சலங்கோ தீவு
சலங்கோ தீவு (Salango Island) தென் அமெரிக்காவில் அமைந்துள்ள தீவாகும். சுமார் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பசிபிக் பெருங்கடலில் ஈக்வடோரில் உள்ள மனாபி மாகாணத்தின் கடற்கரையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் சலங்கோ நகருக்கு அருகில் இத்தீவு அமைந்துள்ளது.
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | அமைதிப் பெருங்கடல் |
| ஆள்கூறுகள் | 1°36′S 80°52′W / 1.600°S 80.867°W |
| பரப்பளவு | 1 km2 (0.39 sq mi) |
| நீளம் | 1,3 km (8.1 mi) |
| அகலம் | 1,15 km (71.5 mi) |
| உயர்ந்த புள்ளி | 75 மீ |
| நிர்வாகம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 0 |
| அடர்த்தி | 0 /km2 (0 /sq mi) |
சலங்கோ தீவு மச்சாலிலா தேசிய பூங்காவின் ஒரு பகுதியாகும். மேலும் இத்தீவு நீல-கால் பூபி எனப்படும் சுலா நெபோக்சி போன்ற கடற்பறவைகளின் தாயகமாகும். அதே நேரத்தில் தீவின் நீரில், எப்போதாவது திமிங்கலங்களையும் காண முடியும். சலங்கோ தீவின் சுற்றுப்புறங்களில் நீல-கால் பூபி, கடல் சிங்கங்கள் மற்றும் பெரிய பாறைகளைக் காண முடியும். இயற்கையின் அரிப்பு காரணமாகத் தோன்றியுள்ள[1] பாறைகளின் தனித்துவமான வடிவங்கள், கிங் காங் குரங்கு மற்றும் ராட்சத ஆமை போன்ற பெயர்களைப் பெறுகின்றன.[2][3]
படக்காட்சியகம்
-
சலங்கோ தீவு
-
சலங்கோ தீவு சுற்றுப்புறத்தில் நீல கால் பூபி கடற்பறவை
-
சலங்கோ தீவு சுற்றுப்புறத்தில் கடல் சிங்கங்கள்
-
சலங்கோ தீவு சுற்றுப்புறத்தில் கிங்காங் பாறை
-
சலங்கோ தீவு சுற்றுப்புறத்தில் ஆமைப் பாறை
மேற்கோள்கள்
- ↑ "Playa de Los Frailes, un paraíso en la Costa ecuatoriana". viveviajando. Retrieved March 14, 2023.
- ↑ "Un viaje a la isla Salango, un paraíso en el corazón de Manabí". eltelegrafo. December 14, 2014. Retrieved March 14, 2023.
- ↑ "Costas con detalles relevantes". viajalavida. April 6, 2015. Retrieved March 14, 2023.
வெளி இணைப்புகள்
- Island photo Wikimedia Commons
- Island photoWikimedia Commons
- Island map in Wikimapia