சாத்தான்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
121.247.11.123ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>Sodabottle சி (121.247.11.184ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Sodabottle சி (121.247.11.123ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
== தொழில் மற்றும் சமூகம் == | == தொழில் மற்றும் சமூகம் == | ||
தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி(விஸ்வகர்மா) இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும்,பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி,மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர். | தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி(விஸ்வகர்மா) இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும்,பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி,மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர். | ||
== சாத்தான் குளம் வரலாறு == | |||
சாத்தன் சாம்பான் என்ற [[பறையர்]] குல குறுநில மன்னன் வெட்டிய குளத்தின் அருகே அமைந்துள்ள ஊர் என்பதால் சாத்தன் குளம் என்று பெயர் வந்தது பின்னர் அது திரிந்து சாத்தான்குளம் என்றானது. [[சாத்தன் சாம்பான்]] என்ற மன்னனை பற்றி இப்போது அறிந்து கொள்வோம் | |||
[[தூத்துக்குடி]] மாவட்டத்திற்குத் தெற்கிலுள்ள ஒரு நடுத்தர நகரம் [[சாத்தான்குளம்]]. இவ்வூரின் பெயரில் அமைந்த வட்டத்தின் தலைநகராகவும் இவ்வூர் விளங்குகிறது. இவ்வூரின் மையச் சாலைக்கு மேற்கில் ‘குத்துக்கல் தெரு’ என்ற பெயரிலான தெருவொன்றுள்ளது. | |||
தென் வடலாக அமைந்துள்ள இத்தெருவிலிருந்து கிழக்கிலும், மேற்கிலும் பிரியும் இரு சந்துகள் சிறு நாற்சந்தியொன்றை இத்தெருவிற்கு வழங்கியுள்ளன. இச்சந்தியில் தெருவின் மேற்கில் புதைக்கப்பட்ட கல் ஒன்று பார்வையில் படும்படியுள்ளது. இக் கல்தான் ‘குத்துக்கல் தெரு’ என்ற பெயரை இத்தெருவிற்கு வழங்கியுள்ளது. எல்லைக் கல் போன்று காட்சி தரும் இக்கல் கொடூரமான கொலையொன்றின் தடயமாக காலத்தைக் கடந்து நிற்கிறது. இதை அறிய ஒரு நூற்றாண்டுக்குப் பின் நோக்கிப் பயணிக்க வேண்டும். | |||
சாத்தான்குளத்தையும் அதைச் சுற்றியுள்ள [[பன்னம்பாறை]], [[நடுவக்குறிச்சி]], [[தட்டார் மடம்]], [[நெருங்குளம்]] ஆகிய கிராமங்களையும் சாத்தன் சாம்பான் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்தான். ஏராளமான நிலபுலங்கள் இவனுக்கு உரிமையாக இருந்தன. சாத்தாங்குளம் என்ற ஊர்ப்பெயருக்குக் காரணமான குளம் சாத்தன்சாம்பான் பெயரால் அமைந்தது . இளைஞனான இவனுக்குத் திருமணமாகவில்லை. குதிரையொன்றில் அமர்ந்து தன் பொறுப்பிலுள்ள கிராமங்களைப் பார்வையிடச் செல்வது இவனது வழக்கம். | |||
சாத்தன்குளத்தில் வளமான நிலையில் எட்டு வெள்ளாளர் குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர் சாத்தன் சாம்பானிடம் கணக்கராக வேலைபார்த்து வந்தார். இவரின் அழகான மகள் ஒருத்தி மீது சாத்தன் சாம்பானுக்கு ஆசை வந்துவிட்டது. ஒரு நாள் தன் கணக்கரை அழைத்து ‘இன்று இரவு உம் வீட்டுக்கு வருகிறேன் உம் மகளைக் குளித்துவிட்டு நல்ல சேலையுடுத்தி இருக்கச் செய்யும்’ என்று கூறி விட்டான். | |||
சாத்தன் சாம்பானின் ஆணையை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் வீட்டிற்கு வந்த கணக்கர் தம் உறவுக்காரர்களிடம் இது குறித்துக் கூறினார். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலந்தாலோசித்தனர். இறுதியில் ஒரு முடிவெடுத்தனர். | |||
கணக்கரின் வீட்டிற்கு, சாம்பான் வரும் பாதையில் உள்ள நாற்சந்தி போன்ற பகுதியில் ஆழமாகக் குழிதோண்டி, மூங்கிலை நார் போல் கிழித்துச் செய்யப்பட்ட பிரம்பம்பாய் ஒன்றால் அதை மூடி, அதன் மேல் சிறிதளவு மண்ணைப்போட்டு இயல்பான தோற்றம் இருக்கும்படிப் பார்த்துக் கொண்டனர். குழிக்குச் சற்றுத் தள்ளி வலுவான பாராங்கற்கள் சிலவற்றையும் போட்டுவிட்டு வழக்கம்போல் தம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொண்டனர். | |||
இரவு சாத்தன் சாம்பான் குதிரையில் வரும்போது குதிரையின் எடைதாங்காமல் பிரம்பம்பாய் குதிரையுடனும் சாத்தனுடனும் குழிக்குள் சாய்ந்தது. அவன் தடுமாறி விழுவதற்குள் வேளாளர் தாம் சேகரித்து வைத்திருந்த பாறாங்கற்களை அவன் மீது வீசி குற்றுயிருடன் இருந்த அவன் மீதும், குதிரையின் மீதும் மண்ணைப் போட்டுப் பரப்பி குழியைப் பழைய நிலைக்குக் கொண்டு வந்து விட்டனர். | |||
எதுவும் நடக்காததுபோல் மறுநாள் இயல்பாக தத்தம் வேலையைப் பார்க்கத் தொடங்கினர். பின்னர் அவர்கள் கனவில் தோன்றிய சாத்தன் சாம்பான் தனக்குக் கல்நடும்படி வேண்டினான். அவர்களும் அதன் படி கல் நட்டினர். அது தான் ‘குத்துக்கல்’ என்ற பெயரில் இன்று காணப்படும் கல். கொலையைச் செய்த வேளாளர்கள் சாத்தனின் ஆவி குறித்த பயத்தால் அவனைப் புதைத்த இடத்தில் நட்டிய கல்லுக்குப் பால் ஊற்றி அவ்வப்போது வழிபட்டனர். பின் இது நின்று விட்டது. | |||
பின்னர் சாத்தனின் உறவினர்கள் அவர்களது குலதெய்வமான அமராவதி அம்மனுக்கு நடத்தும் கொடை விழாவின் போது இக்குத்துக் கல்லுக்குப் படையல் இட்டு வழிபட்டுச் செல்லத் தொடங்கினர். | |||
சாத்தன் சாம்பான் குறித்த இக்கதை வடிவைக் கூறியவர்கள் வேளாளர் சமுகத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டார் வழக்காறுகள் குறித்த கள ஆய்வில், குறிப்பாக நாட்டார் தெய்வங்கள் குறித்த கள ஆய்வில் அத்தெய்வம் குறித்த கதையுடனும் வழிபாட்டு நிகழ்வுகளுடனும் தொடர்புடைய சாதியினர் அனைவரிடமும் தரவுகள் சேகரிக்க வேண்டும். அப்போதுதான் முழுமையான உண்மை வெளிப்படும். எனவே சாத்தன் சாம்பானைக் கொன்ற வேளாளர் தரப்பில் கேட்ட இக்கதை வடிவத்துடன் நின்று விடாமல் அவனது சுயசாதியினரிடம் வழங்கும் கதை வடிவைச் சேகரித்தபோது பல புதிய உண்மைகள் வெளிப்பட்டன.. | |||
சாத்தன் சாம்பானின் கொலை குறித்து வேளாளர் சமூகம் சார்ந்த தகவலாளி கூறிய கதை வடிவைப் பார்த்தோம். இந்த இதழில் சாம்பான் பிறந்த [[பறையர்]] ஆதிதிராவிடர் சமூகத்தினர் கூறிய கதை வடிவைக் காண்போம். | |||
சாத்தான்குளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களின் ஜமீன்தாராக சாத்தன் சாம்பான் விளங்கி வந்தான். இவன் வெட்டிய ஒரு குளத்திற்கு, இவனுடைய பெயரிட்டு அதன் அடிப்படையில் அக்குளத்தின் அருகிலுள்ள ஊரும் சாத்தன்குளம் என்று பெயர்பெற்று, காலப்போக்கில் சாத்தன்குளம் என்பது சாத்தான்குளம் என மருவியது. | |||
தன் ஆளுகையில் உள்ள ஊர்களைச் சுற்றிப் பார்க்க குதிரையில் வருவது இவனது வழக்கம். அப்படி வரும்போது ஒரு நாள் தன்னிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்த ராமுபிள்ளை என்பவரின் மகளான பாப்பம்மாளைக் கண்டு அவள் மீது காதல் கொண்டான். அப்பெண்ணும் அவனது காதலை ஏற்றுக்கொண்டாள். இரவு நேரத்தில் தன் குதிரையை அவள் வீட்டுச் சுற்றுச்சுவர் அருகில் நிறுத்திவிட்டு அவன் ஏறிக்குதித்து அப்பெண்ணுடன் உறவாடும் அளவுக்கு இருவரின் காதலும் வளர்ந்தது. | |||
இதை அறிந்த வெள்ளாளர்கள் அவனை பழிவாங்கத் திட்டமிட்டனர். வலிமை வாய்ந்த, தனி ஆளாக நின்று ஒரே சமயத்தில் பத்துக்கும் மேற்பட்டவர்களை சமாளிக்கும் திறன் கொண்ட அவனை நேரடியாக எதிர்க்க முடியாது என்பதையுணர்ந்து மலையாள மாந்தீரிகர்கள் சிலரை வரவழைத்து ஆலோசனை கேட்டனர். அவர்கள் கூறிய ஆலோசனையின் அடிப்படையில் இரவில், அவன் வரும் வழியில் குழிவெட்டி அதன்மீது, பிரப்பம்பாயை விரித்து மண்ணைத்தூவி அதை மறைத்தனர். அவர்கள் தெருவிலேயே குழிவெட்டியதால் பிறர் அறியாதவாறு செய்வது எளிதாயிற்று. | |||
வழக்கம்போல் குதிரையில் வந்த சாம்பான் பிரப்பம்பாயின் மீது குதிரை கால் வைத்ததும் குதிரையுடன் குழியில் விழுந்தான். திட்டமிட்டபடி பெரிய கற்களை எறிந்து அவனை எழவிடாமல் செய்து குதிரையுடன் புதைத்துவிட்டனர். | |||
மறுநாள் இச்செய்தியைக் கேள்வியுற்ற அவனது காதலி பாப்பம்பாள் அழுது அரற்றி தன் பெற்றோரையும், உறவினரையும் திட்டி சாபமிட்டாள். அதட்டல், மிரட்டல்களுக்கு அவள் அடங்காது போகவே அவளையும் அடித்துக் கொன்று தம் வீட்டிற்கு எதிரே இருந்த தோட்டத்தில் புதைத்து விட்டனர். சாத்தன் புதையுண்ட நாற்சந்திக்கு மிக அருகில் வடமேற்கில் கண்பார்வையில் படும்படி இத்தோட்டம் உள்ளது. இலந்தைப் புதர்கள் மறைவில் சிறுபீடம் ஒன்று அப்பெண்ணுக்குக் கட்டப்பட்டது. | |||
சாத்தன்குளத்திலுள்ள அமராவதி அம்மன் கோயில் ஆதிதிராவிடர்களுக்குரியது. இங்கு சாத்தன் சாம்பானின் தங்கை அமராவதியே தெய்வமாகியுள்ளாள் என்ற நம்பிக்கையும் உள்ளது. இக்கோயில் திருவிழாவின் போது பால்குடம் எடுத்து வந்து குத்துக்கல் மற்றும் பாப்பம்மாள் பீடம் என்ற இரண்டையும் வழிபட்டுச் செல்லத் தொடங்கினர். | |||
பாப்பம்மாள் இறந்து போகும் போது இட்ட சாபத்தினால் தான் அவளது குடும்பம் ஆண்வாரிசு அற்றுப் போய்விட்டது என்ற நம்பிக்கையும் உள்ளது. | |||
இதுவரை நாம் பார்த்த இரு கதை வடிவங்களில், இரண்டாவது கதை வடிவம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக உள்ளது. ஏனெனில் முதல் கதை வடிவத்தைக் கூறியவர்களிடம் அப்பெண் என்ன ஆனாள்? என்று கேட்டபோது ‘அதான் அவன் செத்துபோனான்லா’ அப்புறம் பயமல்லாம இருந்தாள் என்று கூறினார்கள். ஆனால் சாத்தன் நினைவாக நடப்பட்ட குத்துக்கல்லுக்கு மிக அருகில் அப்பெண்ணுக்கு கட்டப்பட்ட பீடம் குறித்து எதுவுமே கூறாது மறைத்து விட்டனர். | |||
மேலும், ஆதிதிராவிடர் தரப்பில் கூறிய கதை வடிவில் சாதிமீறிக் காதலித்தவர்களுக்கு வழக்கமாக நிகழும் தண்டனை இடம் பெற்றுள்ளது. சமூக நடப்பியலை மறைக்காது இக்கதை வடிவில் குறிப்பிட்டுள்ளனர். தன் சமூகத்தைச் சார்ந்த ஒருவனைக் காதலித்து அதன் விளைவாக மரணமான வேளாளர் சமுகப் பெண்ணை புறக்கணிக்காது தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். | |||
உழைக்கும் வர்க்கத்தின் மனிதநேய வெளிப்பாடாக இது அமைந்துள்ளது. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |