சாகலா சியா (Shahla Zia) பாக்கித்தான் நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரும் செயல்பாட்டாளரும் ஆவார். சேகலா சியா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார். 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். பெண்கள் உரிமைகளுக்காக வாதிட்டதற்காகப் பெயர் பெற்றார்.

சாகலா சியா
Shahla Zia
பிறப்பு(1947-02-12)12 பெப்ரவரி 1947
இலாகூர், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா
இறப்பு10 March 2005(2005-03-10) (aged 58)
இசுலாமபாத்து, பாக்கித்தான்
குடியுரிமைபாக்கித்தான்
படித்த கல்வி நிறுவனங்கள்பஞ்சாப் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி
பணிவழக்கறிஞர்

தனிப்பட்ட வாழ்க்கை

சாகலா சியா லாகூரில் ஒரு பஞ்சாபி முசுலீம் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை மகமூத் அலி கான் பாக்கித்தான் இயக்கத்தின் ஆர்வலராக இருந்தார். அதே நேரத்தில் இவரது தாயார் சத்னம் மகமூத் ஒரு கல்வியாளராக இருந்தார்.[1] 1960 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பயின்ற இவர், அங்கு சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றார், அவ்வாறு செய்த முதல் பாக்கித்தான் பெண்களில் ஒருவராக இவர் கருதப்பட்டார்.[1]

இவருக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் இருந்தனர் இவரது மகள்களில் ஒருவர் மாலிகா சியா லாரி என அறியப்படுகிறது. இவர் ஒரு வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலரும் ஆவார். தனது 58 ஆவது வயதில் ஒரு நோயால் பாதிக்கப்பட்டு சாகலா சியா இறந்தார்.

சட்டப் பணி மற்றும் செயல்பாடு

நிகர் அகமதுடன் இணைந்து பெண்கள் உரிமை அமைப்பான ஔரத் அறக்கட்டளை நிறுவனர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1980 ஆம் ஆண்டில் ஏசிஎச்எசு பெண்கள் சட்ட நிறுவனம் மற்றும் சட்ட உதவி மையத்தின் நிறுவனர்களிலும் ஒருவராகவும் இருந்தார். 1983 ஆம் ஆண்டில், லாகூர் உயர்நீதிமன்றத்தின் முன் 1983 ஆம் ஆண்டு சாட்சியச் சட்டத்தை எதிர்த்ததற்காக சியா பல பெண்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒரு ஆண் சாட்சியின் சாட்சியத்தை இரண்டு பெண்களுக்கு சமமாக வழங்கியது. மகளிர் நடவடிக்கை மன்றத்திலும் இவர் தீவிரமாக இருந்தார். பெண்கள் மற்றும் மத சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு காட்டும் சட்டங்களை எதிர்த்துப் போராடுவதில் சியா நற்பெயரை உருவாக்கிக் கொண்டார்.

பாக்கித்தானில் பெண்களின் நிலை குறித்து ஆராயும் ஆணையத்தில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார் சியா பணியாற்றினார் .[2] மேலும் 1997 ஆம் ஆண்டில் ஆணையம் எழுதிய அறிக்கையின் இணை ஆசிரியராகவும் இருந்தார்.[2] 1998 ஆம் ஆண்டில் பாக்கித்தானிய தேசிய சட்டமன்றம் பதினைந்தாவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சரியா சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தபோது, சியா பல அரசாங்க அமைப்புகளில் தனது பதவிகளைத் துறந்து வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

பாக்கித்தானிய உச்ச நீதிமன்றத்தில் 1994 ஆம் ஆண்டு வழக்கில் சியா பெயரிடப்பட்ட ஒரு வாதியாக இருந்தார். அதில் வாதிகள் சுகாதார அபாயங்களை மேற்கோள் காட்டி மின்சார நிலையம் கட்டுவதற்கு எதிராக சட்ட சவாலை முன்வைத்தனர்.[3] இந்த தீர்ப்பு பாக்கித்தானில் சுற்றுச்சூழல் சட்டத்தில் ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது, ஏனெனில் இது ஆரோக்கியமான சூழலுக்கான உரிமை அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்படுவதாகவும், வாழ்க்கை மற்றும் கண்ணியத்திற்கான உரிமைக்குள் வருவதாகவும் கூறியது.[4][5]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Shehla Zia (Pakistan)". WikiPeaceWomen. Retrieved 26 November 2016.
  2. 2.0 2.1 Mirsky, Judith; Radlett, Marty (2000). No Paradise Yet: The World's Women Face the New Century. Zed Books. ISBN 9781856499224. Retrieved 26 November 2016.
  3. "Ms. Shehla Zia v. WAPDA, PLD 1994 SC 693". ESCR-Net. Retrieved 26 November 2016.
  4. Hassan, Pervez; Azim, Azfar. "Securing Environmental Rights Through Public Interest Litigation in South Asia". Virginia Environmental Law Journal. http://www.velj.org/securing-environmental-rights.html. பார்த்த நாள்: 26 November 2016. 
  5. Haglund, LaDawn; Robin, Stryker (2015). Closing the Rights Gap: From Human Rights to Social Transformation. University of California Press. pp. 113–114. ISBN 9780520958920.
"https://tamilar.wiki/w/index.php?title=சாகலா_சியா&oldid=353027" இலிருந்து மீள்விக்கப்பட்டது