சுரமா பதி
சுரமா பாதி (Surama Padhy)(பிறப்பு திசம்பர் 29,1960) ஒடிசா சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் நயாகர் மாவட்டத்தில் உள்ள இரன்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ளார். இவர் தற்போது ஒடிசா சட்டமன்றத்தின் சபாநாயகராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்தவர். இவர் 2024 ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.[2][3]
சுரமா பதி | |
|---|---|
| சபாநாயகர்-ஒடிசா சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 20 சூன் 2024 | |
| துணை | பவானி சங்கர் போய் |
| முன்னையவர் | பிரமிளா மாலிக் |
| கூட்டுறவுத்துறை அமைச்சர் ஒடிசா அரசு | |
| பதவியில் 18 மே 2004 – 9 மார்ச்சு 2009 | |
| முன்னையவர் | அரவிந்த தாலி |
| பின்னவர் | நவீன் பட்நாய்க் |
| உறுப்பினர்-ஒடிசாவின் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 2024 | |
| முன்னையவர் | சத்யநாராயண பிரதான் |
| தொகுதி | இரன்பூர் |
| பதவியில் 2004–2009 | |
| முன்னையவர் | இராமகாந்த மிசுரா |
| பின்னவர் | சத்யநாராயண பிரதான் |
| தொகுதி | இரன்பூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 29 திசம்பர் 1960 |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| துணைவர் | பிபின் பிகாரி பதி |
| பெற்றோர்s |
|
| கல்வி | முதுகலை இளங்கலைச் சட்டம் |
| முன்னாள் கல்லூரி | உத்கல் பல்கலைக்கழகம் |
| தொழில் | |
| மூலம்: [1] | |
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
பதி ஒடிசா மாநிலத்தில் இரன்பூரைச் சேர்ந்தவர். இவர் பட்டயக் கணக்காளரான பிபின் பிகாரி பதியை மணந்தார். இவர் 1982-ஆம் ஆண்டில் உத்கல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இராவென்சா கல்லூரியில் தனது முதுகலை கலை பட்டத்தினைப் பெற்றார்.[4]
அரசியல்
பதி 2024 ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் இரன்பூர் சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பிஜு ஜனதா தளத்தின் சத்யநாராயணன் பிரதானை 15,544 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5][6] முன்னதாக, இவர் இரன்பூரில் மூன்று முறை போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளார். கடைசியாக 2019 ஒடிசா சட்டமன்ற தேர்தலில் பிரதானிடம் 4,251 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[7][8] 2004ஆம் ஆண்டு நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம்-பாஜக கூட்டணி அரசாங்கத்தில் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.[8]
மேற்கோள்கள்
- ↑ "BJP's Surama Padhy will be next Odisha Assembly Speaker | Central India's Premier English Daily" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-06-19. Retrieved 2024-06-19.
- ↑ "Surama Padhy , BJP Election Results LIVE: Latest Updates On Surama Padhy , Lok Sabha Constituency Seat - NDTV.com". www.ndtv.com. Retrieved 2024-06-05.
- ↑ "Ranpur, Odisha Assembly Election Results 2024 Highlights: BJP's Surama Padhy wins Ranpur with 81439 votes". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ "Surama Padhy(Bharatiya Janata Party(BJP)):Constituency- RANPUR(NAYAGARH) - Affidavit Information of Candidate". www.myneta.info. Retrieved 2024-06-05.
- ↑ "Ranpur, Odisha Assembly Election Results 2024 Highlights: Ranpur सीट पर BJP ने हासिल की जीत". आज तक (in இந்தி). 2024-06-04. Retrieved 2024-06-05.
- ↑ "Ranpur Constituency Election Results 2024: Ranpur Assembly Seat Details, MLA Candidates & Winner". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
- ↑ "Surama Padhy, BJP Candidate from Ranpur Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News". www.news18.com (in ஆங்கிலம்). Retrieved 2024-06-05.
- ↑ 8.0 8.1 Chaki, Bijay (2024-06-13). "Odisha: Not finding place in Majhi cabinet, Surama Padhy likely to be Speaker". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2024-06-19.