சோரெங்
சோரேங் (Soreng), வடகிழக்கு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் தெற்கில் உள்ள சோரெங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இந்நகரம், மாநிலத் தலைநகரான கேங்டாக்கிற்கு தென்மேற்கே 100 கிலோமீட்டர் தொலைவிலும்: மேற்கு வங்காளத்தின் டார்ஜீலிங் நகரத்திற்கு வடமேற்கே 42.6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 4,314 அடி உயரத்தில் இமயமலையில் உள்ளது இந்நகரம் சிக்கிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
சோரெங் | |
|---|---|
மாவட்டடத் தலைமையிடம் & பேரூராட்சி | |
வடகிழக்கு இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் சோரெங்கின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 27°10′N 88°12′E / 27.17°N 88.20°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | சிக்கிம் |
| மாவட்டம் | சோரெங் மாவட்டம் |
| அரசு | |
| • வகை | பேரூராட்சி |
| • நிர்வாகம் | சோரெங் பேரூராட்சி மன்றம் |
| மக்கள்தொகை (2011)[1] | |
| • மொத்தம் | 3,818 |
| மொழிகள்[2][3] | |
| • அலுவல் மொழி | ஆங்கிலம் |
| • வட்டார மொழிகள் | நேபாளி மொழி, சிக்கிமிய மொழி, குரூங் மொழி, லிம்பு மொழி, நேவாரி மொழி தமாங் மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 737121 |
| வாகனப் பதிவு | SK 06 |
| இணையதளம் | https://soreng.nic.in/ |
மக்கள் தொகை பரம்பல்
2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 887 குடியிருப்புகள் கொண்ட சொரெங் பேரூராட்சியின் மக்கள் தொகை 3818 ஆகும். அதில் 1937 ஆண்கள் மற்றும் 1881 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 100 மற்றும் 1,490 பேர்கள் உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.64% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.39% ஆக உள்ளது.[4]இந்நகரத்தில் வட்டார மொழிகளான நேபாளி மொழி, சிக்கிமிய மொழி, குரூங் மொழி, லிம்பு மொழி, நேவாரி மொழி தமாங் மொழிகள் பேசப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Soreng Population". censusindia.gov.in. Retrieved 16 June 2019.
- ↑ "1977 Sikkim government gazette" (PDF). sikkim.gov.in (in ஆங்கிலம்). Governor of Sikkim. p. 188. Archived from the original (PDF) on 22 July 2018. Retrieved 28 May 2019.
- ↑ "50th Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). 16 July 2014. p. 109. Archived from the original (PDF) on 2 January 2018. Retrieved 28 May 2019.
- ↑ Soreng Population - West Sikkim, Sikkim