சாய்ரைட்டு (Sayrite) என்பது Pb2(UO2)5O6(OH)24(H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். எக்சு-கதிர் படிகவியலாளர் டேவிட் சாயரின் பெயரிடப்பட்ட யுரேனைட்டின் ஒரு மாறுபாட்டு தயாரிப்பு ஆகும். சாயரைட்டு கனிமத்தில் ஐதரசன், ஆக்சிசன், யுரேனியம் மற்றும் ஈயம் ஆகியவை கலந்துள்ளன. காங்கோ சனநாயகக் குடியரசின் ஆட்-கட்டங்காவின் கம்போவ் மாவட்டத்தில் உள்ள சின்கோலோப்வே சுரங்கத்தில் (கசோலோ சுரங்கம்) சாய்ரைட்டு கனிமம் வெட்டப்படுகிறது. பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும், ஆனால் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறமாகவும் இருப்பதுண்டு. ஒற்றைச்சரிவச்சுப் படிக அமைப்பில் கனிமம் காணப்படுகிறது.[1][2]

சாய்ரைட்டு
Sayrite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுPb2(UO2)5O6(OH)24(H2O)+
இனங்காணல்
படிக அமைப்புஒற்றைச்சரிவச்சு
பிளப்புதனித்துவம்
அடர்த்தி6.76
ஒளிவிலகல் எண்1.77
இரட்டை ஒளிவிலகல்ஈரச்சு (-)
நிறப்பிரிகைஒப்பீட்டளவில் பலவீனம்
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சாய்ரைட்டு கனிமத்தை Syr[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

  1. "Sayrite: Mineral information, data and localities". www.mindat.org. Retrieved 2019-04-03.
  2. "Sayrite Mineral Data". webmineral.com. Retrieved 2019-04-03.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://tamilar.wiki/w/index.php?title=சாய்ரைட்டு&oldid=355412" இலிருந்து மீள்விக்கப்பட்டது