குடவாசல் ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>InternetArchiveBot
(Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
வரிசை 6: வரிசை 6:
குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 [[கிராம ஊராட்சி]] மன்றங்களின் விவரம்;<ref>[https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2018/06/2018061339-1.pdf குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்]</ref>
குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 [[கிராம ஊராட்சி]] மன்றங்களின் விவரம்;<ref>[https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2018/06/2018061339-1.pdf குடவாசல் ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்]</ref>


{{refbegin|3}}
'''குடவாயில் –(குடவா)'''
 
கும்பகோணம்-திருவாரூர் பேருந்து வழித்தடத்தில் உள்ள குடவாசல் திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்தின் தலைமையிடமாக உள்ளது. இவ்வட்டத்தின் கீழ் 2 பேரூராட்சிகளும், 86  ஊராட்சிகளும், அதற்கு   உள்ளடங்கிய 351  ஊர்களும் உள்ளன. இவ்வூர் சோழ சுடமணியாற்றின் வடகரையில் அமைப்பெற்றுள்ளது. மேலும் பல்லவர் கால கல்வெட்டு உள்ள சேங்காழிபுரம் என்ற ஊருக்கு மேற்காக உள்ளது.  இவ்வூர் தொடர்பான செய்தி சங்க இலக்கியமான அகநாநூற்றிலும், நற்றினையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
‘தண் குடவாயில் அன்னோள்..                
 
                                                                   அகம்-44
 
‘தேர்வண் சோழர் குடந்தை வாயில்.. ‘
 
                                                            நற்றிணை- 44
 
கொற்றச்சோழர் குடந்தை வைத்த நாடுதரு நிதி....’
 
                                                                     அகம்-60
 
 
சங்க இலங்கியங்களில் குடவாயில் என்றும், குடந்தை என்றும், குடந்தை வாயில் என்று குறிப்பிடப்படும் இடப்பெயர்கள் யாவும் இன்றைய குடவாசலே என்று இப்பாடல்களுக்கு உரை எழுதிய உ.வே. சாமிநாதர், பின்னத்தூர் நாராயணசாமி, மற்றும் பெருமழைப்புலவர் சோமசுந்தரனார் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
 
சோழன் கோச்செங்கணான்., சேரமான் கணைக்கால் இரும் பொறையை வென்று, அவனை இக்குடவாயிற் சிறைக் கோட்டத்தே சிறை வைத்தான் என்னும் செய்தி புறநானூற்றால் அறியமுடிகிறது. இதனால் அன்றைய குடவாயில், சங்க கால சோழர்களின் சிறைக்கோட்டமாக இருந்ததெனத் தெரிகின்றது. சோழநாட்டு நிதியம்(கருவூலம்) குடந்தையில் வைத்து காக்கப்பட்டதை  அகநானூறு குறிப்பிடுகிறது.
 
குடவாயில் கீரத்தனார், குடவாயில் நல்லாதனார் போன்ற புலவர்கள் பாடியுள்ள பாடல்கள் அகநானூறு, நற்றினை முதலிய சங்க இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. மேலும் “குடவாயில் கோட்டம்” என்று அறியப்படும் குடவாயில் ஒரு பாதுகாப்பான மதில்சூழ் நகரமாக தொடர்ந்த செய்தியினை அப்பர் இயற்றிய தேவாரப்பதிகங்களிலும் இடம்பெறுகின்றது.
 
''                        '' வரையார் திரள்தோள் அரக்கன் மடியவ்
 
                         வரையார வொர்கால் விரல்வைத்த பிரான்
 
                         வரையார் மதில்சூழ்  குடவாயில் மன்னும்
 
                         வரையார் பெருங்கோயில்மகிழ்ந் தவனே.
 
                                                                                      இரண்டாம் திருமுறை 02.022.8
 
என்று பாடியுள்ளதை கொண்டு  இவ்வூர்  ஒரு மதில் சூழ்ந்த ஒரு பாதுகாப்பான பகுதியாக பொ.ஆ ஏழாம்  நூற்றாண்டிலும் இருந்திருப்பதை அறியமுடிகிறது.  மேலும் குடவாயில் உள்ள தேவார பாடல்பெற்ற இம்மாடக்கோயில் (கோணேரீஸ்வரர்)  பெருங்கோயில் என்று  தேவாரபாடல்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஆய்வு பகுதியில் உள்ள நன்னிலம் மாடக்கோயிலும் பெருங்கோயில் என்று அப்பர் தேவாரப்பதிகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இறைவனது பெயர் தேவாரர பதிகங்களில் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக “நிலத்தவானே” என்று பெயர் அப்பர் தேவாரத்தில் அதிகமாக பயின்று வருகிறது. மேலும் இவ்வூர் பொ.ஆ 7 நூற்றாண்டிலும் இன்று போல் வயல் சூழ்ந்த வளமான ஒரு பகுதியாக குடவாசல் இருந்ததையும் திருஞானசம்பந்தர் தனது தேவாரபதிகங்களில்  படம் பிடித்து காட்டுகிறார்
 
”இழையார்ந்த கோவணமுங்
 
கீளும்எழிலார் உடையாகப்
 
பிழையாத சூலம்பெய்
 
தாடல்பாடல் பேணினீர்
 
குழையாரும் பைம்பொழிலும்
 
வயலுஞ்சூழ்ந்த குடவாயில்
 
விழவார்ந்த கோயிலே
 
கோயிலாக
 
மிக்கீரே”
 
                                                           இரண்டாம் திருமுறை 02.058 .5
 
மேலும் திருநாவுகரசர் தனது பதிகத்தில் அழுக்கு உடையணிந்த பெளத்தவரும், அழுக்கான சமணரும் இப்பகுதியில் (இருந்ததை) வாழ்ந்த செய்தியினையும் சுட்டி காட்டுகிறார்.
 
”தூசார்ந்த சாக்கியருந்
 
தூய்மையில்லாச் சமணரும்
 
ஏசார்ந்த புன்மொழிநீத்
 
தெழில்கொள்மாடக் குடவாயில்
 
ஆசாரஞ் செய்மறையோர்
 
அளவிற்குன்றா தடிபோற்றத்
 
                                           கோயிலாகச் சேர்ந்தீரே”
 
                                                     இரண்டாம் திருமுறை  02.058 .10
 
 
இப்பாடல் மூலம் குடவாசலில் சமணரும், பௌத்தவரும் வாழ்ந்த செய்தியினை அறியமுடிகிறது. மேலும் குடவாயில்(குடவாசல்) மாடக்கோயிலில் வழிபாடு நடத்தியவராக சமணர்கள் இருந்தார்கள் என்பது போன்ற தேவாரப்பாடல் விளக்கம் உள்ளது. என்று கருதத்தோன்றுகிறது. இப்பகுதி ஏழாம் நூற்றாண்டில் பல்லவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்ததை சேங்காழிப்புரத்தில் உள்ள பல்லவர் (நரசிம்மவர்மன் பொ.ஆ630-668)  முதலாம் நத்திவர்மன்) கால கல்வெட்டுகள் உறுதிச் செய்கின்றது.
 
இடைக்காலத்தில் சத்திரியசிகாமனி வளநாட்டு சேற்றூர் கூற்றத்திற்கு உள்ளிடங்கிய  குடவாயில் முதலாம் இராஜராஜன் (986-1014) காலத்தில் ஒரு பிரம்மதேய ஊராக இருந்ததை அறியமுடிகிறது. (தெ.இக.2-69) தற்போது குடவாசலில்  மேற்கு நோக்கி ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் மாடக் கோயில் கலைப்பாணியில் அமைந்திருக்கும் கோணேரீஸ்வர்  சைவ கோயிலின் இறைவனது பெயர்  மூன்றாம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில், 'குடவாயில் உடையார்' என்றும், இறைவி பெயர் 'பெரிய நாச்சியார்' என்றும், கோயிலின் பெயர் 'பெருந்திருக்கோயில்' (ந.க.தொ.3-457) என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
 
தற்போது நான்குக்கு  மேற்பட்ட பிராமணர் குடியேற்றங்களை பெற்ற இப்பகுதி.  இடைக்காலத்தில்  மிகப்பெரிய ஒரு நகரமாக இருந்திப்பதை அனுமானிக்க முடிகிறது. தோராயமாக இந்நகரம் 2 கி.மீ சதுரப்பரப்பில் உள்ளது தற்போதும் ஒரு சிறு நகரப்பதியாக தொடர்கிறது. {{refbegin|3}}
* [[விஷ்ணுபுரம் ஊராட்சி|விஷ்ணுபுரம்]]
* [[விஷ்ணுபுரம் ஊராட்சி|விஷ்ணுபுரம்]]
* [[விளாகம் ஊராட்சி|விளாகம்]]
* [[விளாகம் ஊராட்சி|விளாகம்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://wiki1.tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/69184" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி