சிவந்த மலர்
சிவந்த மலர் (Sivantha Malar) 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அதிரடியான பரபரப்பூட்டும் இத்திரைப்படத்தை சசிமோகன் இயக்கினார். செல்வாவின் எழுத்திலும், கே. ஆர். கங்காதரன் தயாரிப்பிலும் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்குமார், கௌதமி, விஜயகுமார், ஸ்ரீவித்யா ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1992 மார்ச் 6 அன்று வெளியிடப்பட்டது.
| சிவந்த மலர் | |
|---|---|
| இயக்கம் | சசி மோகன் |
| தயாரிப்பு | கே. ஆர். கங்காதரன் |
| கதை | செல்வா |
| இசை | மரகதமணி |
| நடிப்பு | |
| ஒளிப்பதிவு | வி. இரமேஷ் பாபு |
| படத்தொகுப்பு | எம். வி. நடராஜன் |
| கலையகம் | கே. ஆர். ஜி. இண்டர்நேசனல் |
| வெளியீடு | 6 மார்ச் 1992 |
| ஓட்டம் | 93 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
நடிகர், நடிகையர்
- சரத்குமார் - ஆய்வாளர் விஜய்
- கௌதமி - பிரபா
- விஜயகுமார்
- ஸ்ரீவித்யா
- கவுண்டமணி - மாறன்
- செந்தில்
- டெல்லி கணேஷ் - அமைச்சர் சிவலிங்கம்
- தலைவாசல் விஜய்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு மரகதமணி இசையமைத்திருந்தார்.[1] பாடல் வரிகளைக் கவிஞர் புலமைப்பித்தன் எழுதியிருந்தார்.
- "எதுவரை போகும் ஆகாயம்" – எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
- "ஒரு நிமிசம் அது போதுமே" – கே. எஸ். சித்ரா
- "எரியுதே இதென்ன நிலவு நிலவு." – எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
- "ஒரு பாட்டு வந்துச்சா சுதி" – எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா
மேற்கோள்கள்
- ↑ Tamil Old Hit Jukebox Sivandamalar Movie | Sarath Kumar, Gautami | Maragadamani | Pulavar P. T-Series Tamil. 6 June 2020. Archived from the original on 15 November 2023. Retrieved 19 June 2020 – via யூடியூப்.