சோடியைட்டு
சோடியைட்டு (Soddyite) என்பது (UO2)2SiO4•2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். சோடியைட்டு யுரேனியத்தின் ஒரு கனிமமாகும். இது மஞ்சள் நிற படிகங்களைக் கொண்டுள்ளது. பொதுவாக ஆக்சிசனேற்றப்பட்ட யுரேனியம் தாதுக்களில் கியூரைட்டுடன் கலக்கப்படுகிறது. பிரிட்டிசு கதிரியக்க வேதியியலாளர் மற்றும் இயற்பியலாளர் பிரடெரிக் சோடியின் (1877–1956) நினைவாக இக்கனிமத்திற்கு சோடியைட்டு எனப் பெயரிடப்பட்டது
| சோடியைட்டு Soddyite | |
|---|---|
| படிமம்:Soddyite-201039.jpg காங்கோ மக்களாட்சிக் குடியரசின் சுவாம்போவிலிருந்து கிடைத்த மஞ்சள் நிற சோடியைட்டு படிகங்களைக் கொண்ட ஒரு பாறைத் துண்டு. | |
| பொதுவானாவை | |
| வகை | நெசோசிலிக்கேட்டு |
| வேதி வாய்பாடு | (UO2)2SiO4·2H2O |
| இனங்காணல் | |
| நிறம் | வைக்கோல் மஞ்சள் முதல் மஞ்சள் |
| படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
| பிளப்பு | {001} இல் சரிபிளவு, தெளிவு {111} |
| மிளிர்வு | பளபளக்கும், மங்கலாகவும் இருக்கும் |
| கீற்றுவண்ணம் | மஞ்சள் |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும் , ஒளி கசியும், ஒளிபுகாது |
| அடர்த்தி | 4.627 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.650 - 1.654, nβ = 1.685, nγ = 1.699 - 1.715 |
| இரட்டை ஒளிவிலகல் | 0.049 - 0.061 |
| நிறப்பிரிகை | பலவீனமானது |
| புறவூதா ஒளிர்தல் | மெல்லிய ஆரஞ்சு மஞ்சள் |
| பிற சிறப்பியல்புகள் | |
பன்னாட்டு கனிமவியல் சங்கம் சோடியைட்டு கனிமத்தை Sod[1]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
காங்கோ சனநாயகக் குடியரசின் ஆட்-கட்டங்கா மாகாணத்தில் உள்ள சின்கோலோப்வே யுரேனியம் சுரங்கத்தின் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 1922 முதல் சோடைட்டு ஒரு செல்லுபடியாகும் இனமாக இருந்து வருகிறது.[2][3][4]
மேற்கோள்கள்
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
- ↑ Webmineral data for soddyite
- ↑ Mindat information page for Soddyite
- ↑ Handbook of Mineralogy