சிலையெழுபது

சிலையெழுபது (Silaiyezhupathu) / செம்பொற்சிலை யெழுபது என்பது தமிழ் இலக்கியங்களில் ஒன்றாகும். சிற்றிலக்கியங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட இவ்விலக்கியம், சிலை என்ற பெயரிடப்பட்ட வில்லைக் குறிக்கிறது. வழிபடும் சிலை அல்ல. போரில் பயன்பட்ட, பல்வேறு சிறப்புகளை உடைய, செம்மை மிகுந்த, வில்லினை எழுபது பாடல்களில் விவரிக்கின்றனர். பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது என்று உயர்வு நவிற்சியாகக் கூறுவது, தமிழ் இலக்கியத்தில் வழமையாகும். எனவே, இச்சிலை என அழைக்கப்படும் வில்லை, எழுபது பாடல்களில் போற்றுவதால், இந்த இலக்கியத்தின் பெயர், செம்பொற்சிலை என்றே பெயரிட்டனர். 1896 ஆம் ஆண்டு பிரின்ஸ் ஆவ் வேல்ஸ் அச்சியந்திரசாலையில், ஆநூர்-எதிராஜமுதலியாரவர்களால் பதிப்பிக்கப்பட்ட நூலின் பெயரினைக் காணவும்.[1] இதற்கான சான்றாக, பெரும்பாலான பாடல் முடிவுகளில் இச்சொல் பயன்படுத்துவதைக் கொண்டு உணரலாம். காலப்போக்கில், மருவி சிலையெழுபது என்கின்றனர்.
இது கம்பரால் இயற்றப்பட்டது என்று கூறப்பட்டாலும், இது பிற்காலத்தில் கம்பரின் பெயரால் வேறொருவரால் இயற்றப்பட்டது எனும் கருத்து அறிஞரிடையே உள்ளது.[2] கலிங்கப் போர் வெற்றிக்குப் பிறகு, சோழருக்கு அடங்கிய சிற்றரசனாக பல்லவ நாட்டை ஆண்ட, முதற் குலோத்துங்க சோழனுடைய தளபதி (கி.பி.1070 - கி.பி.1118) கருணாகரத் தொண்டைமானின் குலமாகிய வன்னியரின் பெருமையைப் பற்றி கம்பர் பாடியது இந்நூல் எனப்படுகிறது. இதற்குப் பரிசாக தங்கப் பல்லக்கு, அணிகலன்கள் மற்றும் ஒரு செய்யுளுக்கு ஆயிரம் பொன் வீதம் பரிசும் கம்பருக்கு வழங்கப்பட்டதாக அறியப்படுகிறது.[3][4]
நூலின் சிறப்புகள்
சிலையெழுபது வன்னியர் குலத்தின் பெருமைகளையும், அவர்களின் வரலாற்றையும் எடுத்துரைக்கும் ஒரு நூல் ஆகும்
பாயிரம்
- கடவுள் துணை[5]
- கொச்சகம்.
- கொச்சகம்.
- கடவுள் வணக்கம்.
திருவளரும் வன்னியர்செஞ் சிலையெழுப தினைவிளம்ப
மருவளர்பைங் கடுக்கையும்வெண் மதியுமிலைந் தோன்வாமத்
துருவளரும் வரைமடந்தை யுவந்தளிப்பத் தோன்றிவரம்
தருவளஞ்செய் விகடசக்ரத் தந்திமுகன் றாடொமுவாம். (௧)[6]
- நூற்பெயரும் நூல்செய்தார் பெயரும் நுவலல்
- அறுசீர்க்கழி நெடிலாசிய விருத்தம்.
- அறுசீர்க்கழி நெடிலாசிய விருத்தம்.
- நூற்பெயரும், ஆக்கியோன் பெயரும்.
முந்தைநாள் வீரசம்பு முனிசெய்மா மகத்திற்போந்த
சந்ததியார் சீரோது கெனத்தகு முதியோர் கேட்ப
இந்தணி சடிலத்தெம்மா னிணைக்கழல் பரா அயிசைத்தான்
செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவாமிந்நூல். (௨)[7]
- நூலரங்கேறிய கச்சித்தலச் சிறப்பு
- சம்புகோத்திரச் சிறப்பு
- குலோற்பவச் சிறப்பு
- வன்னியர் குலச் சிறப்பு
- குலத்தலைவர் படைச் சிறப்பு
நூல்
- விசயதசமி நாட்கோடற் சிறப்பு
- வில் வலிமையால் வாழும் உலகம்
- வன்னியர் ஏந்திய வில்லே, வில்
- விற்போரில் மகிழ்பவர்கள்
- வில்லின் வளைவுகள்
- விற்பிடித்தல் சிறப்பு
- வில்லால் விளைந்த நன்மை
- வில்மணிச் சிறப்பு
- நாணின் சிறப்பு
- வில்லேந்துதற் சிறப்பு
- உலகம் செழிப்பது வில்லாலே
- விற்போர் சிறப்பு
- படை எழுந்தால் அரக்கர் அழிவர்
- வில்வளைத்தற் சிறப்பு
- நாணேற்றுதற் சிறப்பு
- குணத்தொனிச் சிறப்பு
- அம்பறாத்தூணிச் சிறப்பு
- பிரமாத்திரச் சிறப்பு
- நாராயணாத்திறச் சிறப்பு
- பாசுபதாத்திரச் சிறப்பு
- அபிமந்திரித்தற் சிறப்பு
- நாணிறங்குதற் சிறப்பு
- வீரவாட் சிறப்பு
- வேலேந்திய காலாட்படைச் சிறப்பு
- யானைப்படைச் சிறப்பு
- குதிரைப்படைச் சிறப்பு
- தேர்ப்படைச் சிறப்பு
- பிறர் தேரும் இவர் தேரும்
- அகழியின் சிறப்பு
- அரண் சிறப்பு
- கொடிச் சிறப்பு
- அரசாட்சி மண்டபச் சிறப்பு
- சிங்காதனத்திருத்தற் சிறப்பு
- டிதரித்தற் சிறப்பு
- மகுடங்கள் நிலைப்பது இவர் மகுடத்தாலே
- புயகேயூர கிரீடச் சிறப்பு
- குடைச் சிறப்பு
- செங்கோற் சிறப்பு
- செங்கோல்வண்மைச் சிறப்பு
- செங்கோல்நடத்தற் சிறப்பு
- அறநெறியின் சிறப்பு
- ஆக்கினைச் சக்கரச் சிறப்பு
- தொழில்நெறி பிறழாமைச் சிறப்பு
- முத்திரைமோதிரச் சிறப்பு
- துட்டநிக்கிரகச் சிறப்பு
- வாயில்மேவுதற் சிறப்பு
- தொழுதல் முதலிய சிறப்பு
- செல்வாக்கின் சிறப்பு
- வன்னியரின் புகழ்
- திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்றோர்
- மாசு அகற்றற் சிறப்பு
- எல்லாவிதத்திலும் சிறந்தோர்
- குணச் சிறப்பு
- இதயவண்மைச் சிறப்பு
- இராஜசமூகச் சிறப்பு
- பதியிருத்தற் சிறப்பு
- மன்னர்சூழ்தற் சிறப்பு
- மொழிதவறாமைச் சிறப்பு
- சாந்தம் முதலிய பண்புகளாற் சிறப்பு
- கொடைவளத்தின் சிறப்பு
- வள்ளல்தன்மைச் சிறப்பு
- அடுத்தவர்க்குத் தாழ்வின்றெனல் சிறப்பு
- உமை முதலியோரின் அருள்பெற்றோரெனற் சிறப்பு
- அஷ்ட ஐசுவரியச் சிறப்பு
- தசாங்கச் சிறப்பு
- அரசின் சிறப்பு
- வில்லின் புகழ்கூறுதற் சிறப்பு
- பரிசுதரற் சிறப்பு
- இதுமுதல் மூன்று கவிகள் - வாழ்த்துச் சிறப்பு (69, 70, 71)
இறுதிப்பாடல்
- கொச்சகம்.
- இதுவுமது.
பூவாழி மறைவாழி புகல்செம்பொற் சிலைவாழி
பாவாழி சுடர்வாழி பகர்சம்பு முனிவாழி
மாவாழி யகளங்க வனியர்பெருந் தமர்வாழி
கோவாழியிவர்தனிச்செங் கோல்வாழி வாழியவே,
- செம்பொற்சிலையெழுபது
- முற்றிற்று.
- செம்பொற்சிலையெழுபது
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ [https://w.wiki/GJbB விக்கிமூலத்தின் செம்பொற்சிலை யெழுபது, 1896 நூல் .
- ↑ முனைவர் தெ. ஞானசுந்தரம், மறவாதியர் யார்? மலட்டு ஆ எது?, தமிழ்மணி, தினமணி, 11, சனவரி, 2015
- ↑ துரை ராசாராம் (1999). கம்பனின் சிற்றிலக்கியங்கள். முல்லை நிலையம். p. 319.
- ↑ "சிலையெழுபது - Silaiyelupathu - கம்பர் நூல்கள் - Kambar Books - சென்னை நூலகம் - ChennaiLibrary.com". சென்னை நூலகம். Retrieved 2022-08-12.
- ↑ ஓலைச்சுவடியிலும், இதுவரை கிடைத்த பழைய அச்சு நூல்களிலும் கடவுள் துணை என்றே சொல்லை பயன்படுத்தப்படுகிறது. தமிழ் இலக்கியங்களில் இடைச்செருகல் நிறைய உள்ளதென ஆய்வறிஞர்கள் உள்ளனர். 1896 ஆண்டு பதிப்பித்த நூலில் முதல் அட்டையில் கடவுள் துணை என்றே உள்ளது. அந்நூலின் மறுபதிப்பில் கணபதி துணை என்ற சொல் இடைச்செருகலாக அமைத்து மற்றொரு முதல் அட்டையை அமைத்துள்ளனர். காகிதத்தின் தரம் கொண்டு இதனை உணரலாம். ஆர்வமுள்ளவர் பொதுவகத்தில் இணைக்கப்பட்ட மூல ஆவணத்தில் இதனை அறிய இயலும்.
- ↑ இங்குள்ளது தமிழ் உயிர்மெய் எழுத்து க அல்ல. இது தமிழ் எண் குறிமுறை 1 என்பதாகும். ஒருங்குறியில் இரண்டும் ஒன்று போலவே உள்ளது. ஆனால் பழைய அச்சு நூல்களில் க(உயிர்மெய்) என்பதன் இறுதிசுழி ஒட்டாமல், உள் பக்கம் கீ என்பதில் வளைந்து உள்ளது போல, உள்பக்கம் வளைந்து உள்ளது.
- ↑ இது தமிழ் எண்முறை குறியீடான 2 என்பதாகும். பிள்ளையார் சுழி எனக்கூறப்படுவதோ அல்லது உ(உயிர் மெய்) அல்ல.