவர் உள்ளனர்.

இவர்களை இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பட்டியல் சமூகத்தவரில் சேர்த்துள்ளது.[2][3]

தொன்ம வரலாறு

மனுதரும சாத்திரத்தின்படி, வருணக் கலப்பு ஜாதியில் தோன்றும் பிரதிலோம சாதிகளில் கடைக்கோடி பிரிவினரே சண்டாளர்கள் ஆவார். அதாவது அந்தணர் அல்லாத இதர மூவகை வருணத் தந்தைகளுக்கு, அந்தணப் பெண்கள் மூலம் பிறந்தவர்களைச் சண்டாளர் எனும் பஞ்சம சாதியில் வைக்கப்படுவர்.[சான்று தேவை]

இதிகாசத்தில்

இராமாயணம் இதிகாசத்தில் இச்வாகு குல மன்னர் அரிச்சந்திரன் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பாகியான் குறிப்புகள்

4-5ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த பௌத்த அறிஞர் பாகியான் தனது பயணக்குறிப்பில் சண்டாள மக்களின் நிலையைக் குறித்துள்ளார்.[4][5]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Viswanath, Rupa (2014). The Pariah Problem: Caste, Religion, and the Social in Modern India. Columbia University Press. p. 268. ISBN 978-0-23116-306-4. Panchama means "of the fifth," and therefore outside the fourfold classical system of caste, or varna. Avarna, similarly means those outside the varna system. Chandala is a term referring to "unclean" castes and is used as a vlur in many parts of India.
  2. Chandrashekhar Bhat (1984). Ethnicity and Mobility. Concept publishing. pp. 2–3.
  3. S. M. Michael (1999). Untouchable: Dalits in Modern India. Lynne Rienner Publishers. pp. 3–4. ISBN 9781555876975.
  4. Faxian (1886). "On To Mathura Or Muttra. Condition And Customs Of Central India; Of The Monks, Viharas, And Monasteries.". A Record of Buddhistic Kingdoms. Translated by Legge, James.
  5. Bodhipaksa (2016). Vegetarianism. Windhorse. ISBN 978-19093-14-740.

மேலும் படிக்க

"https://tamilar.wiki/w/index.php?title=சண்டாளன்&oldid=347364" இலிருந்து மீள்விக்கப்பட்டது