சந்தலபள்ளி (Chendrapalli) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது அஞ்சூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

சந்தலபள்ளி

சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635203

பெயராய்வு

சந்தலு என்ற தெலுங்குச் சொல்லுக்குக் கம்பு என்பது பொருளாகும். இப்பகுதியில் கம்பு மிகுதியாக விளைந்த காரணத்தினால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம்

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் வகைபாடு

இந்த கிராமத்தில் 1,507 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 6,467 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3,201 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3,266 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 59.02% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.

மேற்கோள்

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 100. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  2. "Chendrapalli Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. Retrieved 2023-02-15. {{cite web}}: Text "villageinfo.in" ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=சந்தலபள்ளி&oldid=348200" இலிருந்து மீள்விக்கப்பட்டது