சிந்தாதேவி
தமிழின் ஐம்பெரும் காப்பியம்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையில் கூறப்பட்டுள்ள பெண் தெய்வம் சிந்தாதேவி ஆவாள். உரையாசிரியர்கள் சிந்தாதேவியை சரசுவதி என்று என்று கூறுகின்றனர்.[1][சான்று தேவை] இவளது ஆலயத்தை கலைநியமம் என்பர். பௌத்த பிக்குகள் மனதை அடக்கும் சக்தியாக சிந்தாதேவியை வழிபட்டனர். சிந்தாதேவி ‘‘செழுங்கலைப் பாவை’’ என்றும் அழைக்கப்படுகிறார். சிந்தாதேவியின் இரு கைகளிலும் அமுதக் கிண்ணங்கள் இருக்கும்.[2] சிந்தாதேவி பௌத்த சமயத்தினர் போற்றும் கலைமகளாவாள். மதுரையில் சிந்தாதேவி வழிபாடு இருந்தது. காஞ்சிபுரத்தில் சிந்தாதேவிக்கு கோயில் உள்ளது.
மணிமேகலையில்
பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையில் சிந்தாதேவி ஆலயத்தில் வைத்து, சிந்தாதேவி ஆபுத்திரனுக்கு அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி பாத்திரத்தை வழங்கினாள் என்றும், அது பின்னாளில் மணிமேகலையின் கையை அடைந்து உலக உயிர்களுக்குப் பசிப் பிணியை நீக்கியது என்றும் மணிமேகலை காப்பியம் கூறுகிறது.
தற்போது சரசுவதி வடிவத்தில் சிந்தாதேவி வழிப்படப்படுகிறார்.[சான்று தேவை] சிந்தாதேவி என்பதற்கு மனதின் தெய்வம் என்று பொருள். மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்தால் சகல கலைகளும் தானே வந்து சேரும் என்பது பௌத்தர்களின் நம்பிக்கை.
மேற்கோள்கள்
- ↑ Porselvi (2024-10-16). "சிந்தாதேவி". Dinakaran. Retrieved 2025-04-25.
- ↑ செல்வராஜ், ச (2017-08-25). "பௌத்த, சமண சமயத்தில் பெண் தெய்வங்கள் - 2 (இயக்கியர் வழிபாடு)". Dinamani. Retrieved 2025-04-25.