சாலிகுண்டம்
சாலிகுண்டம் (Salihundam,) வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும், பௌத்த நினைவுச் சின்னங்கள் கொண்டதுமான பண்டைய கிராமம் ஆகும்.[1] மலையில் உள்ள இக்கிராமம், வம்சதாரா ஆற்றின் தென் கரையில் உள்ளது. சிறீகாகுளம் நகரத்திலிருந்து 14 மைல் தொலைவில் உள்ளது.
சாலிகுண்டம் | |
|---|---|
பாதுகாக்கப்பட்ட பௌத்த நினைவுச் சின்னம் | |
| சிதைந்த சாலிகுண்டம் பௌத்தத் தூபி சிதைந்த சாலிகுண்டம் பௌத்தத் தூபி | |
| ஆள்கூறுகள்: 18°20′00″N 84°03′00″E / 18.33333°N 84.05000°E | |
| நாடு | |
| மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
| மாவட்டம் | சிறீகாகுளம் மாவட்டம் |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | தெலுங்கு |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 532405 |
| அருகமைந்த நகரம் | விசாகப்பட்டினம் |
| மக்களவைத் தொகுதி | சிறீகாகுளம் |
| சட்டமன்றத் தொகுதி | சிறீகாகுளம் |
1919ல் சாலிகுண்டம் கிராமத்தை அகழாய்வு செய்த போது, நான்கு பௌத்த தூபிகளும், விகாரைகளும், பௌத்த நினைவுப் பொருட்கள் கொண்ட பேழைகளும், பௌத்த சமய தேவதைகளான தாரா உள்ளிட்ட சிலைகளும் கண்டெடுக்கப்பட்டது.[2] இவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட மகாயானம், தேரவாதம் மற்றும் வஜ்ஜிராயனப் பௌத்தப் பிரிவுகளைச் சேர்ந்த நினைவுச் சின்னங்கள், கிபி 2ஆம் நூற்றாண்டு முதல் கிபி 12ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தவைகள் ஆகும்.
இதனையும் காணக
மேற்கோள்கள்
- ↑ Rao, K. Srinivasa (March 31, 2014). "Srikakulam waits for tourism package" (in en). The Hindu. http://www.thehindu.com/news/national/andhra-pradesh/srikakulam-waits-for-tourism-package/article5848783.ece. பார்த்த நாள்: 1 August 2017.
- ↑ Archaeological Survey of India. "Archeological Survey of India". asihyd.ap.nic.in (in ஆங்கிலம்). Hyderabad Circle. Archived from the original on 1 ஆகஸ்ட் 2017. Retrieved 1 August 2017.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.