சாத்தான்குளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2676720 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2676720 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்))
வரிசை 26: வரிசை 26:
== தொழில் மற்றும் சமூகம் ==
== தொழில் மற்றும் சமூகம் ==
தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி(விஸ்வகர்மா) இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி,மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர்.
தங்க நகைத்தொழில் மற்றும் கட்டிட தொழிலை செய்யும் ஆசாரி(விஸ்வகர்மா) இனத்தவரும், பனை தொழிலை செய்யும் நாடார் இனத்தவரும், கூலி, வியாபாரம் மற்றும் பற்பல தொழில்களை மேற்கொள்ளும் பறையர் இனத்தவரும் இம்மண்ணில் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஏனைய சாதி,மதத்தினரும் இவ்வூரில் வசிக்கின்றனர்.
<big>'''<u>சாத்தன் ஜமீன்</u>'''</big>
தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு கடற்கரையை ஒட்டியுள்ள மிகவும் பழமையான ஊர் சாத்தான்குளம். இந்த ஊரில் பழைய பெயர் மரிக்கொழுந்த நல்லூர். இதைத் தலைமையிடமாகக் கொண்டு ஆண்டு வந்த ஜமீன்தார்தான் சாத்தன். இவர் காலத்தில் ஆட்சியோடு ஆன்மிகமும் பின்னிப்பிணைந்திருந்தது. தற்போது சாத்தான்குளத்தில் ஜமீன் கட்டிய அரண்மனை அழிந்துவிட்டது. மக்கள் சேவைக்காக அவர் வெட்டிய குளங்களும், அவர் வணங்கிய தெய்வங்களும், அவரையே தெய்வமாக வணங்கும் பண்பாடும், அவர் பெயரில் இந்த ஊரும் மங்கா புகழ் பெற்று வருகின்றன.
சாத்தன் ஜமீன்தாரின் முன்னோர்கள் பரம்பரை பரம்பரையாக நாடாண்டு வந்தவர்கள். ஒரு காலகட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட  பிரச்னையால் ஆங்காங்கே குறுநில மன்னர்களாக பிரிந்தனர். சாத்தன் ஜமீன்தாரும் தென் பாண்டிச்சீமையில் “மாநாடு” என்னும்  பெயர் பெற்ற ஊரில் தோப்பு துறவுகளுடன் வாழ்ந்து வந்தார்.
சோழப்பேரரசனான மூன்றாம் குலோத்துங்க சோழன் ஒரு காலத்தில் மதுரையை வென்று, பாண்டிய மன்னனைக் கொன்று, உண்மையான அரச வாரிசான பாணாசுரப் பாண்டியன் என்ற வாணக்கோவரையரான சாத்தன் சாம்பவனிடம் ஆட்சியை ஒப்படைத்தான். இவர்தான் ஜமீன் சாத்தனாரின் மூதாதையர்களில் முதலாம்வர் என்கிறது வரலாற்று குறிப்பு. அவர்களின் வாரிசுகள் இடையில் ஏற்பட்ட போரில் நாட்டை இழந்து தென்பகுதியில் ஆங்காங்கே வாழ்ந்து வந்தனர். அடைக்கலம் சாம்பன், வீரமணி சாம்பன், சடையன் சாம்பன் போன்றோரும் இவ்வாறே தென் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள்தான். சடையன் சாம்பன் பெயரில் சடையனேரி என்ற ஊர் மெஞ்ஞானபுரம் அருகில் உள்ளது. அரசபுத்தன் சாம்பன் என்பவர் பெயரில் அரசூர், புத்தன் தருவை ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன. ஆதிச்சன் சாம்பன் பெயரில் ஆதிச்சன்காடு என்ற ஆத்திக்காடு உள்ளது.
வன்னியராசா சாம்பன் என்பவர் பெயரில்  சாத்தான்குளத்தில் கீழ்பகுதியில் வன்னிய சாஸ்தா கோயில் உள்ளது. இந்தக் கோயிலை குலதெய்வமாக ஜமீன்தார் வாரிசுகள் தற்போதும் வணங்கி வருகிறார்கள். இந்த ஜமீன்தாரின் குலப்பெண்கள் மருதி சாம்பாத்தி, வீரி சாம்பாத்தி, அன்னபூரணி சாம்பாத்தி எனக் குறிப்பிடும்படி விளங்கினர். சாத்தன், ஜமீன்தாராக பொறுப்பேற்றிருக்கும் முன்பு குலசேகரபட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்ட குலசேகர மன்னனிடம் படை தளபதியாக இருந்துள்ளார். இவருக்கும் குலசேகர மன்னருக்கும் தொடர்பு வரக் காரணமே, மரிக்கொழுந்த நல்லூரில் கோயில் கொண்டுள்ள அழகம்மன்தான். ஒரு சமயம் பிள்ளைப் பேறின்றி மனம் வருந்தினார் குலசேகர ராஜா. பல கோயில்களுக்கு சென்று வந்தார். தனது துணைவியாரோடு தங்களுக்கு குழந்தை வரம் தரும் ஆலயங்களைத் தேடிச் சென்றார்.
அந்த சமயத்தில்தான் மரிக்கொழுந்த நல்லூரில் உள்ள அழகம்மன் கோயிலுக்கு ராஜாவை கூட்டி வந்தார் சாத்தன் ஜமீன். மரிக்கொழுந்த நல்லூரில் ஆட்சி செய்யும் அழகம்மன் சிறு  ஓலைக் குடிசையில்தான் முற்காலத்தில் அருள்பாலித்துள்ளார். அப்போது நிறைமாத கர்ப்பிணியான பெண் ஒருத்தி தன் கணவரிடம் சண்டையிட்டுப் பிரிந்து   இந்த வழியாக வந்தாள். உச்சி வெயில் மிகக் கடுமையாக வாட்ட, கோயிலுக்குள் தஞ்சம் அடைந்து விட்டாள். நாக்கு வறண்டது. கண் மறைத்தது. பிரசவ வலியும் வந்து விட்டது. “தாயே என்னை காப்பாற்று” என்று கதறி அம்மனைச் சரணடைந்தாள் அந்த பெண். அப்போது அழகம்மன், வயதான பெண் ரூபத்தில் வந்தார். அந்த பெண்ணை தாயின் கரிசனத்துடன்  மடியில் தாங்கினார்.
வலியில் துடித்த அந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி, பிரசவம் பார்த்தார். அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாய் அங்கிருந்து கிளம்பினர். அதிலிருந்து பிள்ளைபேறு வேண்டி நிற்பவர்கள் அழகம்மனே தஞ்சம் என்று அங்கு வந்து விடுவார்கள். திருமண வரம், குழந்தை பேறு வரம், நோயற்ற வாழ்வு வாழ அம்மனை தேடி வருபவர்கள் பலர். இதை பற்றி நன்கு அறிந்திருந்தார் சாத்தன். அதனால்தான் மகாராஜாவை இங்கு அழைத்து வந்தார். மகாராஜாவும் ராணியும் அழகம்மனை வணங்கி நின்றார்கள். அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். அலங்காரம் செய்து, பூஜைகளை மேற்கொண்டனர். கண்ணீர் மல்க இருவரும் நெடுஞ்சாண் கிடையாக கிடந்து குழந்தை வரம் கேட்டனர். அலங்காரத்தில் ஜொலித்த அம்மன், தனது கருணை பார்வையை அந்த தம்பதிகள் மீது பதித்தாள்.
அதன் நற்பலனாக அவர்களுக்கு மகப்பேறு கிட்டியது - அழகான பெண் குழந்தை. எனவே அழகம்மனை மறக்காமல்  நன்றி தெரிவிக்க  அடிக்கடி மரிக்கொழுந்த நல்லூர் வந்து  அழகம்மனை வணங்கி சென்றனர் ராஜ குடும்பத்தினர். கோயில் பூசாரியின் நல்வாழ்வுக்காக ஒரு தெருவையே எழுதி வைத்தார் ராஜா. அந்த தெரு “கரையாளர் தெரு” என அழைக்கப்பட்டது.. அழகம்மனை தனக்கு அறிமுகம் செய்த  சாத்தன்-ஜமீனுக்கு இந்த பகுதியில் பல கிராமங்களை  கொடுத்து, அவரை குறுநில மன்னராகவே நியமனம் செய்தார் மகாராஜா. இவரின் எல்லை கிழக்கே  மரிக்கொழுந்த நல்லூர் என்னும் சாத்தான் குளம், மேற்கே வள்ளியூர் சாத்தான்குளம், வடக்கே அம்பூரணி சாத்தான்குளம், தெற்கே கடல் என வரையறுக்கப்பட்டது. இந்த எல்கைகளுக்குள் இவரது ஆட்சி மிகச் சிறப்பாக நடந்தது.
ஆட்சிக்கு வந்த உடன் தனது பகுதியை வளப்படுத்த ஜமீன்தார் தவறவில்லை. கருமேனி ஆற்றில் பல தடுப்பணைகளை கட்டினார். புதிய குளங்களை வெட்டினார். இதனால் மரிக்கொழுந்த நல்லூரை சுற்றி பல குளங்கள் உருவாகின. வயல்கள் செழித்தன. ஊரும் செழித்தது. இவர் வெட்டிய குளங்களில் ஒன்று சாத்தன்குளம் என்றும், இவரது சகோதர்கள் பெயரில்  சீருடையார் குளம், உடையார்குளம், கடம்பன் குளம் என்றும் அழைக்கப்பட்டது.  சகோதரி பெயரில் அமராவதி குளம் ஒன்றையும் நிர்மாணித்தார். இந்த பகுதியில் வரி வசூல் செய்து, குலசேகர ராஜாவுக்கு கொடுத்து வந்தார் சாத்தன். இதனால் மானியமாக நிறைய குதிரைகளை கொடுத்தார் ராஜா. அந்தக்குதிரைகளைக் கட்டிவைத்து உணவு வைக்க ஒரு பெரிய இடத்தினை உருவாக்கினார். அந்த இடத்துக்கு அமுதுண்ணாக்குடி என்று பெயர்.
அழகம்மன் கோயில் பூஜை காரியங்கள் எல்லாவற்றையும் சாத்தன் ஜமீனே செய்து வந்தார். கோயிலில் நடைபெறும் 10 நாள் திருவிழாவை இவர்தான் நடத்துவார். இச்சமயத்தில் அவர் ராஜதர்பாரில் அமர்ந்து காட்சி தருவார். தற்போது இந்த சிறப்பு மிக்க ஆலயத்தில் ஜமீன்தார் வாரிசுகள் ஒருநாள் மண்டகப்படி நடத்தி வருகிறார்கள். இவருடைய அரண்மனை கருமேனி ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. மிக பிரமாண்டமான அந்த அரண்மனை எதிரிகளால் நிர்மூலமாக்கப்பட்டது. மிச்சமிருந்த அரண்மனை சுவடுகளும் ஆற்று வெள்ளத்தால் அழிந்து விட்டன. அரண்மனை இருந்ததற்கான அடையாளம் முற்றிலுமாக இல்லவே இல்லை. பொந்தன் கிணறு என்றவொரு கிணறு மட்டும் அங்குள்ளது. அதுவும் தூர்ந்து போய் கிடக்கிறது.  இந்தக் கிணறு அரண்மனையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது.
இங்கிருந்து ஜமீன்தார் நீர்போக்கில் ஆயுதங்களை அனுப்பியுள்ளார். அது எப்படி? இந்த கிணற்றுக்குள் ஆயுதங்களை போட்டால் அவை உடன்குடிக்கு சென்று விடுவாம். அந்த அளவுக்கு அமைப்பை ஏற்படுத்தி வைத்திருந்திருக்கிறார் ஜமீன். இவர் தன்னிடம் கணக்கராக வேலை பார்த்தவரின் மகள் பாப்பாத்தியம்மாளைக் காதலித்தார். இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். அந்தக் காலத்தில் சாதிமாறித் திருமணம் செய்துகொள்வது பெரும்பாவமாகக் கருதப்பட்டது. தெய்வ நம்பிக்கை மிகுந்த சாத்தன் ஜமீன்தார்,  இந்த பெண் தனக்கு மனைவியாக வேண்டும் என்று பல ஆலயங்களுக்கு சென்று வேண்டி வணங்கினார். தட்டார்மடம் அருகில் உள்ள வாலந்தூர் வைரவம் சிவன் கோயில், நடுவக்குறிச்சிக்கு தெற்கில் உள்ள சிவன் கோயில்,
அமுதுண்ணாக்குடி ஊர் மேற்புறத்தில் உள்ள சிவன் கோயில், சாத்தான்குளம் காசி விசுவநாதர் கோயில், பஞ்சதலங்களில் ஒன்றான கட்டாரி மங்களம் சிவன் கோயில், நங்கை மொழி அருகிலுள்ள  காளஹஸ்தி நாதர் கோயில், எழுவரை முக்கி கிராமத்தில் உள்ள கோயில் என்று இவர் போகாத கோயிலே இல்லை எனலாம். எல்லா கோயில்களிலும் இவர் மேற்கொண்ட ஒரே பிரார்த்தனை: பாப்பாத்தி தனக்கு மனைவியாக வரவேண்டும். அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார்.  தனது பூர்வீக ஊரான மாநாடு சிவன்கோயிலில் பூஜை செய்தார். ராம-லட்சுமணர் தாடகையை வதம் செய்த, விஸ்வாமித்திரர் யாகத்தை காத்த பகுதி இது. இங்குள்ள கோயிலில், தனிச்சந்நதியில் உள்ள விஸ்வாமித்திரருக்குத் திருப்பணி செய்தார் சாத்தன் ஜமீன்.
ஏழை எளிய மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கினார் எல்லாமே மகாராணியாக பாப்பாத்தியம்மாள் வரவேண்டும்... என்ற ஆசையால்தான். இதற்காக தினமும் கோயிலே கதி என்று தவமாய் தவமிருந்தார். தான் அலுவலகத்துக்கு பாப்பாத்தியம்மாள் வீடிருக்கும் தெரு வழியாகவே சென்றார்! விசாலாட்சி அம்மன் கோயில் தெப்பக்குளத்தில் காலையில எழுந்தவுடன் நீராடுவார். பிள்ளையாரை வணங்குவார். பின் கோயிலுக்குள் சென்று அன்னையையும், சிவனையும் வணங்குவார். அதோடு அருகில் உள்ள கணக்கர் வீட்டில் தனது மனைவியாக வரக்கூடிய பாப்பாத்தியம்மாளை பார்ப்பார். அவரை கண்டவுடனேயே ஒரு உற்சாகம் பிறக்கும். உடனே அங்கிருந்து கிளம்பி அழகம்மன் கோயிலை வந்தடைவார். அங்கு சிறப்பு பூஜை நடைபெறும். அதன் பின் தனது தமக்கை அமராவதி வீட்டில் தங்கிவிட்டு, பின் அரண்மனை வேலைகளை பார்க்கப் புறப்பட்டுவிடுவார்.
ஒருநாள் பாப்பாத்தியம்மாளை தனக்கு மனமுடித்து தரவேண்டும் என்று கணக்கரிடம் கேட்க. அவர் அதிர்ந்தே போய் விட்டார்.  ஜமீன்தாரை எதிர்க்கவும் முடியவில்லை. ஆனாலும், தாம் உயர்ந்த சாதி, சாத்தன் ஜமீன் தாழ்ந்த சாதி, எனவே அவருக்குப் பெண் கொடுக்க முடியாது. என்ன செய்வது என்று கணக்கர் யோசித்தார். தனது உறவுக்காரர்களை அழைத்துவந்தார்.  தினமும் சாமி தரிசனத்துக்காக ஜமீன்தார் தனது வீட்டு வழியாகத்தான் செல்வார். அந்த ஜமீன்தாரை உறவினர் உதவியுடன் கொலை செய்ய திட்டமிட்டார். தனது வீட்டுமுன் குழி வெட்டி அதன் மீது பொய்ப் பாதை அமைத்தார். குதிரையில் பாய்ந்து வந்த ஜமீன்தார் நிலை தடுமாறி பள்ளத்தில் விழ அவரை மணலால் மூடி அப்படியே புதைத்து விட்டனர்.
இதைக் கேள்விப்பட்ட பாப்பாத்தியம்மாளும் தனது காதலன் இறந்த இடத்திலேயே தற்கொலை செய்து கொண்டாள். அந்த இடத்தில் தற்போது ஜமீன்தாருக்கும், பாப்பாத்தி அம்மாளுக்கும் சுமைதாங்கி கல் பிரதிஷ்டை செய்து வணங்கி வருகிறார்கள். தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டது. அரண்மனை அடித்து நொறுக்கப்பட்டது. மேற்கு மறவர் பாளையத்துடன் போர் தொடுக்க வந்த திருவாங்கூர் மகாராஜாவின் படை இந்த வழியாக சென்ற போது சாத்தான்குளம் ஜமீன் அரண்மனையைத் தரைமட்டமாக்கி விட்டார்களாம். அரண்மனை பொருட்கள் எல்லாம் ஆங்காங்கே பதுக்கப்பட்டன. பொன்னும் பொருளும் வீணாக  போய் விட்டாலும் அவர் வணங்கிய கோயில்கள் மட்டும் சேதமடையவில்லை.
ஜமீன்தார் திருப்பணி செய்த கோயில்களும், வெட்டிய குளங்களும் அவரது பெயரை இன்றளவும் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. மரிக்கொழுந்த நல்லூரும் அவர் பெயரிலேயே சாத்தான்குளம் என்று மருவி விட்டது. ஜமீன்தார் கொலை செய்யப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் கல்லை பூஜை செய்து வணங்கி வருகிறார்கள். அவரை வணங்குபவர்களுக்குப் பணப் பிரச்னை தீருகிறது. கடன் தொலைகிறது என்கிறார்கள். சிலர் தொடர்ந்து ஜமீன்தாரை வணங்கினால் அவர் ராஜாவாக வாழ்ந்த போது ஒளித்து வைக்கப்பட்டிருக்கக்கூடிய பொன்னும் பொருளும் கூடிய பொக்கிஷம் தமக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். அதோடு, ஜமீன்தாரின் வாரிசுகள் தங்களின் ஊர் காத்த அம்மன் கோயிலில் ஜமீன்தார், பாப்பாத்தியம்மாள் சிலைகளை வணங்கி வருகிறார்கள். அழகம்மன் கோயிலில்  நடைபெறும் பூஜைகளில் ஜமீன் குடும்பங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
                                 '''முத்தாலங்குறிச்சி காமராசு'''
'''<big><u>நோய் தீர்த்து மக்கள் நலன் காத்த அம்மன்</u></big>'''
சாத்தான்குளம் அழகம்மன் கோயில் திருவிழா, மிகவும் சிறப்பு பெற்றது. இந்த பகுதியில் இத்திருவிழாவை காண கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து செல்வார்கள். சாத்தன் ஜமீன்தார் வாரிசுகள் தற்போதும், இத்திருவிழாவில் பங்கேற்று வருகிறார்கள். தமிழ் மாத முதல் செவ்வாய் அன்று அம்மன் சப்பரத்தில் வீதி உலா வருவார். இந்த கட்டளையை ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்து வருகிறார்கள். தை மாதம் முதல் செவ்வாய் கிழமை சப்பர பவனி கட்டளையை ஜமீன்தாரின் வாரிசுகள் செய்து வருகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் போது நடைபெறும் 12 நாள் திருவிழாவிலும் மண்டகபடி ஜமீன்தாரின் வாரிசுகளுக்கு உண்டு. குறிப்பாக 11 வது நாள் அன்னதான நிகழ்ச்சியை முன்னின்று நடத்துகிறார்கள். ஜமீன்தார் காலத்தில் கோயிலில் முக்கிய விழாக்கள் எல்லாம் அவர் ஆளுகைக்குள்தான் இருந்துள்ளன. அவர் இறந்த பிறகு, கோயில் கொடை விழாவில் ‘மதுக்குடம் பொங்குதல்’ என்னும் நிகழ்வு, ஜமீன்தார் நினைவாகவே நடந்து வந்துள்ளது.
இதற்கான  பனைமரம் ஒன்று வெட்டப்பட்டு,  அதில் மது பொங்க வைத்து, அதை ஒரு மண்பானையில் ஊற்றி, ஒருவர் தலையில் சுமந்து வர, அம்மனுக்கு அபிஷேகம் செய்வார்கள். ஜமீன்தார் நினைவாக நடந்த இந்த நிகழ்வு தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. நாலாவட்டத்தில் கொடை விழா நிறுத்தப்பட்டு, திருவிழா மட்டுமே நடக்கிறது. பாப்பாத்தியம்மாளை வணங்கும் வழக்கமும் உள்ளது. சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்துக்கு பின்பக்கம் பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பாப்பாத்தியம்மாளுக்கு சிலை வைத்து வணங்குகிறார்கள். திருமணத் தடை, குழந்தைப் பேறின்மை மற்றும் மகளிர் நோய்க்கு நிவாரணம் வேண்டி பாப்பாத்தியம்மனுக்கு அபிசேகம் செய்து வேண்டிக்கொண்டால் வேண்டிய வரம் கிடைக்கிறது. இங்கு தனிச்சந்நதியில் சிவனைந்த பெருமாள் கொலுவிருக்கிறார். இங்கு பிறக்கும் தங்கள் குழந்தைகளுக்கு பெருமாள் என்றே பெற்றோர் பொதுவாகப் பெயரிடுகிறார்கள்.
பாப்பாத்தியம்மாளை, பெருமாள் கோயிலோடு இணைத்து பிரதான தெய்வமாகவே வணங்கி வந்தனர். கும்பாபிஷேகத்தின்போது  தனிச்சந்நதியில் பாப்பாத்தியம்மாளை சிவனைந்த பெருமாளுடன் வைத்து வணங்கி வருகிறார்கள். வைகாசி மாதம் கடைசி வாரம், அதாவது, ஊர்காத்த அம்மன் திருவிழாவிற்கு 10 நாட்கள் முன்பு, பாப்பாத்தியம்மன் கோயிலில் திருவிழா நடைபெறும். இதில் பாப்பாத்தி அம்மனுக்கு ஜமீன்தார் வாரிசுகள் பொங்கலிட்டு வணங்குவார்கள்.  ஜமீன்தாரின் வாரிசுகள் வணங்கும் கோயில்களில் மற்றும் ஒன்று, ஊர்காத்த அம்மன் கோயில். இங்கு சாத்தன் ஜமீனை சிலையாக வைத்து வணங்கி வருகிறார்கள். இக்கோயிலில் மாரியம்மன், முத்தாரம்மன், பத்ரகாளி ஆகியோர் சந்நதியில் உள்ளனர்.  இக்கோயில் கல்மண்டபம் அதன் பழமையை, தொன்மையை நமக்குப் புலப்படும்.
இந்த தெய்வங்களுக்கு ஊர்காத்த அம்மன் என்று பெயர் வரக் காரணம் என்ன? சுமார் 150 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் பெரும் காலரா நோய் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான மக்கள் மாண்டு விட்டனர். ஊர் மக்கள் செய்வது அறியாமல் தவித்தார்கள். என்ன செய்வது, யாரிடம் உதவி கேட்பது புரியாமல் தவித்தனர். இறுதியில் அம்மனையும், ஜமீன்தாரையும், பாப்பாத்தியம்மாளையும் வணங்கி நின்றனர். அப்போது பூசாரி, அருள் வந்து கோயில் முன்புள்ள நடுக்கல்லை அப்புறப்படுத்தினால், காலரா நோய் மறையும் என்றார். அதன்படி அந்த நடுக்கல் சாய்க்கப்பட்டு, படிக்கல்லாக்கபட்டது. அதன்பின் காலரா நோய் மறைந்துவிட்டதாம். காலரா நோயிலிருந்து இந்த மூன்று தேவிகளும் தங்களை காத்த காரணத்தினால் மூவரையும் சேர்த்துப் பொதுவாக ஊர்காத்த அம்மன் என்று மக்கள் அழைக்க ஆரம்பித்து விட்டனர். கோயில் உள்ளே உள்ள கல் மண்டபத்தில் கிழக்கு நோக்கி வீரபுத்திரர் உள்ளார். மேற்கு நோக்கி பைரவர் உள்ளார். இருவருமே எதிரிகளை வலுவிழக்க செய்யும் தெய்வங்கள்.
கோயில் வளாகத்தில் தங்கம்மன் உள்ளார். பயிர்த் தொழில் புரியும் விவசாயிகளுக்கு நல்ல பலமும், வளமும் வழங்கக்கூடிய தெய்வம். இந்த ஆலயத்தில் கோயிலுக்கு இடது புறம் திறந்த வெளியில் மூன்று பூடங்கள் உள்ளன.  ஊர்காடு சுடலை மாடன், கரையடி மாடன் ஆகியோருடன் சாத்தன் ஜமீன் ஆகியோர் பூட வடிவத்தில் இங்குள்ளார்கள். கோயில் திருவிழாவின்போது சாத்தன் ஜமீன் உருவம் செய்யப்பட்டு மிக விமரிசையாக கொடை விழா நடைபெறும். ஜமீன்தார் யாரோ வைத்த சூனியம் காரணமாகவே இறந்தார் என்று சொல்கிறார்கள். எனவே தன்னைப்போல் தன் வாரிசுகளுக்கும் சூனிய பாதிப்பு ஏற்படக்கூடாது என்று அவர்களை இன்றளவும் காப்பாற்றி வருகிறார் சிலைவடிவாக இருக்கும் ஜமீன்தார் என்றும் நம்பிக்கை நிலவுகிறது. எனவே ஜமீன்தாரை வணங்கினால்  பில்லி சூனிய பாதிப்புகள் நெருங்குவதில்லை என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.
ஜமீன் காலத்தில் இந்த ஆலயம் ஓலைக் குடிசையில் இருந்துள்ளது. வரம் தருவதில் வள்ளலாய் இருந்த அம்மனை வணங்கிய காரணத்தினால் மக்களும் வளர்ச்சி கண்டனர். அதற்கு நன்றி காணிக்கையாக தற்போது அவர்கள் அம்மன் ஆலயத்தினை மிக பிரமாண்டமாக கட்டியுள்ளார்கள். இந்தக் கோயில் கொடை விழாவை வீர விளையாட்டு விழாவாகவே ஜமீன்தார் வாரிசுகள்கொண்டாடுகிறார்கள். கோயில் கொடை விழா என்றாலே, முதல் பூஜை ஜமீன்தார் இறந்த இடத்தில் வைக்கப்பட்ட நடுக்கல்லுக்குதான். அங்கு பூஜை செய்யப்பட்ட பின்பு அங்கிருந்து ஊர்வலமாக வந்து ஊர்காத்த அம்மன் கோயிலுக்கு வருவார்கள். பின் குடியழைப்பு நடைபெறும் ஆனிமாதம் தோறும் 10 நாள் திருவிழா நடைபெறும். அதன்பின் திருச்செந்தூர் கடலில் இருந்து  தீர்த்தம் எடுத்து  வருவார்கள்.
அந்த தீர்த்தம் அழகம்மன் கோயிலில் வைக்கப்படும். பின்பு மேளதாளத்துடன் அழகம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை  நடைபெறும். அதன் பிறகே ஊர்காத்த அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக  வருவார்கள். பின் அங்கு அனைத்து தெய்வங்களுக்கும் அபிஷேகம் ஆராதனை நடைபெறும்.
செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு மாக்காப்பு சாத்தப்பட்டு, மதிய கொடை நடைபெறும். அன்று இரவு, சாமக்கொடை. அதோடு நாடகம், கச்சேரி, பட்டிமன்றம், கும்மி போன்ற கலை நிகழ்ச்சிகளும் அவற்றுக்கான பாரம்பரிய இசையும் மக்களை மகிழ்விக்கும். முக்கியமாக கலை நிகழ்ச்சிகளில் ஜமீன்தார் புகழ் பாடப்படும். புதன்கிழமை முளைப்பாரி மற்றும் தீச்சட்டி ஊர்வலம்  நடைபெறும். அழகம்மன் கோயிலில் ஊர்வலமாக முளைபாரி மற்றும்  தீச்சட்டியுடன்  புறப்படும் பக்தர்கள் கூட்டம் வீதி முழுக்க நிறைந்து இருக்கும். இவர்கள் சாத்தான்குளத்தில் வீதி தோறும் சென்று இறுதியில் ஊர்காத்த அம்மன் கோயிலை வந்தடைவார்கள்.
வியாழக்கிழமை இரவில் சப்பரத்தில் ஊர்காத்த அம்மன் புறப்பாடாவார். இந்த சப்பரம் முன்பு ஜமீன்தாரின் வாரிசுகள் சிலம்பாட்டம், தீப்பந்தம், சுருள் விளையாட்டு உள்பட பல வீர சகாசங்களைச் செய்து காட்டுவார்கள். வெள்ளிக்கிழமை இரவு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்வார்கள். கோமரத்தான்கள் (சாமியாடிகள்) தங்கள் நிலை மறந்து தெய்வ நிலையில் பூக்குழி இறங்கி அம்மன் அருள்பெருகிறார்கள். நோய் தீர வேண்டியும், நோய் அண்ட கூடாது என்று வேண்டியும், பூக்குழி இறங்குபவர்களும் உண்டு. ஜமீன்தார் வாரிசுகள் கொண்டாடும் மற்றுமொரு திருவிழா, வன்னிராஜா கோயில் திருவிழா. ஜமீன்தாரின் அரண்மனை இருந்ததாக கருதப்படும், கருமேனி ஆற்றங்கரையில்தான் வன்னிராஜா கோயில் உள்ளது. சாத்தன் ஜமீன்தாரின் மூதாதையார் தான் வன்னி ராஜா. இவர் பெயரில் தான் சாஸ்தா கோயில் உருவானது.
இங்கு பாலசுந்தர சாஸ்தாதான் பிரதான தெய்வம், வன்னி ராஜாவுக்கும், வன்னியம்மனுக்கும் தனித்தனி பீடம் உள்ளது. எந்த அளவுக்கு அழகம்மன் மீது தீவிர பற்று வைத்திருந்தாரோ அந்த அளவுக்கு வன்னி சாஸ்தா மீதும் தீவிர பற்று கொண்டிருந்தார் ஜமீன்தார். அவர் காலத்தில் மிக பிரமாண்டமாக இந்தக் கோயில் இருந்திருக்கிறது. சொல்ல போனால் அரண்மனையில் பெட்டகமே இங்குதான் இருந்துள்ளது. பொன்னும் பொருளும் ஜமீனில் குவிந்து கிடந்தன. அரண்மனையில் சேர்த்து வைத்திருந்த தங்க சாமான்களே 21 மாட்டு வண்டிகளுக்கு இருக்குமாம். ஜமீன்தார் தங்கத்தால் ஆன விதவிதமான அணிகலன்களை தனது மார்பிலும், தலையிலும் ,கழுத்திலும் சூட்டிக்கொள்வாராம். அரண்மனையில் உள்ள படை வீரர்கள், பணியாளர்களுக்கு பொங்கி போடுவதற்கு அண்டா குண்டா என வெண்கல பாத்திரங்கள்  நூற்று கணக்கில் அரண்மனை வளாகத்தில் ஆங்காங்கே கிடக்குமாம்.
தொடர்ந்து ஜமீன்தார் மீது படையெடுப்பு நடந்த காரணத்தினால் அரண்மனை அழிக்கப்பட்டது. அந்த கால கட்டத்தில் அவருக்கு பாத்தியப்பட்ட பொன்னும் பொருளும்  புதைக்கப்பட்ட இடம் இந்த வன்னி ராஜா கோயில்தான். 7 அண்டாவில் பணம், 7 அண்டாவில் பொன், 7 அண்டாவில் பல அணிகலன்கள் ஆகியவை கோயில் வளாகத்தில் புதைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இது செவிவழி கூற்றுதான் என்றாலும் கூட, சிலர் இந்தக் கோயிலில் அந்த பொக்கிஷத்தைத் தேட கோயில் நிலத்தைத் தோண்டியிருக்கிறார்கள்! நரபலி கொடுத்தால் புதையல் கிடைக்கும் என நம்பி பலரை நரபலி கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளனவாம். கர்ப்பிணியான, ஊசி பாசிமணி விற்கும் ராட்டிசி என்ற ஒரு பெண்ணை பலியிட்டனர் என்றும், “நான் கதறக் கதற பலியாக்கிய உன் இனம் அழியும்”, என்று சாபமிட்டாளாம்.
அதன்படி தொடர்ந்து புதையல் எடுக்க முயற்சி செய்த அந்தக் குடும்பத்தினர் பலர் மர்மமாக இறந்திருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. எனவே அந்தக் குடும்பத்தின் தற்போதைய வாரிசுகள் ராட்டிசிக்கும் ஒரு பூடம் போட்டு வணங்குகிறார்கள். அந்த பூடம் கோயில் முன்பு உள்ளது. பங்குனி உத்திர தினத்தன்று திருவிழா மிகச்சிறப்பாக நடக்கும். பாலசுந்தர சாஸ்தாவுக்கு சைவ பீடம் போட்டு வணங்குவார்கள். வன்னி ராஜாவுக்கும், வன்னிச்சி அம்மாளுக்கும் கிடா வெட்டுவார்கள். பரிவார தெய்வங்களுக்கு  அசைவ படப்புதான். சாத்தன் ஜமீன்தார் வரலாறு வில்லுப்பாட்டு மற்றும் கும்மி பாட்டாகப் பாடப்படும். வருடந்தோறும் ஜமீன்தார் கொண்டாட்டம் சாத்தான்குளத்தில் நடந்துகொண்டே இருக்கிறது.
'''முத்தாலங்குறிச்சி காமராசு'''


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/><code>''<big>http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=10576</big>''</code>
<references/>


<code>''<big>http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=10726</big>''</code>
{{தூத்துக்குடி மாவட்டம்}}
<br />{{தூத்துக்குடி மாவட்டம்}}


[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/116939" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி