சாகை-I
சாகை-I (Chagai-I), பாக்கித்தான் முதன் முறையாக 28 மே 1998 அன்று, பலூசிஸ்தான் மாகாணத்தின் சாகை மாவட்டத்தில் உள்ள ராஸ் கோ மலைகள் அருகே 5 நிலத்தடி அணுகுண்டு சோதனைகள் நடத்திய இடமாகும்.[1][2] இந்த அணுகுண்டு 40 கிலோ டன் டி என் டி வெடிமருந்துக்கு சமம் ஆகும்.
இந்தியா மே 11 மற்றும் 13, 1998 இல் சக்தி நடவடிக்கை (Operation Shakti) அல்லது பொக்ரான் - II பொக்ரான் நிலத்தடியில் ஐந்து அணுகுண்டு சோதனைகளை நடத்தியதற்கு எதிராக பாகிஸ்தான் சாகை-I அணுகுண்டு சோதனைகள் செய்தது.
இதனால் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுவின் தீர்மானம் எண் 1172-ன் கீழ் இரு நாடுகளின் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தது. மேலும் 30 மே, 1998 அன்று அணு ஆயுதங்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் சேர்க்கப்பட்டது.
பின்னணி
பாகிஸ்தான் 1972களிலிருந்தே அணுகுண்டு பரிசோதனை செய்யும் திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின்படி, 28 மே 1998 அன்று பாகிஸ்தான் தனது முதல் அணுகுண்டு பரிசோதனையை சாகை-Iல் நடத்தியது.
சாகை-II
இரண்டாம் முறையாக பாகிஸ்தான் 30 மே 1998 அன்று பலூசிஸ்தான் மாகாணத்தின் காரன் மாவட்டப் பாலைவனத்தில் சாகை-II என்ற பெயரில் மீண்டும் அணுகுண்டு சோதனை செய்தது.[3] இந்த அணு ஆயுதம் 25 கிலோ டன் டி என் டி வெடி மருந்துக்கு சமம் ஆகும்.
இதன் மூலம் அணுகுண்டை ஆயுதமாக கொண்ட 8 உலக நாடுகளில் பாகிஸ்தான் எட்டாவது இடத்தை பிடித்தது.
மேற்கோள்கள்
- University of California, San Diego. "1998 Pakistan underground nuclear tests". eqinfo.ucsd.edu/. Broadband Seismic Data Collection Center, University of California, San Diego. Retrieved 1 June 2015.