சூனாம்பேடு (Chunampet) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர் வட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது சென்னையிலிருந்து 99 கிலோமீட்டர் தொலைவிலும், மதுராந்தகத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் மதுராந்தகம்-மரக்காணம் சாலையில் அமைந்துள்ளது. காலனித்துவ காலத்தில் இது சூனாம்பேடு ஜமீந்தாரின் இடமாக இருந்தது. இது பக்கிங்காம் கால்வாயின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது.

சூனாம்பேடு 19ஆம் நூற்றாண்டில் கிராதமஞ்சேசுவரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஓர் இந்து கோயிலுக்கு பிரபலமானது.[1] இந்தக் கோயில் சமீப காலம் வரை இடிபாடுகளிலிருந்தது. மேலும் சூனாம்பேடுவின் முன்னாள் ஜமீன்தாரான அருணாச்சல முதலியார், அவரது சந்ததியினரால் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. கி.பி 1760இல் ஆற்காடு நவாப் தோசுதே அலி கானால் கட்டப்பட்ட ஒரு பழைய மசூதியும் இங்கு உள்ளது.[2]

சூனாம்பேடு வங்காள விரிகுடா கடற்கரையிலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஏழு மைல்களுக்கு மேல் நீண்டு கிடக்கும் உப்புப் பாறைகளால் சூழப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  1. Temples of Tamilnad, Pg 209
  2. Temples of Tamilnad, Pg xviii
  3. Routes in the Madras presidency. Government Press. 1879. p. 487.
"https://tamilar.wiki/w/index.php?title=சூனாம்பேடு&oldid=367765" இலிருந்து மீள்விக்கப்பட்டது